12/10/2025
யாழ் குடாவை கிட்டண்ணா தலைமையிலான பு*லி*க*ள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம் அது. அவ்வப்போது சிங்களப் படைகள் பெருமெடுப்பில் முகாம்களை விட்டு வெளியேற முயற்சிப்பதுண்டு. பெரும்பாலும் யாழ் அணிகளே அவைகளை மீண்டும் முகாமிற்குள் விரட்டிவிடுவார்கள். சில வேளைகளில் அது கடினமாகிவிடும்.
அப்போது கிட்டண்ணா தொடர்பு கொள்ளும் நபர் விக்டர். 'மன்னார் ரீம்' வருதாம் என்ற செய்தி மக்களுக்கும் போ*ரா*ளிகளுக்கும் புதுத் தெம்பைக் கொடுக்கும்.
வோக்கி தொடர்பை ஒட்டுக் கேட்ட சிங்களப் படைகள் பெரும்பாலும் 'மன்னார் ரீம்' வரும் முன்பே பின் வாங்கி விடுவார்கள். ஏனென்றால் விக்டர் அண்ணாவிடம் 'வாங்கிக் கட்டிய' பட்டறிவின் விளைவு அது.
💟 த*மி*ழீழ படைத்துறை பொற்கால நினைவுகள்
💟த*மி*ழீழ படைத்துறை மேதை லெ*ப் கே*ணல் வி*க்டர்.