
06/05/2025
Bollinger Bands Strategy பத்தி இன்னைக்கு ஒரு பதிவு.
இது ஒரு volatility indicator. இதுல மூன்று கோடுகள் இருக்கும். இந்த கோடுகளைத்தான் நாம் Band என்று சொல்கிறோம்.
இந்த மூன்று கோடுகளில் நடுவில் இருக்கும் கோடு Middle Band : 20-period simple moving average (SMA). மேலே இருப்பது Upper Band : SMA + 2 standard deviations கீழே இருக்கும் கோடு Lower Band : SMA - 2 standard deviations.
இந்த Upper Band & Lower Band மார்க்கெட்டில் high volatility இருக்கும் போது விரிவடையும் (expand ஆகும்). low volatility நிலவும் போது சுருங்கும் (contract ஆகும்).
Bollinger Bands Strategy – Bearish Trend
Step 1: Entry Signal
Open a short position when price crosses below the middle band.
அதாவது சந்தை விலை மேல்நோக்கிய வேகத்தை இழந்து மீண்டும் கீழ்நோக்கிய போக்கைத் தொடங்கியுள்ளது என்று இதற்கு அர்த்தம்.
Step 2: Stop Loss
Place stop loss above the previous swing high
எதிர்பாராத விதமாக சந்தையின் போக்கு தலைகீழாக மாறினால், இது உங்கள் இழப்புகளைக் குறைக்க உதவும்.
Step 3: Target
target the lower band as your first profit zone.
middle bandக்கு கீழ் விலை சரியும் போது position short செய்திருந்தால் lower band ஐ உங்கள் முதல் லாப பகுதியாக கருதலாம். மேலும் அப்போது நிலவும் ட்ரெண்ட்டிற்கு ஏற்றவாறு Trailing Stop Loss செய்து டார்கெட்டை நகர்த்தலாம். Risk Reward Ratio 1:2 அல்லது 1:3 அதாவது உங்களது stop loss 10 பாயின்டுகள் என்றால் 20 முதல் 30 பாயிண்டுகள் டார்கெட் செய்யலாம்.
Bollinger Bands Strategy – Rangebound (Sideways)
Upper Band as resistance (sell zone)
Lower Band as support (buy zone)
Disclaimer: for education purpose only