தேவா

தேவா How can I curse whom God has not cursed? How can I hate whom the Lord does not hate?
(3)

(தேவன் சபிக்காதவனை நான் சபிப்ப தெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பது எப்படி?)

22/09/2025

நாம், நம் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாம் மட்டுமே முழுப் பொறுப்பாளிகள்.

22/09/2025

பாட்டில் அறுபதாயிரம் ரூபாய்க்கு வாங்கி குடிக்கிறவனே போய் சேந்துட்டானா...
அப்ப 100 ரூபாய்க்கு மட்டமான சரக்கு வாங்கி குடிக்கிறவனோட கதி...

உலகின் மிகக் குறுகலான நதி, ஆனால் இது 17 கிலோமீட்டர் நீளம் கொண்டது.... ஆச்சரியம்தான்! (Hualai River - மங்கோலியா)சில சென்ட...
22/09/2025

உலகின் மிகக் குறுகலான நதி, ஆனால் இது 17 கிலோமீட்டர் நீளம் கொண்டது.... ஆச்சரியம்தான்! (Hualai River - மங்கோலியா)

சில சென்டிமீட்டர் மட்டுமே அதாவது ஒரே தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி .
நதிகள் என்றவுடன் அகண்டு விரிந்து பல கிலோமீட்டர்களுக்கு கடந்து செல்வதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பாயும் நதிகள் ஏராளம் உள்ளன. ஆனால் சில சென்டிமீட்டர் மட்டுமே அதாவது ஒரே தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ள ஹுவாலை (Hualai) நதி தான் உலகிலேயே மிக குறுகலான நதி ஆகும்.
இந்த நதியானது 17 கிலோமீட்டர் மட்டுமே நீளம் கொண்டது. அதன் அகலம் வெறும் 4 செமீ முதல் 15 சென்டிமீட்டர் வரை மட்டுமே.
Hualai போன்ற ஒரு நதி உண்மையில் இருக்கிறது என்பதை நம்புவது கடினம். ஆனால் சீன நிபுணர்களின் கூற்றுப்படி, அது குறைந்தது 10,000 ஆண்டுகளாக கோங்கர் புல்வெளி வழியாக பாய்கிறது என்கின்றனர்.
ஹுவாலை நதி ஒரு நிலத்தடி நீரூற்றில் இருந்து உருவாகிறது. ஹெக்சிக்டன் புல்லேண்ட்ஸ் இயற்கை காப்பகத்தில் உள்ள தலாய் நூர் ஏரியில் பாய்கிறது.
ஹுவாலையை நதியாகக் கூட கருத முடியாத அளவுக்கு குறுகலானது என்று சிலர் கூறினாலும், ஆறுகள், ஓடைகள் மற்றும் சிற்றோடைகளுக்கு இடையே அளவு வேறுபடுத்திக் காட்டும் காரணியாக இல்லை என்பதே உண்மை. இந்த நதி ஒரு நிரந்தர நீர்நிலையாகும். இது ஆண்டு முழுவதும் சீராக பாய்கிறது.
ஹுவாலை 'புத்தகப் பாலம் நதி' என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு சிறுவன் ஆற்றைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து, தனது புத்தகத்தை ஹுவாலையின் குறுகலான பகுதிகளில் ஒன்றின் மேல் இறக்கி வைப்பது தொடர்பான நாட்டுப்புறக் கதைகள் இருக்கின்றன. மறுகரைக்கு செல்ல முயன்ற எறும்புகளுக்கு, இந்த புத்தகம் பயனுள்ள பாலமாக மாறியதாம். இதனால், புத்தகப் பாலம் நதி என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது.
ஹுவாலை நதி அகலமாக இல்லாவிட்டாலும், அதன் ஆழம் 50 சென்டிமீட்டர் வரை உள்ளது என்பதும் மேலும் ஒரு ஆச்சரியம்தான்.
உயரமோ, அகலமோ, நீளமோ எவ்வாறு இருந்தாலும் எவ்வளவு தூரம் இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும், நதிக்கு முக்கியத்துவம் கொடுத்து முறையாக பராமரித்து, நீர் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்தினால் அந்நாட்டு மக்கள் செழிப்பாக இருப்பதோடு, வருங்கால தலைமுறையினருக்கும் நன்மை பயக்கும்!

