Vasippu

Vasippu தமிழில் பொழுதுபோக்கு வாசிப்புக்குரிய சிறுகதைகளும் உடல்நல கட்டுரைகளும்

இனிய தீபாவளி வாழ்த்துகள்!
30/10/2024

இனிய தீபாவளி வாழ்த்துகள்!

04/02/2024

TNPSC Group 4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி
விவரங்களுக்கு வாட்ஸ்அப்: 7845064509
#டிஎன்பிஎஸ்சி

                 #டிஎன்பிஎஸ்சி
01/02/2024

#டிஎன்பிஎஸ்சி

அது யார்?இது கிரிக்கெட்டை மட்டும் பற்றிய பதிவல்ல. ஆகவே, அனைவரும் வாசியுங்கள்!சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்று ...
29/01/2024

அது யார்?

இது கிரிக்கெட்டை மட்டும் பற்றிய பதிவல்ல. ஆகவே, அனைவரும் வாசியுங்கள்!

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்று கூறுவார்கள். அதேபோன்ற வீரதீர பராக்கிரம செயலை நிகழ்த்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி.

ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டில் கோலோச்சியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைகளை முதல் இரண்டு தடவையும் வென்றது வெஸ்ட் இண்டீஸ். அதன் வேகப்பந்து வீச்சாளர்களை எந்த அணியினராலும் சமாளிக்க முடியாது என்ற நிலையும் இருந்தது.

பின்னர் புகழின் உச்சியிலிருந்து சரிந்தது அந்த அணி. பொருளாதார சிக்கல் உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் டெஸ்ட் விளையாடும் தரத்தை கூட இழக்கக்கூடிய அவலநிலையில் இருந்தது.

அந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் ஆடச் சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. யாருக்கும் பெரிய நம்பிக்கை இல்லாத நிலைதான்! அதுவும் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கும் போட்டி.

முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி, 2024 ஜனவரி 25 முதல் 29 வரை நடைபெற இருந்தது. அந்தப் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்றது. அது முக்கியமான மைதானம். அதிலும் வெற்றி பெறும் முனைப்பில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணிக்கு எமனாக மாறினார் வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிய பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப்.

கயானா பகுதியில் பராகரா என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜோசப். 2018ம் ஆண்டு வரைக்கும் அந்த ஊருக்கு இணைய இணைப்பே கிடையாதாம். பழங்களையும் பின்னர் பிளாஸ்டிக்கை உருக்கி செய்த பந்தை கொண்டும்தான் அவர் விளையாடி பயிற்சி எடுத்துள்ளார்.

வேலைதேடி நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற துறைமுக நகருக்கு வந்த அவர், கட்டுமான தொழிலாளியாகவும், 12 மணி நேரம் உழைக்கும் செக்யூரிட்டியாகவும் வேலை செய்துள்ளார். ஜோசப்பின் கிரிக்கெட் தாகத்தை அறிந்த அவரது வருங்கால மனைவி டிரிஷ், வேலையை விட்டுவிட்டு பயிற்சிக்கு செல்வதற்கு உதவியுள்ளார்.

அங்குதான் மாறியுள்ளது ஷாமர் ஜோசப்பின் வாழ்க்கையும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் விதியும்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற காரணமானார்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

இந்த ஆச்சரியமான, நம்ப இயலாத வெற்றியைக் கண்டு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரரை எக்ஸ் ஃபேக்டர் என்று அழைப்பர். அவ்வாறு செயல்பட்டு, இழந்த பெருமையை ஈட்டித் தந்த ஷாமர் ஜோசப்பை கொண்டாடுகின்றனர் வெஸ்ட் இண்டீஸ் மக்கள்.

வாழ்ந்து கெட்ட குடும்பம் போன்ற கதைதான்! அந்தக் குடும்பத்தின் பெருமையை திரும்ப கட்டியெழுப்ப ஒருவன் பிறந்த கதை போன்றதுதான் ஷாமர் ஜோசப்பின் வருகையும்...

உங்கள் குடும்பத்திற்கு அப்படி எக்ஸ் ஃபேக்டராக விளங்கி இழந்த பெருமையை மீட்டது யார் என்று எண்ணிப் பாருங்கள்.. அதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்...

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் ஷாமர் ஜோசப்பாக, எக்ஸ் ஃபேக்டராக இருக்கலாம்...

இதுபோன்ற சிந்தனைகளை உடனுக்குடன் வாசிக்க இந்தப் பக்கத்தை லைக் செய்யுங்கள்....

#வாசிப்பு

     #வாசிப்பு
28/01/2024

#வாசிப்பு

பாரம் சுமக்கிறவன்மதியானந்தாவின் ஆசிரமத்திற்கு நான்கு நாள்களாக ஒருவர் வந்துகொண்டிருந்தார்.வருவதும் தொலைவில் உட்கார்ந்து ம...
25/01/2024

பாரம் சுமக்கிறவன்

மதியானந்தாவின் ஆசிரமத்திற்கு நான்கு நாள்களாக ஒருவர் வந்துகொண்டிருந்தார்.

வருவதும் தொலைவில் உட்கார்ந்து மதியானந்தாவை பார்த்துக்கொண்டே இருப்பதும், சிறிது நேரம் கழித்துச் செல்வதுமாக இருந்தார்.

