Muthuraj

Muthuraj The Common Man

08/12/2022
சென்னை, காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துஇருசக்கர வாகனத்தில்...
18/11/2022

சென்னை, காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி லதா உயிரிழப்பு

நிறுத்தாமல் சென்ற பேருந்தை மடக்கி பிடித்த பொதுமக்கள்

சுனேரி மஹால்மகாராஷ்ரா மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் சுனேரி மஹால் என்ற ஒரு அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையில்தான் இந்த...
13/11/2022

சுனேரி மஹால்
மகாராஷ்ரா மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் சுனேரி மஹால் என்ற ஒரு அரண்மனை உள்ளது.

இந்த அரண்மனையில்தான் இந்தியாவின் முதல் மன்னர் ஒளரங்கசீப், 1707ல், மார்ச் 3ம் தேதி காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்றைய பாகிஸ்தான் பார்டரில் இருந்து விழுப்புரத்தில் உள்ள செஞ்சி வரை ஆட்சி செய்ததால் இந்தியாவின் முதல் பேரரசர் என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.

அதை ஏன் சொல்றேனா.. அவர் கூட மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தி வெற்றியும் கண்டவர்.

அவரது ஆட்சியில் கஞ்சா புகைப்பது, பாங் எனும் மதுபானத்தை அருந்தவும் தடை விதித்திருந்தார்.

மன்னரின் இந்த நடவடிக்கை மதத்தின் பெயரால் மதுவை பிஸினஸ் செய்தவர்களுக்கு கடுமையான எரிச்சலை தந்தது. தடையை மீறி பின்னிரவுகளில் போதையில் களியாட்டம் போட்டனர்.

அதனால்தான் அவர் இறந்த சில நாட்களில் போல்வார் மைதானம் என்ற இடத்தில் சாராய கடை திறக்கப்பட்டது. மது வழிந்து ஓடியது.

அன்று ஒட துவங்கியது இன்றும் ஓடிக் கொண்டு இருக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்துவோம் என ஆட்சிக்கு வந்த விடியல் ஆட்சியிலும் அது நிற்கவில்லை.

சுனேரி மஹால் மகாராஷ்ரா மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் சுனேரி மஹால் என்ற ஒரு அரண்மனை உள்ளது.  இந்த அரண்மனை.....

பாலே தேறல...  பாயாசம் கேக்குதா...  செய்திக்கு  #விருதுநகர்  #கலெக்டர் எதிர்வினை
12/11/2022

பாலே தேறல... பாயாசம் கேக்குதா... செய்திக்கு #விருதுநகர் #கலெக்டர் எதிர்வினை

தன்னிகரில்லாத் தலைவன் தந்தை பெரியாரை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யும் நூல் பெரியார் தாத்தா. நூற்றுக்கணக்கான வண்ணப் படங்க...
30/10/2022

தன்னிகரில்லாத் தலைவன் தந்தை பெரியாரை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யும் நூல் பெரியார் தாத்தா. நூற்றுக்கணக்கான வண்ணப் படங்கள், வழுவழுப்பான தாளில் காமிக்ஸ் போல அச்சிடப்பட்ட புத்தகம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்! பெரியார் தாத்தா. அருண் மோ எழுதிய நூல்...

தொடர்புக்கு: 9840644916

20/10/2022

ஒரு ஊருல அரசு பள்ளி ஒன்றுக்கு பிரபல நிறுவனத்தோட முதலாளி மதில் சுவர் கட்ட நினைத்தார்.
அதுக்காக அவர் தன் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியை கொடுக்க முன்வந்தார்.
அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளிக்கு மதில் சுவர் வருகிறதே என சம்மதித்தார்.

