Ariyalur Times

Ariyalur Times (Top Tamil News, Breaking News ,Latest Tamil News)

 #மறைநீர் (Virtual water)...!!!! மறைந்திருக்கும் நீர் அரசியல் என்னென்ன?? #விழிப்புணர்வுபதிவு...'உலகில் பலர் காதலிக்காமல்...
28/08/2023

#மறைநீர் (Virtual water)...!!!!
மறைந்திருக்கும் நீர் அரசியல் என்னென்ன??

#விழிப்புணர்வுபதிவு...

'உலகில் பலர் காதலிக்காமல் வாழ்ந்து மடிந்து இருக்கலாம்... ஆனால் நீர் இல்லாமல் ஒருவரும் வாழ்ந்து விட முடியாது'- உலககவிஞர் ஹோடன்

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம்.

மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

ஒரு ஏ4 அளவு பேப்பர் - 11 லிட்டர் தண்ணீர்
ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீர் - 5 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பீர் - 74 லிட்டர் தண்ணீர்
ஒரு பர்கர் - 300 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பால் - 208 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் ஒயின் - 118 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜோடி காலணி - 7770 லிட்டர் தண்ணீர்
ஒரு டி ஷர்ட் - 1960 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜீன்ஸ் - 6660 லிட்டர் தண்ணீர்
ஒரு பார் சாக்லேட் - 2500 லிட்டர் தண்ணீர்
1.1 டன் எடையுள்ள கார் - 4 லட்சம் லிட்டர் தண்ணீர்

#புத்திசாலிநாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

#இதுஇந்திய_நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

5 ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்..

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீரை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்!

ஏன் உலக நாடுகள் இங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அங்கு இல்லாத தொழில் நுட்பமா, அங்கு இல்லாத வளங்களா, அங்கு இல்லாத எந்திரங்களா? பிறகு ஏன் உலக நாடுகள் இந்தியாவில் கடை போடுகின்றன. காரணம் தங்கள் வளங்களின் மீது அவர்களுக்குள்ள அக்கறை. அவற்றை பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்கள். மனித வளச் சுரண்டலையும், இயற்கை வளச் சுரண்டலையும் செய்ய அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாம்தான் வளங்களை வாரிக் கொடுப்பதில் வள்ளல்கள் ஆயிற்றே.

நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களால் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. மாறாக பொருட்களின் வழியே பல கோடி லிட்டர் தண்ணீரையே ஏற்றுமதி செய்கிறோம்.

நம் கண்ணுக்குத் தெரியாமலேயே நாமே நம் நீர் ஆதாரங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பெரும்பாலான பொருட்களை உலக நாடுகள் நம் நாட்டிலிருந்துதான் உற்பத்தி செய்து இறக்குமதி செய்துகொள்கின்றன.

மேலும் அந்தப் பொருட்கள் இங்குள்ள எல்லோருக்குமானவையாகவும் இல்லை என்பது மற்றொரு சோகம். பணம் படைத்தவர்கள்தான் ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் திருடு போவதோ, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதோ பெரும்பாலானோருக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. அந்த வகையில் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது சோகம்.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
.. இந்த தண்ணீரை வரவைக்க மரங்களை வளர்க்க வேண்டும் அந்த மரங்களின் மதிப்பு தனது வாழ்நாளில் ஒரு மரம் கிட்டத்தட்ட 55 லட்சம் ரூபாய்க்கு மறைமுகமாக இந்த பூமிக்கும் மக்களுக்கும் சேவை செய்கிறது

#மறைநீர்

27/08/2023

FYI...

★தெரிந்து கொள்வோம்★நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது.பெரும்பாலும் அ...
26/08/2023

★தெரிந்து கொள்வோம்★

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது.பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..!

#சர்வே_புல_வரைப்படத்தில்_கண்டிப்பாக #தெரிந்து_கொள்ள_வேண்டிய
ுக்கிய_செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

★நிலத்தை அளக்கும் அளவு முறைகள்★

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

★நில அளவீடுகள்★

1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

★ஏக்கர்★

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

★செண்ட்★

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

★ஹெக்டேர்★

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

★ஏர்ஸ்★

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங்,
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

. 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

★நிலவளவை குழிக்கணக்கு வருமாறு★

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

★கன்வெர்ஷன்★

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

★நில அளவை★

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி

நாளை நிலவை முத்தமிட உள்ள பாரதம்🇮🇳சந்திரயானிடம் இருந்து தற்போது அனுப்பப்பட்ட நிலவின் படம்என் தேசம் என் பெருமை🇮🇳
22/08/2023

நாளை நிலவை முத்தமிட உள்ள பாரதம்🇮🇳

சந்திரயானிடம் இருந்து தற்போது அனுப்பப்பட்ட நிலவின் படம்

என் தேசம் என் பெருமை🇮🇳

22/06/2023

22/06/2023

20/06/2023
 #அரியலூர்‌ மாவட்டம்  #வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவன்  #கார்த்திக் நடைபெற்று முடிந்த முதலமைச்சர் கோப்பை காண வ...
19/06/2023

#அரியலூர்‌ மாவட்டம்
#வாளரக்குறிச்சி கிராமத்தைச்
சேர்ந்த மாணவன் #கார்த்திக்
நடைபெற்று முடிந்த முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு 1500M ஒட்டபந்தயத்தில்🥈இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
வாழ்த்துக்கள் தம்பி🏆

  || இந்தியாவையே புரட்டிப்போட்ட ஒடிசா ரயில் விபத்து… உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் |   |   |  ...
03/06/2023

|| இந்தியாவையே புரட்டிப்போட்ட ஒடிசா ரயில் விபத்து… உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் | | | | | |

Address

Ariyalur
621804

Alerts

Be the first to know and let us send you an email when Ariyalur Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariyalur Times:

Share