Channel 26

Channel 26 Channel 26 - The Foundation of All Generations!!! The most colorful program and the best program quality keep it distinct compare with others

Channel 26 Network TV Channel in India presenting a wide assortment of news and discovers human lives, history, culture and entertainment programming to viewers.

18/12/2019

Anybody with a good skill of Media Designing (Video Editing, Photo Shop, Web Design, Publications) Job and who are interested to work in Chennai Office. Please do mail your CV to [email protected]

கரையான்கள் அவற்றின் புற்றுகளைக் கோபுர வடிவில கட்டும். ஒருவிதத்தில் பார்த்தால் இந்த வடிவம்தான் ஸ்திரமாக இருக்கக் கூடியது....
17/06/2014

கரையான்கள் அவற்றின் புற்றுகளைக் கோபுர வடிவில கட்டும். ஒருவிதத்தில் பார்த்தால் இந்த வடிவம்தான் ஸ்திரமாக இருக்கக் கூடியது. அடிப்பாகம் அகன்றும் , மேலேப் போக போக குறுகியும், இயற்கையின் குத்துமதிப்பான பிரமிடுகள் இவை.

ஆனால் இந்த திறமையும், தொழில்நுட்பமும் எந்த மாதிரியான கரையான்களிடம் இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் பதில் சொல்லத் தெரியாது.

கரையான்களில் ஆண், பெண், ராணி, தொழிலாளி என்ற பாகுபாடு இருப்பினும் அது ஒரு காலனி. அந்த காலனிக்கு ஒட்டு மொத்தமான அறிவும், திறமையும் உள்ளது. தனிப்பட்ட மேஸ்திரியோ, ஆர்க்கிடெக்ட்டோ கிடையாது.

காலணியின் உள்ளுணர்வு அதன் புற்று. இந்த கரையான்கள் இயற்கையான மரக்குப்பைகளையும், விழுந்து செத்த மரங்களையும் அப்புறப்படுத்துவதற்கு ஏற்பட்டது. புத்தகங்களை அவ்வப்போது சாப்பிடுவது சும்மா ப்ராக்டீஸூக்காக.

விண்வெளிக்கலங்களை ஏவும் போது 1,2,3 – ன்னு ஏறு வரிசையில எண்களை எண்ணாம, 10,9,8….ன்னு இறங்கு வரிசையில எண்ணுவாங்க. கடைசியில ...
06/06/2014

விண்வெளிக்கலங்களை ஏவும் போது 1,2,3 – ன்னு ஏறு வரிசையில எண்களை எண்ணாம, 10,9,8….ன்னு இறங்கு வரிசையில எண்ணுவாங்க. கடைசியில பூஜ்யம் வந்ததும் விண்கலத்தை வானத்துல செலுத்துவாங்க.

இதுக்கு என்ன காரணம்னா, விண்வெளிக் கலங்களை வானத்துல செலுத்துறதுக்கு முன்னாடி, அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளதான்னு சோதனை செய்றது ரொம்பவே முக்கியம்.

ஏதாவது ஒரு படிநிலையில நிகழ்ற ஒரு சின்ன தவறு கூட பெரிய இழப்பை ஏற்படுத்திடும். இதனாலதான் விண்கலத்தை செலுத்தும் போது 10,9,8,….ன்னு இறங்குமுகமா சொல்லிட்டே வந்து பூஜ்யம் வரும் போது கலம் செலுத்தப்பட்டுவிட்டதுன்னு பொருட்படுத்துறாங்க.

அது மட்டுமில்லாம பூஜ்யம்ங்கிறது ஒரு இறுதிநிலை. மாறாக பூஜ்யம் தொடங்கி வளர்முகமாக எண்ண ஆரம்பிச்சா இறுதிநிலைன்னு எந்த எண்ணை சொல்றது. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு.

வாழைப்பழம்தானேன்னு நாம பல சமயங்கள்ல அலட்சியப்படுத்துற அந்த சின்னப் பழத்துல இருக்குற சத்துக்களைக் கேட்டா அப்படியே ஆச்சர்ய...
04/06/2014

வாழைப்பழம்தானேன்னு நாம பல சமயங்கள்ல அலட்சியப்படுத்துற அந்த சின்னப் பழத்துல இருக்குற சத்துக்களைக் கேட்டா அப்படியே ஆச்சர்யத்துல அசந்து போவோம்.

ஃபிரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் இந்த மூணு சத்துக்களும் ஒரே உணவுல கிடைக்குறது ரொம்ப கஷ்டம். ஆனா, வாழைப்பழத்துல இந்த மூணு சத்துமே நிறைஞ்சிருக்கு.

வாழைப்பழத்துல பொட்டாசியம் சத்து அதிகம். உடலோட எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ரொம்பவே உதவி செய்யுது.

சாப்பிட்டு முடிச்சவுடனே ஒரு வாழைப்பழம் சாப்பிடுற பழக்கம் நம்மக்கிட்ட இருக்கு. இதுக்கு ஒரு மருத்துவ காரணமும் உண்டு. சாப்பிட்டு முடிச்சவுடனே வாழைப்பழம் சாப்பிடுறதால இதுல இருக்குற ஆண்டாசாயிட்-ங்கிற ரசாயனம் நெஞ்சு எரிச்சலைத் தடுக்குது. இதனால அசிடிட்டி பிரச்னையைத் தவிர்க்க முடியும்.

டிரைஃப் டோபன் செரடோனிங்-கிற அமிலச்சத்து வாழைப்பழத்துல நிறைஞ்சு இருக்குறதால கடும் வேலையிலக்கூட சோர்வு வராம பார்த்துக்க இது உதவி செய்யும்.

குறைஞ்ச விலையில கிடைக்குற இந்த பழத்துல இவ்வளவு சத்து இருக்குதுன்னா தினசரி ஒரு பழம் எடுத்துக்கலாம்.

கலைஞருக்கு பிறந்தநாள்!பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் வருகின்ற தமிழ்த் தேனி கலைஞர் கருணாநிதி. அவருக்கு இன்று பி...
03/06/2014

கலைஞருக்கு பிறந்தநாள்!

பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் வருகின்ற தமிழ்த் தேனி கலைஞர் கருணாநிதி. அவருக்கு இன்று பிறந்தநாள்.

டி.எம். கருணாநிதி(திருவாரூர் முத்துவேலர்) என்றுதான் ஆரம்பத்தில் தன்னை அழைத்துக் கொண்டார் கருணாநிதி. அதற்கு பிறகு மு.கருணாநிதி என்று கையெழுத்திட்டார். இப்போது மு.க!

தினமும் டைரி எழுதும் பழக்கம் கொண்டவர் அல்ல. ஆனாலும் அவருக்கு எல்லாமே நினைவில் அப்படியே இருக்கும். ‘என் மூளையே எனக்கு டைரி’ என்பார்.

பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர் கேள்வி போடுவது அவரது பாணி.

கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம் ‘ மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்புகிறது’.

12 முறை எம்.எல்.ஏ, 5 முறை முதலமைச்சர் ,10 முறை தி.மு.க தலைவர் மாதிரியான சாதனைகளை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பதும் சந்தேகம்.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியனா? ‘ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்பதுதான் பழமொழி. அதாவது நோய்களை போக்கக் க...
02/06/2014

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியனா?

‘ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்பதுதான் பழமொழி. அதாவது நோய்களை போக்கக் கூடிய மருந்துகளைத் தயாரிக்கக் காடுகளில் உள்ள மூலிகைச் செடிகளின் வேர்களைக் கண்டுபிடித்து, அதைக் கொண்டுவந்து மருந்துகளைத் தயாரிப்பதே ஒரு நல்ல மருத்துவனின் வேலை. இதை உணர்த்துவதே இந்தப் பழமொழி. ஆனால் இன்று சொற்கள் மருவியதால் வேறு ஒரு பொருளில் இந்தப் பழமொழி வழங்கப்பட்டு வருகிறது.

'கடற்படையில் டால்ஃபின்!'கடலுக்கடியில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்ற டால்ஃபின்களை பயன்படுத்துகிறார்கள். பொதுவாக கண்ணிவெ...
31/05/2014

'கடற்படையில் டால்ஃபின்!'

