23/08/2026
சமீபமாக முகில் எழுதிய உணவு சரித்திரம் பாகம் 1 , புத்தகம் படித்து கொண்டு இருக்கிறேன் அதில் சாக்லேட் பற்றிய குறிப்பில் ஊட்டியின் “கிங் ஸ்டார்” சாக்லேட்டின் கதை உள்ளது. உலகளாவிய ப்ரண்ட் ஆக இருக்கும் இந்த சாக்லேட் கதை பற்றிய குறிப்புகள் நன்றாக இருக்கிறது
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், கோடைக்கால வெப்பத்திலிருந்து தப்பிக்க பிரிட்டிஷார் ஊட்டிக்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கு சாக்லேட்டின் மீது இருந்த ஆர்வத்தால், ஐரோப்பிய நாடுகளிலிருந்து சாக்லேட்டுகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
ஆனால் இந்தியாவின் வெப்பமான காலநிலையில் சாக்லேட்டுகள் எளிதில் உருகின.
அப்போது D.R. Davis என்பவர் ஊட்டியின் குளிர்ச்சியான காலநிலையை பயன்படுத்தி, அங்கேயே சாக்லேட் தயாரிக்க முடிவு செய்தார். அவர் “Davis Confectionaries” என்ற பெயரில் சாக்லேட் தொழிற்சாலையையும் விற்பனை நிலையத்தையும் தொடங்கினார்.
பின்னர் Thambuswamy என்பவர் D.R. Davis அவர்களிடம் இருந்து சாக்லேட் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டார். பாரம்பரிய செய்முறை, கலவை, வெட்டுதல், வடிவமைத்தல் என சாக்லேட் தயாரிப்பின் பல நுணுக்கங்களையும் கற்றார்.
பின்னர் 1942ஆம் ஆண்டு “The King Star High Class English Confectionary” என்ற பெயரில் தனது சொந்த தொழிலைத் தொடங்கினார்.
இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின்னரும், இந்த தொழில் குடும்பத்தின் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து வந்தது.
இன்று King Star-ல் 40க்கும் மேற்பட்ட வகையான சாக்லேட்டுகள் இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. பால், Cocoa Butter, Cocoa Powder/Liquor, Vanilla, சர்க்கரை, உலர் பழங்கள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி பல்வேறு சுவைகள் தயாரிக்கப்படுகின்றன.