ஐந்தாவது நாளும் வந்தார். மதியானந்தா தம் சீடனை அனுப்பி அவரை அருகே அழைத்தார்.

"தினமும் வர்றீங்க... ஒண்ணும் சொல்லாம போயிடுறீங்க... என்ன வேணும்?" என்று கேட்டார்.

"தொழில் ரொம்ப நஷ்டமாயிடுச்சு சாமி..." - வந்தவர் கண் கலங்கினார்.

"கடன் பாரம் தாங்க முடியலை... மனசே சரியில்லை.... இங்கே வந்து உட்கார்ந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கிறமாதிரி தோணுது..." தயக்கத்துடன் சொன்னார்.

மதியானந்தா, அவரது தோளின்மேல் கைபோட்டு அணைத்துக் கொண்டு, அவரை ஆசிரமத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார்.

ஆசிரமத்திற்கு வெளியே இருந்த சாலையில் வண்டிகள், மனிதர்கள் செல்வதும் வருவதுமாய் இருந்தனர்.

தொலைவில் வந்துகொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டினார் மதியானந்தா.

"அவர் என்ன செய்கிறார்?" என்று கேட்டார்.

"சாமி, நாளைக்கு திங்கள்கிழமை. பக்கத்து ஊரில் சந்தை. அவர் சந்தையில் விற்பதற்கு மூடையில் பொருள்களை கொண்டு செல்கிறார்," என்றார் வந்திருந்தவர்.

"மிகவும் சரியாக கணித்துவிட்டீர்கள்..." என்று மதியானந்தா கூறினார்.

"அநேகமாக அது தேங்காயாக இருக்கும். பாரமும் ஜாஸ்தி," என்றார் அவர்.

"அதிக பாரம்... பாவம்! ஒரே ஆளாக தூக்கிக்கொண்டு போகிறார்," மதியானந்தா, சொல்லிக்கொண்டிருந்தபோதே, சாலையில் வந்துகொண்டிருந்த அந்த நபர், அருகிலிருந்த குளத்தின் கரையில் மூடையை இறக்கி வைத்தார். குளத்தில் இறங்கி முகம், கை, கால்களை கழுவினார். சற்று நீரை கோரியெடுத்து பருகினார். குளத்தின் அருகிலிருந்த மரத்தின் நிழலில் உட்கார்ந்தார்.

"ரொம்பவும் களைச்சுப் போயிருக்கார்," என்றார் ஆசிரமத்துக்கு வந்தவர்.

"பாரம் ஜாஸ்தி," என்றார் மதியானந்தா.

சற்று நேரத்தில், அந்த மனிதர் எழுந்து மீண்டும் மூடையை தலையின்மேல் வைத்துக்கொண்டு நடந்துசென்றார்.

"பாரம்தான்..." என்றார் வந்திருந்தவர்.

"ஆமாம்... ஆனால், அவர் பாரமாக இருக்கிறது என்று தயங்கியிருந்தால்... சுமந்து செல்ல ஏதாவது வண்டி கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தால்...?" கேட்டார் மதியானந்தா.

"அப்படியே உட்கார்ந்திருக்கவேண்டியதுதான்..." என்றார் கடன் இருப்பவர்.

மதியானந்தா புன்னகைத்தார்.

"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பாரம் இருக்கும்... அதை அவனே சுமக்கவேண்டிய கட்டாயமும் இருக்கும்... இதோ, கஷ்டப்பட்டு சுமந்துபோகிறார்... சந்தையில் தேங்காயை விற்றதும் கை நிறைய பணம் கிடைக்கும்.... வரும்போது சுமை இருக்காது... பணம்தான் இருக்கும்..." என்றார்.

ஆசிரமத்திற்கு வந்தவர் யோசித்தார்.

"கடன் இருக்கிறது என்று நீங்கள் அதையே நினைத்துக்கொண்டிருந்தால் அது தீராது. இவர் பாரத்தை இறக்கி வைத்து, தண்ணீர் குடித்து இளைப்பாறி சென்றதுபோல, நீங்களும் கடன் பாரத்தை கொஞ்சம் மனதைவிட்டு இறக்கி வைத்துவிட்டு, வேலைகளை செய்யுங்கள். வேலை செய்தால்தான் பணமீட்ட முடியும்... கடனை அடைக்க முடியும். மனதில் கடனை மட்டும் சுமந்து திரிந்தால் கவலைதான் மிஞ்சும்," என்றார் மதியானந்தா.

"சரி சாமி... நான் என்ன செய்யட்டும்...?" அவர் கேட்டார்.

"கடனை பற்றி பெரிதாக கவலைப்படாமல் உங்களுக்கு தெரிந்த தொழிலை செய்யுங்கள்... கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்துவிடலாம்..." என்றார்.

சாமியை கும்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றார் அவர்.

இதுபோன்ற கதைகளை வாசிக்க இந்தப் பக்கத்தை லைக் செய்யுங்கள். உங்கள் கருத்தை கமெண்ட் செக்சனில் பதிவிடுங்கள்

#வாசிப்பு

     #வாசிப்பு
25/01/2024

#வாசிப்பு

     #வாசிப்பு
24/01/2024

#வாசிப்பு

 #தைப்பூசம்
23/01/2024

#தைப்பூசம்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Vasippu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vasippu:

Share