18/08/2025
மருத்துவர் வேணி: லட்சக்கணக்கான பெண்களுக்கான மகப்பேறு பார்த்தவர்
சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான டாக்டர் S ஜெயச்சந்திரன் மனைவியும் பிரபல மகேப்பேறு மருத்துவருமான திருமதி C வேணி இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
திருமதி C வேணி 1953 ஆம் ஆண்டு சின்னக்கண்ணு, புண்ணியகோடி தம்பதியருக்கு கடைசி மகளாக பிறந்தார். சென்னையின் பிரபல கேஎம்சி கல்லூரியில் மருத்துவப்படிப்பை மகப்பேறு மருத்துவப் பிரிவில் முடித்தார்.
பின்னர் மருத்துவக் கல்லூரியில் துறைத் தலைவராகவும் வேலூர் மருத்துவ கல்லூரிகளில் 40 ஆண்டுகள் பணியாற்றினார். மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவகல்லூரியில் தேர்வுக் கட்டுப்பாட்டாளராகப்
பணியாற்றியவர், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிருக்கான மருத்துவத்தில் புகழ்பெற்ற நிபுணராக திகழ்ந்தார்.
தனது கணவர் டாக்டர் S ஜெயச்சந்திரனைப் போலவே, வண்ணாரபேட்டை, காசிமேடு பகுதிகளில் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவப் பணிகள் செய்து பிரபலமடைந்தார். இதுவரையிலும் லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு மகப்பேறு பணிகள் செய்துள்ளார்.
மக்களுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் செய்து, பிரதமர் மோடி அவர்களாலும், முதல்வர் ஸ்டாலின் அவர்களாலும் பாராட்டப் பெற்றவர் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச்சென்ற சமூகப்பணிகளை குடும்பத்தினர் தொடர்கின்றனர்.