Lanka Front News

Lanka Front News உண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம் ! Contact us

திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் - ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன்சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரு...
30/05/2025

திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் - ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் அழைத்ததின் பேரில் சந்தித்ததாகவும், ராஜ சபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்றும், வேட்பாளர் தாக்கல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார்.

மேலும், மக்களவையில் தான் தன்னுடைய குரல் முதல் முறையாக ஒலிக்க இருந்தாலும், தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து தான் வருகிறேன் என கூறினார்.

தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய அவர், தான் பேசியது தவறு இல்லை என திட்டவட்டமாக கூறினார்.
அதேபோல், இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், என்னுடைய அன்பு கர்நாடக, ஆந்திரா, கேரளா மக்களுக்கு புரியும் என்றும், ஏற்கனவே நான் பல மிரட்டல்களை சந்தித்துள்ளதாகவுன், இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.

திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள் என்ற கேள்விக்கு, திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் என தெரிவித்தார்.

19/05/2025
07/05/2025

மாநகர மக்களுடன் ஒரு சில நிமிடங்கள் - அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள MI அஹ்பரோஸ் றூஹி !

தொழில் நுட்பக்கல்லூரி வட்டாரம் தேசிய காங்கிரஸினால் வெற்றி கொள்ளப்பட்டது !
06/05/2025

தொழில் நுட்பக்கல்லூரி வட்டாரம் தேசிய காங்கிரஸினால் வெற்றி கொள்ளப்பட்டது !

06/05/2025

LG Elections 2025:

Voter turnout as at 2pm;

Colombo-40%,
Kalutara- 45%,
Matara- 45,
Vavuniya- 49%,
Mannar- 54%,
Badulla- 48%,
Rathnapura- 50%,
Kegalle- 45%,
Digamadulla- 48%,
Puttalam- 40%,
Polonnaruwa- 45%,
Anuradhapura- 40%
Kilinochchi - 39%
Hambantota - 42%
Monaragala - 46%
Nuwara Eliya - 53%
Batticaloa - 40%
Jaffna - 38%

- District Returning Officers.

(Thanks - ARV Loshan )

 #அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமா சபையின் அக்கரைப்பற்று கிளையின் புதிய தலைவராக அஷ்ஷேக். எம்.எம். கலாமுல்லாஹ் (றஷாதி) தெர...
06/05/2025

#அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அக்கரைப்பற்று கிளையின் புதிய தலைவராக அஷ்ஷேக். எம்.எம். கலாமுல்லாஹ் (றஷாதி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முதல் இதன் தலைவராக இருந்த கலாநிதி. எம்.ஐ.சித்தீக் (அஷ்ஹரி) அவர்கள் புலமைப்பரிசில் பெற்று மேற்படிப்பு ஒன்றிற்காக வெளிநாடு சென்றமையால் இவர் தற்போது புதிய தலைவராக இப்பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் ஆலோசனை சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(றிஸ்வான் சாலிஹு)

05/05/2025

05/05/2025

அக்கரைப்பற்று மாநகர மக்களுக்கு...

கடந்த 3ம் திகதி இரவு முஸ்னத் ஆசிரியர் தாக்கப்பட்டதாக வந்த செய்திற்கு பின்னர் அக்கரைப்பற்று NPP ன் பிரதான செயற்பாட்டாளர்களினால் திட்டமிட்டு கட்டவிள்த்து விடப்பட்ட காட்டுமிராண்டி சம்பவம் பற்றி பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படத்தியது.

அதில் NPP யினர் தாக்குதலுக்கு திட்டமிடுவதும், பின்னர் பிரதான வீதியிலும் ஹோட்டல்களிலும் இருந்த மாணவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டு பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர் .

இவ் மிலெச்சத்தனமான செயற்பாட்டிற்கு பின்னால் NPP ன் பிரதான செயற்பாட்டாளர்களான அபூ சஹீட், றாஷி முகம்மட் மற்றும் றமீஸ் முஹீடீன் ஆகியோர் இருந்துள்ளனர் . இதில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நப்லி என்ற இளைஞன் ஒரு வாக்குமூலம் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில்
அறபாத் ஹோட்டலில் பொலிசினால் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் றாஷி முகம்மட் மற்றும் றமீஸ் முஹிடீன் என்பவர்களே பொலிசாரை
அழைத்து வந்து மாணவர்களை அடித்து பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டதற்கான ஆதார வீடியோ இதோ உங்களின் தெளிவான பார்வைக்கு.

அக்கரைப்பற்று மண் யாரால் ஆளப்படவேண்டும் யாரால் ஆளப்படக்கூடாது என்பதை அக்கரைப்பற்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Front News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lanka Front News:

Share