தாய் மண்.கொம்

தாய் மண்.கொம் பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண்

Dear Fans...

Please Like Comment and Share Our Posts with others

Your's Faithfully

"Thanking You"

தாய் மண்.கொம்

28 மாவட்டங்களிற்கு காட்டுத்தீ அபாயம் – செஞ்சிவப்பு எச்சரிக்கை!காட்டுத்தீ ஏற்படும் "உயர்" அபாயத்தினால் Météo-France, 28 ம...
15/08/2025

28 மாவட்டங்களிற்கு காட்டுத்தீ அபாயம் – செஞ்சிவப்பு எச்சரிக்கை!

காட்டுத்தீ ஏற்படும் "உயர்" அபாயத்தினால் Météo-France, 28 மாவட்டங்களிற்கு செஞ்சிவப்பு எச்சரிக்கை வழங்கியுள்ளது.

Charente மாகாணத்தில் 200 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை சுட்டெரித்த தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளாலும், மத்திய மற்றும் தென் பிரான்ஸ் பகுதிகள் இன்னும் அதிக அபாயத்தில் உள்ளன.
இதில் Rhône, Ardèche, Drôme, Aude ஆகிய மாகாணங்கள் வெப்ப அலைக்கான மிக உயர்ந்த எச்சரிக்கையிலும் உள்ளன.

வானிலை நிபுணர்கள், கோடை காலத்தின் சாதாரண நிலையை விட இந்த ஆண்டு வறட்சியும் சூடும் அதிகமாக இருப்பதால் தீ பரவல் அபாயம் மிக உயர்ந்துள்ளதாக எச்சரிக்கின்றனர்.

பாதுகாப்பு வழிமுறைகள்

பார்பிக்யூ செய்வது என்றால், வீட்டின் வளாகத்திலேயே, புல்வெளி மற்றும் மரங்களிலிருந்து தூரத்தில் செய்ய வேண்டும்.
சிகரெட் மீதிகளை எப்போதும் சாம்பல் தொட்டியில் போட வேண்டும்.

காடுகளில் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உலர்ந்த புல் மற்றும் புல்வெளி அருகே வேலை செய்தால், அருகில் தீ அணைப்பு கருவி வைத்திருக்க வேண்டும்.

எரிவாயு, மரக்கட்டைகள் போன்ற எரியும் பொருட்களை வீட்டிலிருந்து தூரத்தில் வைக்க வேண்டும்.

தீ பரவல் ஏற்பட்டால், 112, 18 அல்லது 114 (கேள்வித் தடை உள்ளவர்களுக்கு) என்ற எண்களுக்கு அழைத்து தகவல் அளிக்க வேண்டும்.

வாகனத்துக்குள் தங்காமல், பாதுகாப்பான, துப்புரவு செய்யப்பட்ட வீடுகளில் தஞ்சம் புக வேண்டும், மேலும் காவற்துறையினர் அல்லது நகரபிதா வழங்கும் அறிவுரைகளுக்கு இணங்க நடக்க வேண்டும்.

பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்.. கணவர் கைது!!மனைவியை கத்தியால் குத்திய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்...
10/08/2025

பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்.. கணவர் கைது!!

மனைவியை கத்தியால் குத்திய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Nanterre (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் நேற்று ஓகஸ்ட் 9, சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் ஒன்றே கத்திக்குத்தில் சென்று முடிந்ததாகவும், பேப்பர் வெட்டும் ப்ளேட் கத்தி ஒன்றின் மூலம் மனைவியின் கழுத்தை வெட்டியுள்ளார் எனவும், அதிஷ்ட்டவசமாக உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய கணவர் அருகில் உள்ள André-Malraux பூங்காவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரது மனைவி 50 வயதுடையவர் எனவும் அவர் Franco-British மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

05/08/2025
01/08/2025
பிரான்ஸ் காசா பாலஸ்தீனர்களை வரவேற்காது- வெளிவிகார அமைச்சர் !!❝ஒரு 25 வயது காசா மாணவியால் ஏற்பட்ட யூத விரோத சமூக ஊடக பதிவ...
01/08/2025

பிரான்ஸ் காசா பாலஸ்தீனர்களை வரவேற்காது- வெளிவிகார அமைச்சர் !!

❝ஒரு 25 வயது காசா மாணவியால் ஏற்பட்ட யூத விரோத சமூக ஊடக பதிவுகள் தொடர்பான விவகாரம் தெளிவாக விசாரிக்கப்படும் வரை, புதிய பாலஸ்தீனர்களை காசா பகுதியிலிருந்து பிரான்சு வரவேற்காது.❞ என வெளிவிகார அமைச்சர் ஜோன்-நொயல் பரோ (Jean-Noël Barrot) தெரிவித்துள்ளார்

நடந்தது என்ன?

நூர் அத்தல்லாஹ் என்ற மாணவி 2025 ஓகஸ்ட் 11 அன்று பிரான்சுக்கு வந்தார்.

அவர் Sciences Po Lille எனும் உயர்கல்வி நிறுவனத்தில் சேர திட்டமிடப்பட்டிருந்தார்.