“1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட...
22/09/2025

“1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!
அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..!
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு ஆண் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..!
ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.
"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. எங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு இன்னொரு நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.
அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.
"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டராகிறார்..!
இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!!
ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...!
இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.
ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒருவழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!
//அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி!//
ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார். இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற வைத்தார் ஐடா..!
இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!
நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை..!
ஆனால், யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்? இவர் ஏன் நமக்காகவே கடைசிவரை வாழ்ந்தார்?
எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிகாட்டி" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?!!
ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!
இந்த உண்மை சிலப் பேருக்கு எரிச்சலாக தான் இருக்கும் கடந்து செல்லவும் இல்லையே வழக்கமாக கதறிச் அசிங்கமாக திட்டிவிட்டு செல்லவும்...

பத்து அடிக்கு பேனர் வைத்து ரசிக்கும் இளைஞர்களே, ஐம்பது அடிக்கு ஒரு மரக்கன்று நடுங்கள் நாடே பசுமையாகிவிடும்...!!!
22/09/2025

பத்து அடிக்கு பேனர் வைத்து ரசிக்கும் இளைஞர்களே, ஐம்பது அடிக்கு ஒரு மரக்கன்று நடுங்கள் நாடே பசுமையாகிவிடும்...!!!

நைஜீரியாவில் பிறந்த குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஒலுயின்கா ஒலுடோய் இடம்பெற்றுள்ளார், இவர் 2016 ஆம் ஆண்டு டெக்...
21/09/2025

நைஜீரியாவில் பிறந்த குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஒலுயின்கா ஒலுடோய் இடம்பெற்றுள்ளார், இவர் 2016 ஆம் ஆண்டு டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் செய்யப்பட்ட ஒரு புரட்சிகரமான கருப்பை அறுவை சிகிச்சைக்குப் பெயர் பெற்றவர்.

டாக்டர் ஒலுடோய் மற்றும் அவரது குழுவினர் ஒரு அரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர், அங்கு அவர்கள் தாயின் வயிற்றில் இருந்து 23 வார வயதுடைய கருவை தற்காலிகமாக அகற்றி, உயிருக்கு ஆபத்தான சாக்ரோகோசைஜியல் டெரடோமா கட்டியை அகற்றினர்.

கட்டியை வெற்றிகரமாக அகற்றிய பிறகு, குழந்தை தொடர்ந்து வளர்ச்சியடைய கருப்பையில் மீண்டும் வைக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு, லின்லீ ஹோப் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, 36 வார கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமாகப் பிறந்தது, இது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது மற்றும் "இரண்டு முறை பிறந்த குழந்தை" என்று அழைக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை கரு மருத்துவத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது மற்றும் நவீன அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளின் மேம்பட்ட திறன்களைக் காட்டுகிறது.
உயிர்களைக் காப்பாற்றவும், மருத்துவத்தில் சாத்தியமாகக் கருதப்படும் எல்லைகளைத் தள்ளவும், புதுமையான மருத்துவ நடைமுறைகளுக்கான திறனை டாக்டர் ஒலுடோயின் பணி எடுத்துக்காட்டுகிறது...

அன்பும் கடவுளும் ஒன்று என்பது உண்மை தான்.. தந்தையின் உருவில் காணும் போது..!
21/09/2025

அன்பும் கடவுளும் ஒன்று என்பது உண்மை தான்.. தந்தையின் உருவில் காணும் போது..!

Amen
21/09/2025

Amen

எவ்ளோ பெரிய பணக்காரனுக்கும் கிடைக்காத நிம்மதி, இவருக்கு கிடைக்க காரணம் பேராசை இல்லை என்பதே 🔥🔥🔥
20/09/2025

எவ்ளோ பெரிய பணக்காரனுக்கும் கிடைக்காத நிம்மதி, இவருக்கு கிடைக்க காரணம் பேராசை இல்லை என்பதே 🔥🔥🔥

விவசாயி சேத்துல கால்  வைக்கலைன்னா..நம்மால சோத்துல கை வைக்க முடியாது...
20/09/2025

விவசாயி சேத்துல கால் வைக்கலைன்னா..
நம்மால சோத்துல கை வைக்க முடியாது...

மொழி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்த Google 😮உலகம் முழுவதும் ஒரே மொழி எப்படி வரும் என்று கேட்ட நண்பர்களுக்காக இந்த பதிவ...
19/09/2025

மொழி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்த Google 😮
உலகம் முழுவதும் ஒரே மொழி எப்படி வரும் என்று கேட்ட நண்பர்களுக்காக இந்த பதிவு 👇👇👇

Address

Chennai

Telephone

+917904427349

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தேவா:

Share