20/11/2025
மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்.. நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மல்லப்பாடி கிராமத்தில் உள்ள மந்தை வீதி தெரு ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் மல்லப்பாடி கிராமத்தில் சேகரிக்கும் குப்பைகளை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் குப்பைகளை கொட்ட ஒதுக்கப்பட்ட நாடார் கொட்டாய் சுப்பன் தோப்பு அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டி மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து அகற்றுவதை தவித்து தினமும் மல்லப்பாடி ஆற்றில் கொட்டி தண்ணீரை மாசுபடுத்துகின்றனர்இந்த நீரை பயன்படுத்தும் பொது மக்கள் கால்நடைகளுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து கொழுத்தி விடுகின்றனர் இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி மற்றும் அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கு குடியிருக்கும் 100 மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி சுவாச கோளாறுகள் ஏற்பட்டு தினமும் சிரமப்படுகின்றனர் இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் அவர்கள் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தவில்லை எனவே ஆற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.