R TV

R TV R TV is an online page. You can get all the political-related news, politician speech, Tami

மாற்றத்திற்கான புதிய பாதையைத் தொடங்கியிருக்கும் K.Annamalai  அண்ணாமலை அவர்களின் சொல்லுக்கு இணங்க, 'WE THE LEADERS FOUNDA...
06/06/2026

மாற்றத்திற்கான புதிய பாதையைத் தொடங்கியிருக்கும் K.Annamalai அண்ணாமலை அவர்களின் சொல்லுக்கு இணங்க, 'WE THE LEADERS FOUNDATION' அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டேன்.
இனிவரும் காலங்களில் நமது இயக்கத்தின் அனைத்து செயல்பாட்டிற்கும் எனது முழு பங்களிப்பையும் செயல்திறனையும் நேர்மையாகவும் உண்மையாகவும் வழங்குவேன். சமூக மாற்றத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் நம்முடைய புதிய களம் அமையட்டும்!
வாழ்க வளமுடன்! 🤝🔥

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்‌, முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது, பணி சிறக்க வாழ்த்து...
13/05/2026

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்‌, முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது, பணி சிறக்க வாழ்த்துக்கள்…!
Rama Gobi R TV Vijay tamilaga vettri kazhagam

" நல்லது வீட்டை விட்டு கிளம்பும் முன் கெட்டது ஊரை சுற்றி வந்து விடும் " விஜய் சரவணன்  7 வருசத்துக்கு மேல   காலை மற்றும் ...
07/05/2026

" நல்லது வீட்டை விட்டு கிளம்பும் முன் கெட்டது ஊரை சுற்றி வந்து விடும் "
விஜய் சரவணன் 7 வருசத்துக்கு மேல காலை மற்றும் மதியம் பழைய பேருந்து நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரியில் ஒரு நாள் கூட விடாம 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமா சாப்பாடு போட்டுட்டு இருக்கார். அது இந்த தேர்தல் நேரத்திலும் வெளில வரல அவங்க கட்சிக்காரங்களுக்கும் அதை வைரலாக்க தெரியல. ஆனா பல வருடம் முன்னால அவர் குடிச்ச வீடியோ இப்போ டைம் லைன் முழுக்க வைரலா பரவி கிடக்கு. இதை மூணு வேலையும் குடிக்கிறவனுங்க கூட பரபரப்பா ஷேர் பண்ணிட்டு இருக்கானுங்க . நாம குடிக்கிற வீடியோ வெளில வர வரைக்கும் நாமளும் யோக்கியன் மாறி அத பரப்பிட்டு இருக்கலாம். எளியவர்கள் வந்தா வாய்ப்பு குடுங்க உடனே அவங்கள நசுக்க நினைக்காதீங்க. அடுத்தவங்களையும் கொஞ்சம் வாழ விடுங்கப்பா...

11/04/2026
11/04/2026

Elakurichi, Adaikala Madha Shrine - 295th Annual Feast Celebration - 18 April to 27 April 2026

01/04/2026

ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா திருவிழா‡ 2026 ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி கொடியேற்றம் துவக்க விழா.
ஏப்ரல் மாதம் 23 24 25 26 தேதிகளில் திருவிழா நடைபெறும்.

R TV Rama Gobi

தெருவுல நிறுத்தாம ஓயமாட்டாங்க போல...
01/04/2026

தெருவுல நிறுத்தாம ஓயமாட்டாங்க போல...

கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.அதில் வயதில் மூத்த நரிக்...
31/03/2026

கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது.
இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக
முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு?
தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத, முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்.

திருமாவிற்கு அடுத்து விசிகவின் அடையாளம் ஆளூரார் மட்டுமே. என ஷாநவாஸின் வளர்ச்சியை விசிக வின் சில மூத்த நிர்வாகிகள் பொறுத்...
30/03/2026

திருமாவிற்கு அடுத்து விசிகவின் அடையாளம் ஆளூரார் மட்டுமே. என
ஷாநவாஸின் வளர்ச்சியை விசிக வின் சில மூத்த நிர்வாகிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல், குறிப்பாக Thol.Thirumavalavan அவர்களுக்கு அடுத்ததாக கட்சியின் அடையாளமாக தலித் அல்லாத ஒருவர் முன்னிலையாகிவிடக்கூடும் என்கிற நல்ல எண்ணத்தில் மூத்த நிர்வாகிகள் பலரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஷாநவாஸ் மாநில அரசியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளார் என்பதே பேசு பொருளாய் இருக்கிறது
உண்மையில், ஷாநவாஸின் பேச்சுகள் தலித் அல்லாத மக்களிடம் விசிக வின் கொள்கைகளை பெருவாரியாக கொண்டு சென்றது. திருமாவின் குரலாக அனைத்து தளங்களிலும் ஒலித்தவர் ஷாநவாஸ்.
விசிக வில் திருமா தவிர்த்து மற்றவர்களின் பேச்சுகளும் முகங்களும் பரவலாக சென்று சேராத சூழலில், அதை உடைத்து ஷாநவாஸ் மட்டுமே அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தார். தினமும் விவாத நிகழ்ச்சிகளில் அவரைப் பார்த்து பல தலித் அல்லாதவர்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கலாம் என்பதே என் நம்பிக்கை. ஆனால் இதையெல்லாம் தலித் ஒருவரே செய்ய வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையால் ஏற்பட்ட நெருக்கடியால் இன்று ஷாநவாஸ் விலக்கப்பட்டுள்ளார்.
இப்படிப்பட்ட ஒருவரை சதியால் விலக்கியது, உள்ளபடியே விசிகவுக்கும் திருமாவுக்கும் பெரிய நட்டமாகும்.
அவரிடம் பேசி தான் இதை செய்திருப்பார். இல்லை புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க மறுக்கப்பட்டு இருக்கலாம்/ டெல்லி யில் விசிகவின் முகமா செயல்படுவார் என பல பல ஆருடங்கள் .ஒரு திமுககாரணாக அவருக்கு அநீதி அழைக்கப்பட்டு இருக்கிறது என்பது தான் எங்கருத்து
மற்றபடி ஷாநவாஸ் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் மக்களால் கொண்டாடப்படுவார்....

Thol.Thirumavalavan

இது போன்ற  #டிசைன்கள்...Rs100  கட்டணத்தில்1 மணிநேரத்தில் கிடைக்கும்தேவைக்கு... : 9787225612
25/03/2026

இது போன்ற #டிசைன்கள்...
Rs100 கட்டணத்தில்
1 மணிநேரத்தில் கிடைக்கும்
தேவைக்கு... : 9787225612

Address

ELAKURICHY
Ariyalur

Alerts

Be the first to know and let us send you an email when R TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R TV:

Share