உலகத்தமிழ் மங்கையர்மலர்

உலகத்தமிழ் மங்கையர்மலர் உலகத்தமிழ் மங்கையர் மலர் ... மங்கையர்களுக்கு அவசியமான உதவிகரமான பதிவுகளையும் பல தகவல்களையும்
(1)

24/09/2025
♥இன்றைய ராசி பலன்24-09-2025- புதன்கிழமை♥மேஷம்விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையு...
23/09/2025

♥இன்றைய ராசி பலன்
24-09-2025- புதன்கிழமை

♥மேஷம்
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

♥ரிஷபம்
வழக்கு சாதகமாக தீர்ப்பு வரும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.தொட்டது துலங்கும் நாள்.

♥மிதுனம்
பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

♥கடகம்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளியூரிலிருந்து வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

♥சிம்மம்
உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

♥கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்

♥துலாம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களைப் பற்றி சிலர் தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

♥விருச்சிகம்
விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

♥தனுசு
ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.

♥மகரம்
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

♥கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்மறை சிந்தனைகள் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

♥மீனம்
சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப் ஆகபோய் முடியும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

♥இன்றைய ராசி பலன்23-09-2025- செவ்வாய்க்கிழமை♥மேஷம்பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உறவினர் நண...
22/09/2025

♥இன்றைய ராசி பலன்
23-09-2025- செவ்வாய்க்கிழமை

♥மேஷம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பயணங்கள்சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

♥ரிஷபம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

♥மிதுனம்
எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிடைக்கும் நாள்.

♥கடகம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில்ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

♥சிம்மம்
கணவன் மனைவி அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுக் கூடும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்கு
வீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

♥கன்னி
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

♥துலாம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

♥விருச்சிகம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

♥தனுசு
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

♥மகரம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

♥கும்பம்
சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நன்றி மறந்தவர்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பொறுமைத் தேவைப்படும் நாள்

♥மீனம்
தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

Adresse

Quai Des Cigogn
Mulhouse
68200

Téléphone

+33645249679

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque உலகத்தமிழ் மங்கையர்மலர் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à உலகத்தமிழ் மங்கையர்மலர்:

Partager

Type