இதை கேள்விப்பட்ட அந்த ஊர் அரசியல் முக்கியஸ்தர் கட்சிக்கு சேர வேண்டிய பணத்த கொடுத்தால் பணி துவங்க முடியும்னு ஒரு மிரட்டல விட்டு இருக்காரு...
சி.எஸ்.ஆர். நிதியிலும் கமிஷன் கேப்பிங்கலானு அந்த நல்ல மனுசன் ஊர விட்டே ஓடிட்டான்.
அந்த ஊருதான் ஆவடி... அங்கதான் நானும் இருக்கேன். நீங்களும் இருக்கீங்க.
ஆனா இந்த மேட்டர் தினமும் காலையில எழுந்து சுருங்கிய சட்டையோட அந்த பள்ளிக்கு போரானே கறி கடை பாயோட மகன். அவனுக்கு தெரியுமா?
இல்ல அந்த கறி கடை பாய்க்குதான் தெரியுமா?
அவருக்கு ஒரு கிலோ கறி வித்தா 50 முதல் 80 ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும். இந்த இடத்துல கமிஷன்னு சொன்னதுக்கு காரணம் இருக்கு. இப்பல்லாம் வருமானம் எல்லாமே கமிஷன்தானே...
ஆனா அரசியல் முக்கியஸ்தருக்கு அப்படியில்ல. ஒரு டெண்டர் பாஸ் ஆனா போதும்.
இதுக்கு அவர் செய்தது ஓட்டு கேட்டது. அதுக்கு நாம செய்தது ஓட்டு போட்டது.

https://writermuthuraj.wordpress.com/2022/10/21/%e0%ae%8a%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%a9/

09/10/2022

இந்தியாவில் 2020க்கு முந்தைய 70 ஆண்டுகளில் 5 கோடியே 60 லட்சம் பேரை நடுத்தர வர்க்கத்தில் இருந்து ஏழையாக மாற்றி வைத்து இருக்கிறது நம் அரசு என்கிறது உலக வங்கி.

இன்றைய தேதியில், ஒரு டாலருக்கு உண்டான ரூபாயின் மதிப்பு 82.83₹.
5 வருடத்திற்கு முன் ரூபாயின் மதிப்பு 65₹.

இதன் காரணமாக இனிமேல் வெளிநாட்டில் இருந்து பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏழை இந்தியாவால் வாங்க முடியாது.

ஆனால் பணக்கார இந்தியாவால் தற்சமயம் பருப்பு, எண்ணெய் வாங்குவதில் எந்த சிரமமும் இருக்காது.

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற சிறுகதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.  அதில் ஏழை எழுத்தாளர் முருக...
02/10/2022

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற சிறுகதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

அதில் ஏழை எழுத்தாளர் முருகதாசரின் ஒரு நாள் வாழ்க்கையை நமக்கு எடுத்துக் கூறியிருப்பார்.

அந்த கால கட்டத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சுதந்திரத்திற்கு முன்பு, ஒரு கிலோ அரிசியின் விலை என்னவென்று அறிந்திருக்க வேண்டும்.

அப்போது ஒரு கிலோ அரிசியின் விலை 12 பைசா, ஒரு கிலோ சர்க்கரை 40 பைசா, ஒரு கிலோ உருளை 25 பைசா. ஒரு லிட்டர் பாலின் விலை 12 பைசா.

இந்த சிறுகதையில் ஒரு இடத்தில் முருகதாசர், தன் நண்பரிடம் 3 ரூபாய் கேட்பார்.

அவர் தயங்கியபடி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எட்டணா இருக்கிறது என்று கொடுத்துவிட்டுச் செல்வார்.

அன்றைக்கு 3 ரூபாய் இருந்தால் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி விடலாம்.

அன்றைய காலகட்டத்தில் ஒரு கிலோ உருளை கிழங்கின் விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி விடலாம்.

குறைந்தபட்சம் 140 ரூபாய் இருந்தால் ஒரு விமான டிக்கெட் வாங்கலாம். 90 ரூபாய் இருந்தால் 10 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம்.

அப்போது 1 ரூபாயின் மதிப்பு 1 டாலராக இருந்தது.

இந்த கதையில் முருகதாசரின் வறுமையை புதுமைப்பித்தன் வார்த்தைகளால் சொல்லி கடந்து சென்றிருப்பார்.

அந்த வார்த்தைகளால் நமக்கு சோகம் ஏற்படாது, வருத்தம் ஏற்படாது. ஆனால் வறுமை என்னவென்று புரியும்.


எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற சிறுகதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஏழை எழுத்.....

Address

Avadi

Alerts

Be the first to know and let us send you an email when Muthuraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muthuraj:

Share