19/11/2025
2நாளா இந்த பையன் தான் சமூக ஊடகத்தில் பேசும் பொருள் ஆகியவன். சில தற்குறி இளைஞர்களை போல இவனையும் நினைத்தது வாய்க்கு வந்தபடி வசைபடியாது தான் வேதனையின் உச்சம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த அஜய் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வருகிறார். உடன் பகுதி நேரமாக டிராக்டர் ஓட்டும் விவசாய பணிக்கும் செல்கிறார் அதில் குறைந்தது மாதம் 50,000 வரை இந்த 21 வயதில் வருமானம் ஈட்டுகிறார் .
நடுத்தர குடும்பமாக இருந்தாலும் 3ஏக்கர் நிலம் ஒரு மாடி வீடு என ஓரளவு தாக்குபிடிக்க கூடியவர்கள் தான் இது அந்த பையனின் பின்புலம் சரி இப்ப விஷயத்துக்கு வருவோம் இந்த வாகனம் எடுக்கும் போது அவரோட உடன் இருந்தது அவர் தாய் கிடையாது அவுங்க அத்தை.
பைக் வாங்க 2வருஷமாக பகுதி நேர வேலை பார்த்து வீட்டுக்கும் கொடுத்து தன்னுடைய செலவையும் பார்த்து சேர்த்து வைத்த பணத்தில் தான் இந்த பைக்கை வாங்கியிருக்கார் எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ளவர்களை அழைத்திருக்கிறார் கொஞ்சம் தொலைவு என்பதால் பெற்றோர் வரவில்லை அரியலூர் நகரில் ஆலோ பிளாக் கல் தயாரிக்கும் சிறு தொழில் செய்து வரும் தன் அத்தையை அந்த நிறுவனத்தில் இருந்து கையோடு அழைத்து தனது கனவை நிறைவேறிய மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார் அவ்வளவு தான் ஆனால் நேற்று முதல் எத்தனை வசைப்பாடு? அந்த பையன் கனவு நிறைவேறிய சந்தோஷத்தை விட்டு மன உளைச்சலுக்கு ஆளாகினான்.
பைக் வாங்கி தரலனா செத்துடுவேன்னு வீட்டை மிரட்டுவோர் மத்தியில் யாரையும் வருத்தாமல் தன் உழைப்பில் வாங்குவதற்கு இந்தக்காலத்தில் கூட குடும்பத்தை உணர்ந்த பையன்னு தூக்கி வச்சி கொண்டாடியிருக்கணும் ஆனா அவச்சொல்.
அந்த அம்மா கழுத்து காதில் ஒன்னும் இல்லைன்னு சொன்னாங்க ஆலோ பிளாக் தொழில் செய்பவர் அதில் பணியும் செய்கிறார் சிமெண்டில் வேலை செய்பவர் நகை நட்டு, பட்டு புடவை கட்டியா வேலை செய்வாங்க ?
குடிச்சிட்டு ஊரை சுத்தி பெற்றோரை துன்பமுற செய்யும் இக்கால இளைஞர்கள் மத்தியில் வீட்டை யாரும் வருத்தமா தனக்கான தேவையை 21 வயதில் நீ செய்தது நான் மட்டுமல்ல இந்த வன்னிய இனமும் பெருமை கொள்கிறது.
வாழ்த்துக்கள் அஜய் 🔥💛
பதிவு : Padaiyatchiyar