கடலுக்கடியில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்ற டால்ஃபின்களை பயன்படுத்துகிறார்கள். பொதுவாக கண்ணிவெடிகள் வலுவான காந்த சக்தியுடன் இருக்கும்.

கப்பலுடன் ஒட்டிக் கொண்டதும், வெடிக்கிற ‘லிம்ஃபெட்’ கண்ணிகள் இதில் பிரசித்தம். டால்ஃபின்களால் இந்த கண்ணிவெடிகளை தரம்பிரித்து அடையாளம் காட்ட முடியும்.

1960-களில் இருந்தே அமெரிக்கக் கடற்படை இதற்கென்றே ஒரு டால்ஃபின் பட்டாளத்தை வைத்திருக்கிறார்கள். டைவ் அடிப்பவர்களுக்கு முன்னே டால்ஃபின்கள் சென்று உத்தரவாதமாகக் கண்ணிவெடிகளை அடையாளம் காட்டிவிடும்.

நல்ல ஆகாரத்துடன் அவ்வப்போது தட்டிக் கொடுத்து சபாஷ் சொன்னால் போதும்…உயிரையே பணயம் வைத்துக் கூட கண்டுபிடிக்கும்.

மின்னலில் இருந்து மின்சாரம்?மின்னலில் மின்சாரம் கிடைக்கும் என்று பெஞ்சமின் பிராங்க்ளின் கண்டுபிடித்தார். ஆனால் அந்த மின்...
30/05/2014

மின்னலில் இருந்து மின்சாரம்?

மின்னலில் மின்சாரம் கிடைக்கும் என்று பெஞ்சமின் பிராங்க்ளின் கண்டுபிடித்தார். ஆனால் அந்த மின்சார சக்தியை நம்மால் சேமிக்க முடியவில்லை.

மழை மேகங்களில் உள்ள மழைத்துளிகள் பெரிதாகி, மேல் எழுந்து ஒன்றுடன் ஒன்று உரசும்போது அவற்றில் மின்சாரம் உண்டாகிறது. பட்டுத்துணியை உரசும்போது முடி சிலிர்க்குமே…அதுகூட மின்சார சக்திதான்.

மேகத்தினுள் மின்சாரம் உண்டாகிற போது பெரிய நீர்த்துளிகள் எதிர் மின்சாரமும், சிறிய நீர்த்துளிகள் நேர் மின்சாரமும் பெறுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேகம் பெரிதாகி திரண்டு உயரும் போது, நேர் மின்சாரமும் எதிர்மின்சாரமும் வினை புரிந்து விண்ணைப் பிளந்து ஸ்பார்க் அடிக்கிறது.

நம்ம வீட்டில் மின்னும் நாற்பது வாட் டியூப் லைட் இல்லை இது. சராசரியாக முப்பது மைக்ரோ செகண்ட் நீடிக்கும் இந்த மின்னல் மின்சாரம் ஒரு லட்சம் கோடி வாட் சக்தியுள்ளது.

இதை சேமிக்க இதுவரை டெக்னாலஜி இல்லை.

இன்று பெரும்பாலன அரசியல்வாதிகள் புல்லட் புரூஃப் மெட்டீரியலை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  எந்த உலோகத்தினால்...
29/05/2014

இன்று பெரும்பாலன அரசியல்வாதிகள் புல்லட் புரூஃப் மெட்டீரியலை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எந்த உலோகத்தினால் இதை தயாரிக்கிறார்கள் தெரியுமா?

’கெவ்லார்’ என்னும் வலை, வலையாக இருக்கும் பொருளால் செய்தது. பெரும்பாலான கைத்துப்பாக்கிகளில் இருந்து காப்பாற்றும்.

’ரைஃபிள்’ போன்றவற்றில் இருந்து தப்பிக்க ’செராமிக்’ அல்லது ’கன உலோகம்’ வைத்து செய்த உடை தேவைப்படும்.

இன்று வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் முக்கிய மனிதர்கள் இந்த இந்த உடையை அணிந்து கொள்கிறார்கள்.

Address

Anna Nagar

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 1pm

Telephone

+919884822626

Alerts

Be the first to know and let us send you an email when Channel 26 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category