Tamilmedia

Tamilmedia சுடச்சுட செய்திகளை உங்கள் கண்னெதிரே கொண்டுவரும் உங்கள் DIGITAMIL MEDIA
(207)

15/12/2025

ஜப்பான் போன்ற நாடுகளில் நேர்மையும் ஒழுக்கமும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

அங்கே யாராவது பணப்பையை தவறவிட்டால், அது சில நிமிடங்களிலேயே அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் சேர்ந்து விடும். அதிலும் அதிர்ச்சியாய், உள்ளேயுள்ள பணம் ஒரு ரூபாய் கூட குறையாமல் இருக்கும்.

காரணம், ஜப்பானில் குழந்தைகள் ஆரம்பத்திலேயே மற்றவரின் பொருட்களை எடுப்பது ஒரு வழக்கறிதல் தவறு மட்டுமல்ல, அது ஒரு பெரிய பாவம் என்று கற்றுக் கொள்ளுகிறார்கள். “எனக்குச் சொந்தமல்லாததை நான் எடுக்கக்கூடாது”

என்ற நெறி அவர்களின் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
அதனால் தான் அங்கே இழந்த பொருள் திரும்ப கிடைப்பது ஒரு அதிசயம் அல்ல - அது ஒரு சாதாரண விஷயம். இந்த அளவு நேர்மை, ஒழுக்கம், நம்பிக்கை மனிதர்களில் இருந்தால், சமூகம் எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை அவர்கள் காட்டுகிறார்கள்.

நம் சமூகத்திலும் இப்படிப் பட்ட உள்நேர்மை அதிகமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உண்மையில் ஆசைதான் வருகிறது

Call now to connect with business.

தினம் ஒரு குட்டிக்கதை :--மிகச் சிறந்த பொய்க்காக வழங்கப்படும் பரிசு!மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்க...
15/12/2025

தினம் ஒரு குட்டிக்கதை :--

மிகச் சிறந்த பொய்க்காக வழங்கப்படும் பரிசு!

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.

ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.
அந்த ஏழை சொன்னான், “அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்.”

அரசனுக்கு கோபம் வந்து விட்டது.
“யாரிடம் புளுகுகிறாய்.? நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?” என்று உரத்தக் குரலில் கத்தினான்.

உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.

கோபத்திலும், அவசரத்திலும் தாம் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்த அரசன், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ள முடியாது!” என்று அவசரமாக மறுத்தான்.

அந்த ஏழை சொன்னான்,
“சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது. உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா. எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, கடனை அடையுங்கள்.”

கையைப் பிசைந்த அரசன், அந்த ஏழையை 'சிறந்த பொய்யன்' என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான். மன்னனாக இருந்தாலும் அவனும் மனிதன்தான்...

பிச்சைக்காரன்  ஒருவன் விலை உயர்ந்த வைரம் ஒன்றை வழியில் கண்டெடுத்தான்... அவனின் சொத்து மதிப்பு என்று பார்த்தால் அழுக்குப்...
15/12/2025

பிச்சைக்காரன் ஒருவன்
விலை உயர்ந்த வைரம் ஒன்றை
வழியில் கண்டெடுத்தான்...

அவனின் சொத்து மதிப்பு
என்று பார்த்தால் அழுக்குப் படிந்த
அவனது உடை மட்டுமே...
அந்த வைரத்தின் மதிப்பு
என்னவென்று அவனுக்குத் தெரியாததால் அதைத் தன்னுடன்
இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்....
அதை கவனித்துக்கொண்டிருந்த
வைர வியாபாரி ஒருவன்
பிச்சைக்காரனிடம் சென்று
இந்தக் கல்லை எனக்கு கொடுத்துவிடு
நான் உனக்கு பணம் தருகிறேன்....என்றான்...
உடனே பிச்சைக்காரன்..
அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்த கல்லை நீ
வைத்துக்கொள் என்றான்.

அதற்கு அந்த வைரவியாபாரி
இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்
ஒரு ரூபாய் அதிகம்!
நான் உனக்கு 50 பைசா தருகிறேன்
அதை எனக்கு கொடுத்து விடு இல்லையென்றால்
எனக்கு வேண்டாம்" என்றான்...
உடனே பிச்சைக்காரன் சரி
பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்
என்றவாறே நடக்கலானான்.

