17/11/2025
இன்று அதிகாலை மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஒரு டீசல் டேங்கர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 42 இந்திய உம்ரா யாத்திரிகர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலோர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் முஃப்ரிஹாத் பகுதியில் நடந்ததாக ஆரம்பிகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் மொத்தம் 43 பயணிகள் இருந்ததாகவும், இதுவரை ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்தக் குழு ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டதாகவும், அவர்களில் 20 பெண்களும் 11 குழந்தைகளும் இருந்ததாக சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மக்காவில் உம்ரா யாத்திரையை முடித்த அவர்கள் மதீனாவுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டது.