29/10/2025
சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஜாக் மா கூறுகின்றார்:
’’நான் மூன்று முறை கல்லூரியில் தோல்வியடைந்தேன். 30 முறை வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் எப்போதும் நிராகரிக்கப்பட்டேன்.
முதன்முதலில் சீனாவிற்கு KFC வந்தபோது 24 விண்ணப்பதாரர்கள் இருந்தனர். நான் மட்டுமே நிராகரிக்கப்பட்டேன்.
காவல்துறையில் சேர விரும்பினேன். ஐந்து விண்ணப்பதாரர்களில் எனது விண்ணப்பம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 10 முறை விண்ணப்பித்தேன். ஒவ்வொரு முறையும் நிராகரிப்பே மிஞ்சியது”.
ஆனால் இன்று, அலிபாபா எனும் கம்பெனியின் நிறுவனர். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி 40 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் 19-வது பணக்காரர் மற்றும் சீனாவின் மிகப்பெரும் பணக்காரர்.
அவர் கூறுகின்றார்: ’’நீங்கள் ஒருமுறை தோல்வியடைந்தால் முயற்சியை கைவிடாதீர்கள். நல்ல விஷயங்கள் அவ்வளவு விரைவாக வராது. விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் தேவை.
நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களை மறுதலிக்கலாம். ஆயினும் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்”.