ஆனால், இந்த மாணவி, சமூக ஊடகங்களில் யூதர்களை கொல்ல அழைப்பு விடுக்கும் பதிவுகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் பதிவுளைப் பிரச்pனைகளின் பின்னர் அழித்திருந்தாலும் அவை மீளக் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனால் அவர் கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதிகாரபூர்வ நீதிமன்ற விசாரணை பயங்கரவாதத்தைப் புகழ்தல், மனிதநேய எதிரான குற்றங்களைப் புகழ்தல் போன்ற குற்றங்களிற்காக ஆரம்பிக்கப்பட்டது. நிர்வாக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'இந்த மாணவியை பிரான்சில் வரவேற்க வழிவகுத்த கண்காணிப்புப் பிழைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். அந்த வரம்புகள் திருத்தப்படுவதாகவும், இனி யாரும் காசாவிலிருந்து வர முடியாது' எனவும் வெளிவிவகார அமைச்சர் Jean-Noël Barrot தெரிவித்துள்ளார்.

பிரான்சுக்குள் வந்த அனைத்து காசா அகதிகளும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த மாணவி பிரான்சில் தங்கவேக்கூடாது – ஆனால், போரில் சிக்கிய காசாவுக்கு திருப்பி அனுப்பலாமா என்பதில் இன்னும் தீர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் சமூக ஊடகக் கருத்துகள் உண்மை என உறுதி செய்யப்பட்டது. அந்த மாணவி ஜெருசலேமில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் பரிந்துரை மூலம் இந்தப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.

காசா மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கும் என்பது ஒரு வருடத்தின் முந்தைய திட்டம்.

❝பிரான்சில் வரவேற்கப்படும் நபர்களின் பின்புலம் பற்றி நிரந்தர கண்காணிப்பு அவசியம். பிழைகள் ஏற்பட்டால், அதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக இருக்க வேண்டும்❞ எனப் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம், பிரான்சு – காசா இடையிலான அகதிகள் வரவேற்பு அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் காணப்படும் வெறுப்புப் பேச்சின் தாக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது

பதப்படுத்தப்பட்ட கேரட் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்கால் உயிரிழந்த மூதாட்டி!!Maine-et-Loire ) பகுதியில் 78 வயதான ஒரு பெண், ...
31/07/2025

பதப்படுத்தப்பட்ட கேரட் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்கால் உயிரிழந்த மூதாட்டி!!
Maine-et-Loire ) பகுதியில் 78 வயதான ஒரு பெண், வீட்டில் தயாரித்த கேரட் கேக் சாப்பிட்டதன் பின்னர் போட்டுலிசம் (Botulisme) தொற்றால் ஜூலை 29 திகதி இரவில் உயிரிழந்துள்ளார்.

இவரும் ஐந்து நண்பர்களும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் வீட்டில் செய்த பதப்படுத்தப் கேரட் கேக்கை உண்டிருந்தனர்.

ஆறு பேரில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் மருத்துவமனையில் உள்ளார், மற்ற நால்வரும் குணமடைந்து வருகிறார்கள். உயிரிழந்த நபரே கேக்கை தயாரித்தவர்; ஒரு பேக்கில் மட்டும் தொற்று இருந்தது என சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போட்டுலிசம் (Botulisme) என்பது Clostridium botulinum எனும் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவை உண்டதால் ஏற்படும் அபாயகரமான நோயாகும். இது வாந்தி, வயிற்றுவலி, வாய் உலர்வு, பார்வை மங்கல் மற்றும் நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆகவே பதபடுத்தப்பட்ட உணவுகளில் சந்தேகம் இருந்தால், அதை உடனே குப்பையில் போடுதல் மற்றும் உண்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

30/07/2025
கஞ்சா உட்கொண்ட 9 மாதக்குழந்தை: பெற்றோர் காவலில்!!யவேலின் (Mantes-la-Ville/Yvelines) மாவட்டத்தில் 9 மாதக் குழந்தை ஒருவருக...
30/07/2025

கஞ்சா உட்கொண்ட 9 மாதக்குழந்தை: பெற்றோர் காவலில்!!

யவேலின் (Mantes-la-Ville/Yvelines) மாவட்டத்தில் 9 மாதக் குழந்தை ஒருவருக்கு கஞ்சா உட்கொண்டதால் வலிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூலை 14ஆம் திகதி, குழந்தை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுநீர் பரிசோதனையில் கஞ்சா உட்கொண்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

குழந்தை உடனடியாக குழந்தைகள் நலத்துறையால் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இது நெருக்கமான தொடர்பு, புகை அல்லது தாய்ப்பால் ஊட்டலின் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பெற்றோர், அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த சட்டவிரோத குடியிருப்பாளர்கள். தந்தை மரபாக கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளவர்; அவரது சட்ட பையிலிருந்து கஞ்சா உருண்டை விழுந்து குழந்தை அதை நக்கியிருக்கலாம் என சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

24 மணி நேர காவலுக்குப் பிறகு, பெற்றோர் விடுவிக்கப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு பிரான்ஸை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளணது. தந்தைக்கு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆஜராக வேண்டியுள்ளது.

25/07/2025
22/07/2025

Adresse

Vitry-sur-Seine
94400

Téléphone

+33631875115

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque தாய் மண்.கொம் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à தாய் மண்.கொம்:

Partager

Our story

தாய்மண்.கொம்!