அன்புமணியின் தம்பிகள்

அன்புமணியின் தம்பிகள் Journalist

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு நாள் மாநாடு: இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்!சித்திரை முழுநி...
17/04/2025

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு நாள்
மாநாடு: இதுவரை நடந்தவற்றை விட
100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்!

சித்திரை முழுநிலவு நாள் என்றாலே மாமல்லபுரத்து கடற்கரையும், அங்குள்ள மணல்களின் எண்ணிக்கையை விஞ்சும் அளவுக்கு கூடியிருக்கும் பாட்டாளி சொந்தங்களின் எண்ணிக்கையும் தான் எனக்கு நினைவுக்கு வரும்.

1988-ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் பு.தா. இளங்கோவன். அவருக்குப் பிறகு குருபரன், பு.தா.அருள்மொழி ஆகியோர் சித்திரை முழுநிலவு மாநாடுகளை சிறப்பாக நடத்தினார்கள்.

2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டை மாவீரன் குரு தலைமையேற்று நடத்தினார். அதன்பின் தேர்தல் ஆண்டுகள் தவிர, 2013 ஆம் ஆண்டு வரை 10 சித்திரை முழுநிலவு விழாக்களை மாவீரன் குரு தான் நடத்தினார். 1988-ஆம் ஆண்டு முதல் 2013 வரை நடைபெற்ற 20 சித்திரை முழுநிலவு மாநாடுகளில் சரிபாதி மாநாடுகளை தலைமையேற்று நடத்திய பெருமை அவருக்கு உண்டு.

அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ஆம் ஆண்டில் நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக மருத்துவர் அன்புமணியை நியமித்திருக்கிறேன்.

மாமல்லபுரம் மாநாட்டுக்கான பணிகள் இப்போது தீவிரமடைந்திருக்கின்றன. பந்தல்கால் நடப்பட்டிருக்கிறது. மாநாட்டுப் பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதைப் பார்க்கும் போது என் மனதில் இதுவரை நடந்த சித்திரை முழுநிலவு நாள் கொண்டாட்டங்கள் குறித்த மலரும் நினைவுகள் தான் நிறைகின்றன. அந்தக் கொண்டாட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவீரன் குரு எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்வார்... எங்கெல்லாம் சுற்றித் திரிவார்... ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டத்தை அன்பும், கண்டிப்பும் கலந்த தனது பார்வையால் எப்படியெல்லாம் கட்டுப்படுத்துவார் என்பது குறித்த நினைவுகள் தான் மனதிற்குள் வந்து வந்து செல்கின்றன.

இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணமும், கிறித்தவர்களுக்கு ஜெருசலேம் பயணமும், இறை நம்பிக்கைக் கொண்ட இந்துக்களுக்கு காசி யாத்திரையும் புனிதமானவை. பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருநாள் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் கடற்கரை மணற்பரப்பில் கூடுவது தான் புனித யாத்திரை. இந்த ஒரு பயணம் கொடுக்கும் உற்சாகம் பாட்டாளிகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு சுறுசுறுப்பாக பணியாற்ற வகை செய்யும்.
பிறந்த நாள்....
திருமண நாள்....
வரிசையில் ஒவ்வொரு பாட்டாளியும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நாள் சித்திரை முழுநிலவு நாள் தான்.

சித்திரை முழுநிலவு நாளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள் நமது சொந்தங்களை மகிழ வைக்கும்.

இதுவரை நடத்தப்பட்ட 20 மாநாடுகள் எவ்வாறு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடத்தப்பட்டனவோ, அதை விட 100 மடங்கு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் இந்த ஆண்டு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது கனவு ஆகும்.

அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் கிராமங்களில் தொடங்கி மாநிலம் வரை அனைத்து நிலைகளிலும் மாநாட்டுப் பணிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களில் இருந்தும் அணி அணியாய் வாகனங்கள் புறப்பட வேண்டும். எல்லா ஊர்களிலும் சுவர் விளம்பரங்களும், பதாகைகளும் விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும்.

சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இந்த மாநாட்டை வன்னியர் சங்கம் நடத்தினாலும் இது அனைத்து சமூகங்களுக்குமான மாநாடு; சமூகநீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.

இவை அனைத்தையும் விட மிகவும் முக்கியம்.... மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும். பயணப் பாதையில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மாமல்லபுரம் மாநாட்டுத் திடலில் பாட்டாளிகளின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன்.

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நானே தலைவராக செயல்படுவேன்.- மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ✨
12/04/2025

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில்
நானே தலைவராக செயல்படுவேன்.

- மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ✨

மத்திய அரசின் பதிலால் கிழிந்த திமுகவின் சமூகநீதி முகமூடி.. போட்டுடைத்த அன்புமணி!தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்...
21/03/2025

மத்திய அரசின் பதிலால் கிழிந்த திமுகவின் சமூகநீதி முகமூடி.. போட்டுடைத்த அன்புமணி!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பீகார் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி வருகிறது.

