18/10/2025
உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும் சிறிய கதை.
ஒரு மாமரம் தன்னுடைய இரண்டு குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. அந்த இரண்டு குழந்தைகளும் தன் அருகில் வளர்ந்து கொண்டு இருந்தது.
தாய் மாமரம் தனக்கு ஊற்றும் தண்ணீரை தன் குழந்தைகளுக்கு ஊற்ற வேண்டும் என்பதற்காக அந்த தண்ணீரை உறிஞ்சாமல் அப்படியே இருந்தது.
ஆனால் அந்த உதவாக்கரை இரண்டு குழந்தைகளும் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாது அது வளராமல் தழைக்காமல் கருகிக் கொண்டே இருந்தது.
அந்த தாய் மரம் தன் குழந்தைகளுக்காகவே தினமும் மழை நீரையும் அந்த விவசாயி கொடுக்கக்கூடிய நீரையும் உறிஞ்சாமல் அது மேனி வருத்திக்கொண்டு இருந்தது.
ஒரு நாள் அந்த விவசாயி இந்த மண்ணிற்கு இந்த மாமரம் சரியாக வருவதில்லை போல் தெரிகிறது எனவே இந்த மூன்று மரங்களையும் வெட்டி வீசிவிட்டு வேறு மரங்களை நடலாம் என்று முடிவு செய்தார். கதையின் கருத்து.
இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம்.
இன்று இருக்கும் நம் மக்கள் அனைவரும் இவ்வாறுதான் தன் குழந்தைகளுக்காக என்று தன்னை வருத்திக்கொண்டு குழந்தைகள் வாழ்க்கைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார்கள்.
ஆனால் இது எவ்வளவு தூரம் என்பது உங்களுக்கு தெரியாது.
காரணம்.
உங்கள் வாழ்க்கை அழிவதோடு உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நீங்கள் அளிக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் மற்றும் அந்த குழந்தை எவ்வாறு வாழ வேண்டும் என்று பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களுடைய வாழ்க்கையை தாங்கள் வாழ நினைப்பது தவறு என்பதுதான் இந்த நீதி. ஹரி ஓம் சிவாய நமஹ சென்னை.