Aaruthrabrothers Music

Aaruthrabrothers Music Keyboard Music

27/04/2025

Pranav Aaruthra’s 1st Musical Audition Performance | Believer Song

27/03/2025

தினமும் அருட்பெருஞ்ஜோதி அகவல் 10 வரிகள் & திருஅருட்பா ஞானசரியை ஒரு பாடல் பார்த்து எழுதல் மற்றும் வாசத்து பழகுதல் | பிரணவ...
29/12/2024

தினமும் அருட்பெருஞ்ஜோதி அகவல் 10 வரிகள் & திருஅருட்பா ஞானசரியை ஒரு பாடல் பார்த்து எழுதல் மற்றும் வாசத்து பழகுதல் | பிரணவ் ஆருத்ரா & லிங்கா ஆருத்ரா

ஆன்மநேய வள்ளலார் உயிர்க்கொலைத் தடுப்பு இயக்கம்
திருஅருட்பா - ThiruArutpa
Aaruthra Organic Natural Homemade Products
ஒழிவில் ஒடுக்கம் - சுத்த சன்மார்க்கம்
Vinothkumar Raju

#வள்ளலார் #புனிதகுலம் #சுத்தசன்மார்க்கம்

21/12/2024

#திருவெம்பாவை நடனம் - மானே நீ நென்னலை

14/12/2024

தண்ணீரில் உள்ள சத்துக்களை எப்படி இனம் கண்டு கொள்வது? Aaruthra Organic Natural Homemade Products ஆன்மநேய வள்ளலார் உயிர்க்கொலைத் தடுப்பு இயக்கம் திருஅருட்பா - ThiruArutpa ஒழிவில் ஒடுக்கம் - சுத்த சன்மார்க்கம் Vinothkumar Raju

23/08/2024
23/08/2024

உலகம் ஒரு அரிய பெரிய அருள் சக்தியின் ஆற்றலால் இயங்கிக் கொண்டு உள்ளது..

ஏக இறைவன் தான் உலகத்தைப் படைத்துள்ளான்.

ஏகமாய் உள்ள இறைவனை தனித்தனியே பிரித்து மதவாதிகள் சமயவாதிகள் கடவுளைக் கற்பித்து விட்டார்கள்...

மதத்திற்கு.சமயத்திற்கு வசதியாக பண்டிகைகளையும் பிரித்து விட்டார்கள்..

மதங்களைக் கொண்டு மனிதர்களையைம் பிரித்து. விட்டார்கள்..

மதத்திற்கும் சமயங்களுக்கும் தகுந்தாற்போல்..பழக்க வழக்கங்கள்.உணவு முறைகள்.வழிபாட்டு முறைகள்.எல்லாம் மாறுபட்ட கோணங்களில் வழிவகை செய்து தனித்தனியே பிரித்து வைத்து விட்டார்கள்....

எல்லாம் மதங்களும்.
சமயங்களும் சாதிகளும் மக்களை முட்டாள்களாக மாற்றி விட்டார்கள்..

ஒற்றுமையாக வாழ வேண்டிய மக்களை தனித்தனியாக பிரித்து.
அறியாமையால் அலைய விட்டு விட்டார்கள்.

இதெல்லாம் யாருடைய குற்றம்.?.
சமயங்களையும. மதங்களையும் போதித்த கர்த்தாக்களின் குற்றம்..
அவர்களைத்தான் அருளாளர் என்று சொல்லிக் கொண்டு உள்ளோம்..அவர்களின் உண்மைத் தெரியாமல் அவர்களின் பாதங்களில் விழுந்து கிடைக்கின்றோம்

அனைத்து அருளாளர்களும் உண்மையான இறைவனை அறியாதவர்கள்...
அறியும் தகுதி இல்லாதவர்கள்...

ஜடதத்துவங்களை கற்பனைக் கடவுள்களாக படைத்து விட்டார்கள்..

இதைத்தான் வள்ளலார் உண்மை அறியாமல் உளறிக் கொண்டு உள்ளார்கள்.....

வள்ளலார் பதிவு செய்து மகா உபதேசம்.!

சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. "தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்.

தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது.

ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலானஅண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.

இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.!

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம்.

மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம்இக்காலமே சன்மார்க்கக் காலம்.!

இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.

அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன்.

நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை.

நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.!

இவ்வளவு தெளிவாக இதுவரை எந்த ஞானிகளும் உண்மையைச் சொல்லவில்லை....

தெய்வத்தை பிரித்தவன் அறிவு தெளிவு இல்லாதவன் என்கிறார் வள்ளலார்!

பாடல் !

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

எய்வந்த துன்பொழித் தவர்க்கு அறிவு அருள்வீர்எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.!

யாருக்கும் அருள் அறிவு விளங்காமல் பொய்யான கற்பனை தெய்வங்களை கற்பித்து விட்டார்கள்.

எனவே தான் இறைவனே தன்னை வெளியே காட்டிக் கொண்டார்..

அந்த உண்மைக் கடவுள்தான்

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!

என்னும் அருள் ஒளியாகும்...அதுதான் ஆனம ஒளியாக சிரநடு சிற்றம்பலத்தில்.கண்களுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டு உள்ளதாகும்...

அந்த ஒளியை எப்படி காண்பது தொடர்பு கொள்வது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

எல்லா நாட்களும் இறைவன் படைத்தது..எல்லா நாட்களும் நல்ல நாட்களே...எந்நேரமும் இறைவனை இடைவிடாது தொடர்பு கொள்வதே நல்ல நாட்களாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

A Critique of Organized Religion: A Tamil Perspective

Introduction
The Tamil discourse presented in this article offers a scathing critique of organized religion, arguing that it has created divisions among humanity and obscured the true nature of the divine. The author, drawing inspiration from the teachings of Vallalar, a prominent Tamil saint, advocates for a more spiritual and personal approach to understanding the universe and one's place within it.

The Illusion of Divine Multiplicity
The discourse begins by asserting that the universe is created by a single, supreme being. However, human beings have fragmented this concept into various deities and religions, leading to unnecessary divisions and conflicts. The author argues that this fragmentation is a human construct and lacks any substantial evidence to support it.

The Dangers of Religious Dogma
The author further criticizes the rigid dogmas and rituals imposed by organized religions. These practices, he contends, have alienated people from the true essence of spirituality and created a sense of fear and obligation. The discourse emphasizes that true spiritual growth lies in personal experience and understanding, rather than blindly following religious doctrines.

The Path to Enlightenment: A Personal Journey
Drawing inspiration from Vallalar's teachings, the author outlines a path to enlightenment that is based on personal introspection and understanding of the universe. He suggests that by studying the natural world and one's own being, individuals can discover the divine within themselves. This approach, he argues, is far more fulfilling and authentic than following external religious practices.

Conclusion
The discourse concludes by calling for a rejection of religious dogma and a return to a more spiritual and compassionate way of life. It emphasizes the importance of unity among humanity and the need to recognize the inherent divinity in all beings. By following the teachings of Vallalar and embracing a personal spiritual journey, the author suggests, individuals can achieve true enlightenment and contribute to a more harmonious world.

Vinothkumar Raju
Aaruthra Organic Natural Homemade Products
வடலூர் புனித பூமி இயக்கம்/ Vadalur Holy Place Movement
Aaruthrabrothers Music
ஒழிவில் ஒடுக்கம் - சுத்த சன்மார்க்கம்
ஆன்மநேய வள்ளலார் உயிர்க்கொலைத் தடுப்பு இயக்கம்

#திருஅருட்பா #வள்ளலார்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaruthrabrothers Music posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category