மேலும் மத்திய அரசுதான் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாதி வெறி கணக்கெடுப்பு மற்றும் சமூக நீதி விவாகரத்தில் திமுக அரசின் முகமூடி கிழிந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காரணம்
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெயிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என தமிழக அரசு கூறியுள்ளது தெரியவந்துள்ளதாகவும் இதன்மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசிடம் எந்த விளக்கத்தையுமே பெறாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார் என்றும் 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என முதல்வர் ஸ்டாலினுக்கு யார் கூறியது என்று தெரியவில்லை எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமே பெறாமல் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவதன் மூலம் தமிழக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற அக்கறையோ, விருப்பமோ அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது என்றும் அன்புமடிண ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் மீது பழியைப் போட்டு மக்களை ஏமாற்றலாம் என்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம் என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

NLC-க்கு நிலத்தை பிடுங்கி தரும் திமுக அரசு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் சட்டமும் இதில் தெளிவாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசுடன் எந்த விளக்கமும் கேட்காததன் மூலம் திமுக அரசின் சமூகநீதி முகமூடி கிழிந்து விட்டது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக நீதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை திமுக அரசால் இனியும் ஏமாற்ற முடியாது என்றும் எச்சரித்துள்ள அன்புமணி ராமதாஸ், பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பாமகவினர், மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த பாமக தலைவர் அன்புமணி! ராணிப்பேட்டை மாவட்டத்தில...
17/01/2025

தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பாமகவினர், மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த பாமக தலைவர் அன்புமணி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாதிவெறியும் கஞ்சா போதையும் தலைக்கேறிய 6 விசிகவினர் செய்த படுபாதக செயலில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு போராடுகிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீசியதில் தீவிர தீக்காயமடைத்த இருவர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி அவர்கள் ஆறுதல் தெரிவித்து, நலம் விசாரித்தார்.

இன்று இராணிப்பேட்டையில் பாமகவினர் நீதிக்கேட்டு போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'அதானி விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம்' - ராமதாஸ் மீதான ஸ்டாலின் விமர்சனத்துக்கு அண்ணாமலை கண்டனம்ராமதாஸ் அவர்கள் கேட்டி...
26/11/2024

'அதானி விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம்' - ராமதாஸ் மீதான ஸ்டாலின் விமர்சனத்துக்கு அண்ணாமலை கண்டனம்

ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது.

அதானி, நாட்டில் உள்ள மாநில மின் வாரியங்கள் மற்றும் தேசிய பொதுத்துறை சோலார் மின் நிறுவன அதிகாரிகளுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் அதானி நிறுவனத்துக்குமான தொடர்பு குறித்து ராமதாஸ் எழுப்பியுள்ள கேள்வி முக்கிய விவாதமாக எழுந்துள்ளது.

ராமதாஸ் தனது அறிக்கையில் அதானி மற்றும் தமிழக முதல்வருக்கு இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக குறிப்பிட்ட நிலையில் இன்று பத்திரிகையாளர்கள் முதலமைச்சரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

மு.க.ஸ்டாலின்

அதற்கு முதல்வர் ஸ்டாலின், "அதானி - திமுக உறவு குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே பேசிவிட்டார். அதற்குப் பிறகு அதில் பேச எதுவுமில்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" எனப் பதிலளித்தார்.

முதல்வரின் பதில் மரியாதையற்றதாக இருப்பதாக பாமக, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பியிருந்தனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை, "தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மருத்துவர் ராமதாஸ்

இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான, ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும். ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

அண்ணாமலை

அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்." என தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"கேள்வியில் என்ன தவறு இருக்கிறது; ராமதாஸிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்"-அன்புமணி ராமதாஸ்தனது பேச்சுக்கு வருத்...
25/11/2024

"கேள்வியில் என்ன தவறு இருக்கிறது; ராமதாஸிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்"-அன்புமணி ராமதாஸ்

தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதானி உடனான சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், "ராமதாஸூக்கு வேறு வேலை இல்லை; தினம் எதாவது அறிக்கை வெளியிட்டுக்கொண்டு இருப்பார். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

ராமதாஸூக்கு வேறு வேலை இல்லை; தினம் எதாவது அறிக்கை வெளியிட்டுக்கொண்டு இருப்பார். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ். "பிரதமர் மோடியால் போற்றப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் ஐயா ராமதாஸை மதிக்கிற இந்த சூழலில், ஒரு முதலமைச்சர் இவ்வளவு ஆணவத்துடன் பேசுவது பதவிக்கு அழகு கிடையாது. எங்கள் ஐயா கேள்வி கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. கெளதம் அதானியை உங்கள் இல்லத்தில் எதற்கு இரகசியமாக சந்தித்தீர்கள் என்று கேட்டார். அதில் என்ன தவறு உள்ளது.

எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களின் உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது உங்களின் கடமை. அதனைவிட்டுவிட்டு மருத்துவர் ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மருத்துவர் ஐயா இல்லையென்றால், கலைஞர் 2006ல் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா தொடர்ந்து விமர்சனம் செய்த அந்த காலத்திலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களின் முழு ஆதரவை கொடுத்தோம். அதனால்தான் கலைஞர் 5 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தார். முக.ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கினார் . மருத்துவர் ஐயா இல்லையென்றால் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது, மணிமண்டபம் வந்திருக்காது. நாங்கள் போட்ட வழக்கை திரும்பப் பெற்றதால்தான் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய நீதிபதி தீர்ப்பு கொடுத்தார்.

மருத்துவர் ஐயா இல்லையென்றால் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது, மணிமண்டபம் வந்திருக்காது.

ஒரு மூத்த அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதியை பார்த்து அவருக்கு "வேறு வேலை இல்லையென்று" சொல்வது எவ்வளவு ஆணவம். கலைஞரிடம் ஸ்டாலின் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்களே ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... அதுவும் பாமக தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை

இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், "ராமதாஸின் கேள்விக்கு தரக்குறைவாக முதல்வர் பதில் அளித்தது கண்டிக்கத்தக்கது. அதானி நிறுவனத்துடன் திமுக அரசு, குடும்பத்தாருக்கு தொடர்பு என்ற செய்தியை மறைக்க முயற்சி; அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு" என்று தெரிவித்துள்ளார்.

16/11/2024

Address

Vanniyar Street
Chennai Port Trust
600005

Alerts

Be the first to know and let us send you an email when அன்புமணியின் தம்பிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share