வைர வியாபாரி எப்படியும் பிச்சைக்காரன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்குத் தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்....
அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம்
1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்...
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன்
அட அடிமுட்டாளே!

கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு
இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் என்றான்....

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் யார் முட்டாள்..?
எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை அந்த
விலைக்கு விற்றுவிட்டேன்...
மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த
மகிழ்வுடன் இருக்கிறேன்...
ஆனால் அதன் மதிப்பு தெரிந்தும்
வெறும் 50 பைசாவிற்காக
நீதான் அதை இழந்துவிட்டாய்....
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று சொல்லி விட்டு சென்றான்...

இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையையே இழந்து விடுகிறோம்...
கிடைத்த வாழ்க்கையை
மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்...

பிடித்த பதிவு... மனதை கவர்ந்த பதிவு பகிர்கிறேன்... நன்றி..

15/12/2025

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 58 ஆம் கட்டைப்பகுதியில் வைத்து , கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மூதூர் -58 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது அங்கிருந்து கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் கோடா 353 லீற்றர் ,உபகரணங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

15/12/2025

மீள்பதிவு .

தோப்பூரில் நடைபெற்ற மாட்டுவண்டி ஓட்டப்போட்டி .

14/12/2025

கிண்ணியா சூரங்கள் பிரதேசத்தில் வெல்லத்தினால் பாதிப்புற்று அழிவடைந்த வயல் நிலங்களில் மீண்டும் நெல் பயிரிடுவதை இன்று (14)காணக் கிடைத்தது

ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம்  ஒரு கேள்வி கேட்டார்...  உங்களிடம் 86,400 காசுகள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10...
14/12/2025

ஒரு ஆசிரியர் தனது
மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்...

உங்களிடம் 86,400 காசுகள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10 காசுகளை பறித்துக்கொண்டு ஓடினால் உங்கள் கையில் இருக்கும் அந்த 86,390 காசுகளை விட்டுவிட்டு அந்த 10 காசுகளை பிடிக்க ஓடுவீர்களா?

அல்லது பரவாயில்லை என்று உங்கள் பாட்டில் செல்வீர்களா? என்று...
அனைத்து மாணவர்களும் ஒரு மித்த குரலில் நிச்சயமாக நாங்கள் 10 காசுகளை விட்டுவிடுவோம்....
அந்த 86,390 காசுகளை தான் பாதுகாப்போம் என்று பதிலளித்தனர்...
ஆசிரியர் சொன்னார்:
உண்மையில் பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே நடக்கின்றனர்....
அந்த 10 காசுகளுக்காக அவர்கள் அந்த 86,390 காசுகளையும் இழக்கின்றனர்....
அதற்கு மாணவர்கள் :

யாராவது அப்படி செய்வார்களா?
எப்படி அது சாத்தியம்? என்று கேட்டனர்...
அதற்கு ஆசிரியர்: உண்மையில் 86,400 என்பது ஒரு நாளில் உள்ள
வினாடிகளின் எண்ணிக்கை...

யாராவது ஒருவர் 10 வினாடிகள் உங்களை எரிச்சலூட்டினால் அல்லது மனதை துன்புறுத்தும் வார்த்தைகளை சொன்னால் அல்லது விரும்பத்தகாத
ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக
நாள் முழுதும் யோசித்து
எஞ்சிய 86,390 வினாடிகளையும் நீங்கள்
வீணாக்கி விடுவீர்கள்....
சில நிமிஷம் வேதனை
முழு நாளையும் பாழாக்கிடக் கூடாது..
வாழ்க்கை ஒரு பரிசு...
அனுபவிங்க
எஞ்சிய நேரங்களையும்
வீணாக்கி விடாதீர்கள்....
இது மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும்....
படித்ததில் மனதை கவர்ந்தது

14/12/2025

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது .

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (14) நான்கு வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. .

கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது

தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கமாக, கந்தளாய் பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .

11/12/2025

⭐ சிறாஜிய்யா அரபுக் கல்லூரி சிராஜ் நகர், தம்பலகாமம்.

அறிவிப்பு:

புதிய மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு –

🔶 நேர்முகத் தேர்வு விவரங்கள்

📌 திகதிகள்

13 & 14 – இந்த மாதம்
(சனி மற்றும் ஞாயிறு)

🕗 நேரம்

காலை 8.30
முதல்

பிற்பகல் 4.00 வரை

📍 இடம்

சிறாஜிய்யா அரபுக் கல்லூரி வளாகம்

📝 கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

1. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
(Original / Certified Copy)

2. பாடசாலை இறுதி பரீட்சை “பெருபேறு"
( Mark Sheet )

3. திறமைகள் & சாதனைகள் சான்றிதழ்கள்
(இருப்பின் சமர்ப்பிக்கலாம்)

📞 மேலும் விவரங்களுக்கு:
📱 075-8888127
📱 075-9092170

10/12/2025

அதே இடத்தில் மீண்டும் விபத்து!

நேற்று நடந்த மரணவிபத்தின் பின்னர் இன்று மேலும் ஒருவர் கீழே விழுந்த அதிர்ச்சி காட்சி – RDA கவனத்திற்கு
திருகோணமலை–கிண்ணியா சாலையில் நேற்று நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டுநர் மரணித்த அதே இடத்தில், இன்று மீண்டும் இன்னொருவர் கீழே விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

நேற்றைய விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும், அதே Army’s truck இருந்த தருணத்திலேயே, மற்றொரு இருசக்கர வாகன ஓட்டுனர் சமநிலை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இது அந்த இடத்தின் மோசமான வீதி நிலைமை மற்றும் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்விகள் எழுப்புகிறது.
விபத்துகளுக்கான முதன்மை காரணம்:
சம்பவ இடம் சரிவான கீழ்ப்பகுதியில் அமைந்திருப்பதால்,

இரண்டு சக்கர வாகனங்கள் மேலே செல்லும் போது பாதையை மாற்றும் நிலையில் சமநிலை இழப்பது,
பின்னால் வரும் வாகனங்கள் மேல் ஏறி மோதும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்த காரணங்களால் உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை தொடர்ச்சியாக உருவாகி வருகிறது.
நேற்று – இன்று தொடர்ச்சியான விபத்துகள்!
நேற்று ஒருவரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் விபத்து
இன்று அதே இடத்தில் மீண்டும் ஒருவர் கீழே விழுந்த சம்பவம்
இரண்டு நாட்களில் இரு விபத்துகள் நிகழ்ந்திருப்பது, இந்த இடத்தின் அபாய நிலையைத் தெளிவாக காட்டுகிறது.

உடனடி நடவடிக்கை அவசியம்
வீதி பாதுகாப்பு நிபந்தனைகள் பின்பற்றப்படாமல் இருப்பது குறித்து மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

RDA ( வீதி அபிவிருத்தி அதிகாரசபை) உடனடியாக:
விதி தடைகள் அமைத்தல்
எச்சரிக்கை பலகைகள் பதித்தல்
சரிவு திருத்துதல்
போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்
போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

10/12/2025

மூதூரில் ஹெரோயினுடன் 41 வயது நபர் கைது .

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள நெய்தல் நகர் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 800 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மூதூர் -நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இவ் சுற்றி வளைப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

10/12/2025

காட்டு யானை தாக்கியதில் ஜெயந்திபுரயில் வீடு சேதம் –
வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுர கிராமத்திற்குள் இன்று (10) அதிகாலையில் புகுந்த காட்டு யானை, ஒரு வீட்டு சுவரை உடைத்துள்ளது அங்கு இருந்த பல வீட்டு உபகரணங்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்ததாவது,

குறித்த காட்டு யானை இப்பகுதிகளில் அடிக்கடி வருவது வழக்கமாகிவிட்டது.
இன்றைய தாக்குதலில் தையல் இயந்திரம், கதிரைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபகரணங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர் .

யானை நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து நடைபெறும் இந்த அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசாங்கமும் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Tamilmedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilmedia:

Share