05/11/2024
திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என்று பேசும் அளவிற்கு நாங்கள் நாகரிகமற்றவர் கிடையாது. எங்கள் தவெக தலைவர் தளபதி அவர்கள் மிகவும் நாகரிக பண்பு கொண்டவர்.
அனைவரையும் நேசிக்கும் மாண்பு கொண்டவர். நாங்கள் யாரையும் ஒழிக்க வரவில்லை. மக்களிடம் ஒற்றுமையை உருவாக்க வருகிறோம்.
திமுக ஒழிய வேண்டும் என்று எந்த இடத்திலும் எங்கள் தவெக தலைவர் தளபதி அவர்கள் பேசவில்லை.
திமுகவை அழிப்பேன், ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் யார்யாரென்று மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு தெரியும்.
அவர்கள் இப்பொழுது யாருடன் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் ஐயா சிந்தித்து பார்க்க வேண்டும்.
உங்கள் ஆட்சியை மக்களின் ஆதரவோடு வீழ்த்த வந்திருக்கிறோம்.
தந்தை பெரியார் பெயரையும், திராவிடம் என்ற கருத்தையும் தவறாக பயன்படுத்தி மக்களிடம் ஆதிக்கம் செலுத்தும் உங்களின் செயல்பாட்டை எதிர்க்கிறோம்.
ஒரே குடும்பத்தில் இருந்து அதிகாரத்திற்கு வருவதை பாசிசம் என்று உணர்த்துகிறோம்.
திமுக வளர வேண்டுமா? ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மக்கள் விரோத செயலில் தொடந்து ஈடுபட்டால் மக்கள் தூக்கி வீசுவார்கள். மக்கள் விரோத ஆட்சிதான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
பல கோடி மக்களின் உள்ளத்தில் மகனாக,அண்ணனாக, தம்பியாக இடம் பிடித்துள்ள தவெக தலைவர் தளபதி அவர்கள் என்றும் நாகரிக அரசியலை செய்யக் கூடியவர்.
தரம் தாழ்ந்து பேசும் அரசியல் அவருக்கு ஒருபோதும் பிடிக்காது.
தனிமனித விமர்சனம் செய்யக் கூடாது என்று கழகத் தோழர்களுக்கு பல முறை அறிவுறுத்தி உள்ளார்.
அவன், இவன் என்று ஒருமையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் பேசியது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல.
75 ஆண்டு கால கட்சி என்றும் சொல்வதில் பெருமை இல்லை. எப்படி நாகரிகமாக இருக்க வேண்டும் என்பதில்தான் பெருமை உள்ளது.
முதல்வராக இருந்து கொண்டு இப்படி ஒருமையில் பேசுவது தவறு.
பல கோடி மக்களால் நேசிக்கப்படும் தவெக தலைவர் தளபதி அவர்களையே இப்படி பேசுகிறார்கள் என்றால் சாதாரண மக்களின் நிலையை நினைத்து பாருங்கள்.
நீங்கள் அழிய வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை,
நீங்கள் ஆளக்கூடாது என்று தான் நினைக்கிறோம்.
மக்கள் விரோத சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள்,
ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியும், தமிழக மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றுவது சரியா?
உங்களின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது.
மக்களின் அமோக ஆதரவோடு தவெக தலைவர் தளபதி அவர்கள் தமிழ்நாட்டை விரைவில் ஆட்சி செய்வார்.