
28/08/2025
முல்லைத்தீவு விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டல் கிறிசலிஸ் நிறுவனமும் இணைந்து நடாத்திய விவசாயிகள் வயல் வியாபார பாடசாலை குழுக்களின் சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றிய நிலக்கடலை செய்கையின் வயல் விழா நிகழ்வானது தண்டுவான் விவசாய விரிவாக்கல் பிரிவில் பழம்பாசி கிராமத்தில் 25-08-2025 பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 6 மணி வரை நடைபெற்றது.
இதில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் கிருபவதி சிவதீபன் உதவி விவசாய பணிப்பாளர் மேரிஆஞ்சலா லக்சன் பாடவிதான உத்தியோகத்தர் விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்கள்(மாங்குளம்,தண்டுவான்)
கிறிசலிஸ் நிறுவன வட மாகாண பணிப்பாளர். ம. பிரபாகரன் விவசாய வயல் வியாபாரப் பாடசாலை திட்ட முகாமையாளர் ச. தேவதாஸ் மற்றும் சிரேஸ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், திட்ட இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமங்களான பழம்பாசி,கரடிப்பிலவு,17ம் கட்டை, ஒலுமடு மற்றும் அம்பகாமம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வயல் வியாபாரப் பாடசாலை குழுக்களின் சார்பில் கலந்துகொண்டனர்
குறித்த நிகழ்வில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட கீழ்வரும் சிறந்த பயிர் செய்கை நடவெடிக்கை துண்டங்கள் பற்றி 1.பொருத்தமான நில பண்படுத்தல்
2. தரமான விதை பயன்பாடு
3. வரிசை விதைப்பு
4. பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி
5. விதை பரிகரணம்
6. ஜிப்சம் பயன்பாடு
7. தூவல் நீர் பாசன பயன்பாடு விவசாயம்
8. உரம் பயன்பாடு
9. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு(IPM)
10. தரமான விதை உற்பத்தி
11. இயந்திரங்களின் பயன்பாடு
விவசாய இயந்திரங்களின் காட்சி படுத்தல் நிலக்கடலை விற்பனை பகுதி நிலக்கடலை பெறுமதி சேர் உற்பத்தி பகுதி பல்வேறு பட்ட விவசாய பயிர் செய்கை துண்டம் பயிர் சிகிச்சை மையம் மாவட்ட விவசாய பண்ணையின் நாற்றுகள் கன்றுகள் விற்பனை பகுதி என்பன காட்சிப்படுத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வின் பெரும் பகுதியை விவசாயிகள் தலமையயேற்று நடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மற்றும் தமது முன்னேற்றமான அனுபவ பகிர்வையும் மேற்கொன்டு இருந்தனர். மேலும் தமது நிலக்கடலை செய்கை சம்பந்தமான எதிர்கால நடவடிக்கைககள் பற்றியும் கலந்துரையாடினர்.
இவ் விடயமானது குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகளின் பாராட்டை பெற்றது