வணக்கம் பாரதம் 24x7 செய்திகள்

  • Home
  • India
  • Anna Nagar
  • வணக்கம் பாரதம் 24x7 செய்திகள்

வணக்கம் பாரதம் 24x7 செய்திகள் அன்பு வாசகர்களே உங்களுக்காக…

ஆன்மீகம் எளிதில் புரியும் வகையில் உங்களுக்கான புதிய வடிவமைப்பில்...மேலும் செய்திகளைப் படிக்க...http://www.vanakambharath...
18/07/2025

ஆன்மீகம் எளிதில் புரியும் வகையில் உங்களுக்கான புதிய வடிவமைப்பில்...

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

குறைந்த தங்கம் விலை!சென்னை ஜூலை, 16ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்...
16/07/2025

குறைந்த தங்கம் விலை!

சென்னை ஜூலை, 16

ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹360 குறைந்து ₹72,800-க்கும், கிராமுக்கு ₹45 குறைந்து ₹9,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹80, இன்று ₹360 என 2 நாள்களில் சவரனுக்கு ₹440 குறைந்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி: விஷால்.சென்னை ஜூலை, 16விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனிட...
16/07/2025

இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி: விஷால்.

சென்னை ஜூலை, 16

விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனிடையே அவரிடம் நடிகர் சங்க கட்டடம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு 9 வருடங்கள் தாக்கு பிடித்துவிட்டதாகவும் இன்னும் 2 மாதங்களில் பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளான ஆக. 29-ம் தேதி நல்ல செய்தி வரும் எனவும் கூறியுள்ளார்.

சொன்னபடி தனது திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் நடக்கும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

தவெக கொடியை சுற்றும் சிக்கல்கள்..!சென்னை ஜூலை, 16தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கே இன...
16/07/2025

தவெக கொடியை சுற்றும் சிக்கல்கள்..!

சென்னை ஜூலை, 16

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், கொடியின் நிறத்தை நீக்கக் கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்மர் பரிபாலனை சபை கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தங்கள் கட்சியின் கொடியிலும் அதே நிறங்கள் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரவிருப்பதால், விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

சென்னையில் 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்.சென்னை ஜூலை, 16திருவேற்காடு நகராட்சி நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாமல் மெத்தன ப...
16/07/2025

சென்னையில் 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்.

சென்னை ஜூலை, 16

திருவேற்காடு நகராட்சி நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாமல் மெத்தன போக்கோடு இருக்கும் திமுக அரசை கண்டித்து, 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் தலைமை தாங்குவார், முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர், கழக அமைப்பு செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

வார விடுமுறை. அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.சென்னை ஜூலை, 16வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர் செல்...
16/07/2025

வார விடுமுறை. அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.

சென்னை ஜூலை, 16

வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர் செல்ல அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜூலை 18, 19, 20 ஆகிய தேதிகளில் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

அதிமுக பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.மயிலாடுதுறை ஜூலை, 16உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இபிஎஸ் விமர்சித்திருந்தார். இத...
16/07/2025

அதிமுக பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.

மயிலாடுதுறை ஜூலை, 16

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இபிஎஸ் விமர்சித்திருந்தார். இதற்கு மயிலாடுதுறை விழாவில் பேசியபோது பதிலடி கொடுத்த ஸ்டாலின், இபிஎஸ் அவதூறு பரப்பி வருவதாகவும், ஆனால் தமது அரசோ கட்சி பேதம் இல்லாமல் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதாகவும் கூறினார்.

அதிமுகவைச் சேர்ந்த பெண்களும் மாதம் ரூ.1,000 வாங்கி வருவதாகவும், இதை இபிஎஸ்ஸால் மறுக்க முடியுமா என்றும் ஸ்டாலின் சவால் விடுத்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

அமெரிக்காவில் மீண்டும் பரவும் கொரோனா.அமெரிக்கா ஜூலை, 16அமெரிக்காவில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள...
16/07/2025

அமெரிக்காவில் மீண்டும் பரவும் கொரோனா.

அமெரிக்கா ஜூலை, 16

அமெரிக்காவில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சுமார் 25 மாகாணங்களில் இந்நிலை உள்ளதாக நோய்கள் தடுப்பு & கட்டுப்பாடு அமைப்பு (CDC) தெரிவித்துள்ளது. NB.1.8.1 என்ற வேரியன்ட் தான் வேகமாக பரவுகிறதாம். விடுமுறை பயணங்கள், பார்ட்டிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவது ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. விரைவில் அந்நாடு முழுவதும் தொற்று பரவலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

இபிஎஸ் குறித்து ஸ்டாலின் விமர்சனம்.மயிலாடுதுறை ஜூலை, 16"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை பார்த்து இபிஎஸ் பயந்து விட்டதாக மு...
16/07/2025

இபிஎஸ் குறித்து ஸ்டாலின் விமர்சனம்.

மயிலாடுதுறை ஜூலை, 16

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை பார்த்து இபிஎஸ் பயந்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இபிஎஸ் பயத்தால் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து அவதூறு பரப்பத் தொடங்கியுள்ளதாக சாடினார். மேலும் விமர்சனம் என்ற பெயரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு இபிஎஸ் விளம்பரம்தான் செய்வதாகவும், இதற்காக அவருக்கு நன்றி என்றும் ஸ்டாலின் கிண்டலடித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

அல்வாவுக்குள் தேள்.வாடிக்கையாளர் அதிர்ச்சி.நெல்லை ஜூலை, 16அல்வா என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நெல்லை அல்வாதான்...
16/07/2025

அல்வாவுக்குள் தேள்.வாடிக்கையாளர் அதிர்ச்சி.

நெல்லை ஜூலை, 16

அல்வா என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நெல்லை அல்வாதான். இந்நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கடை ஒன்றில் அல்வா வாங்கி சாப்பிட்ட வாடிக்கையாளர், அல்வாவுக்குள் தேள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

தீக்கிரையான பிஞ்சுகள்: சோக நினைவில் மூழ்கிய தமிழகம்.கும்பகோணம் ஜூலை, 16உற்சாகமாய் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் உடல் கருக...
16/07/2025

தீக்கிரையான பிஞ்சுகள்: சோக நினைவில் மூழ்கிய தமிழகம்.

கும்பகோணம் ஜூலை, 16

உற்சாகமாய் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் உடல் கருகி மாண்டுபோன சோகத்தை தமிழகம் கண்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானதை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. விபத்து நடந்த பள்ளியில் இன்று சாக்லேட் வைத்து அஞ்சலி செலுத்தியது காண்போரின் கண்களை குளமாக்குகிறது. சமூக வலைத்தளங்களிலும் நினைவலைகளை உருக்கமாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

Address

Anna Nagar

Telephone

+919843796777

Website

https://www.vanakambharatham24x7news.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%87%e0%ae

Alerts

Be the first to know and let us send you an email when வணக்கம் பாரதம் 24x7 செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வணக்கம் பாரதம் 24x7 செய்திகள்:

Share