Tamilmedia

Tamilmedia சுடச்சுட செய்திகளை உங்கள் கண்னெதிரே கொண்டுவரும் உங்கள் DIGITAMIL MEDIA
(207)

30/12/2025

“மூலிகைகளை வளர்ப்போம் – நாட்டை கட்டியெழுப்புவோம்” எனும் தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ACM ஜவாஹிர் அவர்களின் கருத்துக்களை முற்றாக மறுக்கிறேன் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் MTM...
30/12/2025

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ACM ஜவாஹிர் அவர்களின் கருத்துக்களை முற்றாக மறுக்கிறேன்
கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் MTM இர்பான் Kantalai Media ஊடகத்துக்கு தெரிவிப்பு .

மேலும் தெரிவிக்கையில் இன்றைய தினம் கந்தளாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ACM ஜவாஹிர், அவருடைய ஊடாகம் ஒன்றுக்கு முன்வைத்த குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன்.

எனது நிவாரணப் பணிகளை பிரதேச சபை உறுப்பினர்கள் தடுத்ததாக அவர் தெரிவித்த கருத்துகள் உண்மையற்றவை.

நான் எப்போதும் பேராறு கிழக்கு மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும், ஏனைய நலன் சார்ந்த பணிகளுக்கும் தடையாக நின்றதில்லை. அதே நேரம், கடந்த மழை வெள்ளத்தின் போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எங்கு இருந்தார்? அந்நேரத்தில் மக்களுக்காக எதையும் செய்யாமல், இன்று இவ்வாறு குற்றம் சாட்டுவது எந்த வகையிலும் நியாயமற்றது.

கடந்த கால வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடு வீடாக சென்று சேவைகளை மேற்கொண்டவன் நான். எந்நேரமும் பேராறு கிழக்கு மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து செயல்பட்டவனே தவிர, எந்த சந்தர்ப்பத்திலும் தடைகள் ஏற்படுத்தியவன் அல்ல.

எனவே, இவ்வாறான கருத்துக்களை எமது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்னால் இயன்ற வரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டேன். இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்திலும் அவற்றை தொடர்ந்து மேற்கொள்வேன்.

ஆகவே, போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விட, உங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு வழங்குங்கள்.

MTM இர்பான் (ரஜாப்தீன்)
பிரதேச சபை உறுப்பினர்
கந்தளாய்

29/12/2025

வீடும் கடையும் இடிந்து அழிவு: வாழ்வாதாரத்தை இழந்து விதவைத் தாய் தவிப்பு

திருகோணமலை மாவட்டம் சேருநுவர – சோமபுர பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், கணவனை இழந்த விதவைப் பெண் ஒருவரின் வீடும் கடையும் முற்றாக இடிந்து விழுந்துள்ளன. இதனால் அவர் தனது பிள்ளைகளுடன் தங்குமிடமின்றி உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சிறிய கடை ஒன்றை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், வெள்ள நீர் கடையையும் அதிலிருந்த பொருட்களையும் அடித்துச் சென்றதுடன், அவர்கள் வசித்து வந்த வீட்டையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளது.

கணவனை இழந்து தனியாக போராடி வந்த இந்தத் தாய், தற்போது வாழ்வாதாரத்தையும் வசிப்பிடத்தையும் ஒரே நேரத்தில் இழந்து கடும் நெருக்கடியில் உள்ளார்.

“பிள்ளைகளைக் காப்பாற்றவே கடையை ஆரம்பித்தேன். ஆனால் வெள்ளம் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு போய்விட்டது,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உடனடியாக உதவ முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

28/12/2025

கந்தளாயில் முதற்கட்டமாக 71 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள் வழங்கி வைப்பு .

கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, முதற்கட்டமாக பாடசாலைப் பைகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) கந்தளாய் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. பைரூஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்ரான் மகரூப் அவர்களின் ஏற்பாட்டில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய முதற்கட்ட வழங்கலின் போது, இரண்டு முன்பள்ளி பாடசாலைகளைச் சேர்ந்த மொத்தம் 71 மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆயிஷா முன்பள்ளி: 46 மாணவர்களுக்கு பைகள் வழங்கப்பட்டன.
பாத்திமா முன்பள்ளி: 25 மாணவர்களுக்கு பைகள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்ரான் மகரூப் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்குப் பைகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் கிராம உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த முதற்கட்டப் பணிக்கு, அப்பகுதி மக்களும் பெற்றோர்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

28/12/2025
27/12/2025
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திரு.ஹரிஷ் ரவீந்திரன் தலைமையில், கடந்த புதன்கிழமை நுவரெலியாவின் ...
26/12/2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திரு.ஹரிஷ் ரவீந்திரன் தலைமையில், கடந்த புதன்கிழமை நுவரெலியாவின் வட்டகோட், யாக்ஸ்ஃபோர்டு மற்றும் கண்டபொல பகுதிகளை பார்வையிட்டு, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை மதிப்பீடு செய்து தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

26/12/2025

12 மணியளவில் கிண்ணிய வேன் கல்ஓயா ஹபறன வீதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது ..

உயிரைப் பணயம் வைத்து 35 உயிர்களை மீட்ட 'கல்கமுவ ஹீரோக்கள்': நள்ளிரவுப் போராட்டத்தில் வென்ற மனிதநேயம்!கடந்த நவம்பர் 27 ஆம...
26/12/2025

உயிரைப் பணயம் வைத்து 35 உயிர்களை மீட்ட 'கல்கமுவ ஹீரோக்கள்': நள்ளிரவுப் போராட்டத்தில் வென்ற மனிதநேயம்!

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய சீரற்ற காலநிலையின் போது, கண்டி - கெலிஓயா கல்கமுவ பகுதியில் நிகழ்ந்த ஒரு பாரிய உயிர்ச் சேதத்தை ஐந்து இளைஞர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அன்றைய தினம் நள்ளிரவு 2 மணியளவில் கல்கமுவ பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் மரண பயத்தில், வேறு வழியின்றி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தஞ்சமடைந்தனர். மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், இருட்டில் வெள்ளம் கட்டிடத்தைச் சூழ்ந்தது.

அனைத்து தொலைபேசி இணைப்புகளும் செயலிழந்த நிலையில், தற்செயலாக வேலை செய்த ஒரே ஒரு தொலைபேசி எண்ணின் ஊடாகப் பகுதி இளைஞர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்த அடுத்த நொடியே, எவ்வித நவீன மீட்பு உபகரணங்களும் இன்றி, சீறிப்பாயும் வெள்ளத்தில் இறங்கினர் அந்த ஐந்து இளைஞர்கள். சஜித், அக்ரம், இக்ரம், சப்ரான் மற்றும் ரஸ்னி ஆகிய இந்த இளைஞர் குழுவினர், காற்று நிரப்பப்பட்ட 'டியூப்' (Tube) ஒன்றையே தமது மீட்புக் கருவியாகப் பயன்படுத்தினர்.

வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், தமது உயிரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், நீந்திச் சென்று மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் ஒவ்வொருவராக டியூப் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.

அதிகாரிகளின் உதவி கிடைப்பதற்கு முன்னரே, இந்த இளைஞர்கள் காட்டிய துரித செயல்பாடு இன்று 35 உயிர்களைப் பாதுகாத்துள்ளது.

"நள்ளிரவு 2 மணிக்கு அந்தத் தம்பிகள் மட்டும் வரவில்லை என்றால், இன்று எமது மூன்று குடும்பங்களும் இருந்திருக்காது. எமக்கு மறுபிறவி கொடுத்த அந்த இளைஞர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை," என மீட்கப்பட்டவர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.

இயற்கைப் பேரிடர் அன்றையதினம் சமூகப் பொறுப்புடனும், அதீத துணிச்சலுடனும் செயற்பட்ட சஜித், அகரம், இக்ரம், சப்ரான் மற்றும் ரஸ்னி ஆகியோரின் இந்த வீரம் செறிந்த செயலை ஒட்டுமொத்த மக்களும் பாராட்டி வருகின்றது.

(அப்ரா மன்சூர் )
கெலிஓயா கல்கமுவ

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Tamilmedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilmedia:

Share