Tamizhan Tube

Tamizhan Tube அழகு, ஆரோக்கியம், மருத்துவம், ஆன்மிகம?

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!! நமக்கு சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் வந்தால் கடவ...
04/10/2024

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!!

நமக்கு சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது "ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?"

இந்த கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார்.

அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ராபர்ட் ஆஷ் ஜூனியர் விம்பிள்டன் ஓப்பன், யூ எஸ் ஓப்பன், ஆஸ்ட்ரேலியா ஓப்பன் ஆகிய *மூன்று கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களையும் வென்ற ஒரே மகன். தொழில் முறை போட்டியில் இருந்து 1980 ம் ஆண்டில் ஓய்வு பெற்ற வீரர். 1983 ஆம் ஆண்டில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் தானமாகப் பெற்றுக் கொண்டதன் மூலமாக அவருக்கு எய்ட்ஸ் வந்தது. அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது: "உங்களுக்கு கடவுள் ஏன் இப்படி செய்கிறார்?"

இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு:

"WHY ME ?"
"ஏன் எனக்கு மட்டும்? "

கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு:

உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும் பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
குடி பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்த பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
சிகரெட் பிடிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்த பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
பல பெண்களிடம் தொடர்பு உடையவர்கள் பலர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு ஏன் எனக்கு எய்ட்ஸ் தந்தாய்? இப்படியாக நீண்டு கொண்டே போனது அந்த கட்டுரை. அதன் முடிவில் சொன்னார்:

இதனது தொடர்ச்சி அடுத்த வாரம்.

இதைப் படித்த மக்கள் அனைவரும் மிகவும் வருந்தினார்கள். அவர் என்னதான் பதில் தரப்போகிறார் என்று காத்திருந்தார்கள்.

அடுத்த வாரம் WHY ME PART II ஏன் எனக்கு மட்டும் பாகம்-2 வெளிவந்தது.

அதில் அவர் எழுதியிருந்தார்:

உலகில் 500 லட்சம் பேர் டென்னிஸ் விளையாடத் துவங்குகிறார்கள்.
அதில் 50 லட்சம் பேர் தான் டென்னிஸ் கற்றுக் கொள்கிறார்கள்.
அதில் 5 லட்சம் பேர் தான் தொழில்முறை டென்னிஸ்க்கு வருகிறார்கள்.
அதில் 50,000 பேர் தான் சர்க்யூட் லெவல் டென்னிஸ்க்கு முன்னேறுகிறார்கள்.
அதில் 5000 பேர் தான் கிராண்ட்ஸ்லாம் லெவல் டென்னிஸ்க்கு முன்னேறுகிறார்கள்.
அதில் 50 பேர் தான் விம்பிள்டன் விளையாடுகிறார்கள்.
அதில் 4 பேர் தான் அரையிறுதிக்கு வருகிறார்கள்.
அதில் 2 பேர் தான் இறுதிப் போட்டிக்கு வருகிறார்கள்.
அதில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார்

அந்த வெற்றி பெற்ற ஒருவராக, அந்த வெற்றிக் கோப்பையை கையில் மகிழ்ச்சியோடு தாங்குபவராக என்னை கடவுள் ஆக்கிய பொழுது நான் கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும்?" என்று

வெற்றி மேல் வெற்றி தந்த பொழுது நான் கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.

பேரும் புகழும் குவிந்தன. அப்போது கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.

பணம் மழைபோல கொட்டியது. அப்பொழுது கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.

அப்போதெல்லாம் கேட்காத நான் இப்பொழுது கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்க மாட்டேன். கடவுள் இது வரை தந்ததை எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேனோ அது போல இதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

இதுவரை எனக்காக வாழ்ந்த நான் இனி பிறருக்காக வாழப் போகிறேன். என்னுடைய பணம், புகழ், செல்வம், மீதமுள்ள வாழ்நாள் அனைத்தையும் இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளிலும் நான் செலவு செய்யப் போகிறேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். நன்றி.

என்று முடித்திருந்தார்.

இன்பம் வந்தபோது ஏனென்று கேட்காத நாம் துன்பம் வரும்போது மட்டும் ஏன் என்று கேட்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

இன்பம், துன்பம் இரண்டையும் கடவுளே தருகிறார். இரண்டுமே நம் நன்மைக்குத்தான் என்று உணர்வோம். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம்.
😌☺🙏

படித்ததில் பகிர்ந்தது

ரகசியமா நிலம் வாங்குங்க. ரகசியமா வீட்டைக் கட்டுங்க. அப்புறம்  கிரஹப்ரவேசத்துக்கு எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும்  ...
25/07/2024

ரகசியமா நிலம் வாங்குங்க. ரகசியமா வீட்டைக் கட்டுங்க. அப்புறம் கிரஹப்ரவேசத்துக்கு எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .

ரகசியமா காலேஜ் தேடுங்க,.. நல்ல கோர்ஸ்ல சேருங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .

ரகசியமா நல்ல கார் பத்தி விசாரிங்க. ரகசியமா போய் வாங்குங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரை வாயை திறக்காதீங்க.

நல்ல பிசினஸ் பண்ணுங்க. பிசினஸ் நல்லா நடக்குதா? நல்ல லாபம் வந்துச்சா? வாயை திறக்காதீங்க.

நல்ல வேல கிடைச்சிருச்சா? ரகசியமா வேலைல சேருங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரை வாயை திறக்காதீங்க.

ரகசியமா பொண்ணு பாருங்க. ரகசியமா சம்பந்தம் பண்ணுங்க. பிறகு எல்லாரையும் கூட்டி கல்யாணம் பண்ணுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .

நீங்க தோத்து போகணும்னு நினைக்கிறவங்க உங்க கூட தான் இருப்பாங்க. உங்களுக்கு தெரியாத யாரும் நீங்க தோத்து போகணும்னு நினைக்க மாட்டாங்க.

நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க கூட அவுங்களை விட நீங்க நல்லா இருக்கிறத விரும்ப மாட்டாங்க.

செஸ் விளையாடும் போது நீங்கள் பேச மாட்டீங்க. நீங்கள் கவனமா செயல்படுவீங்க. விளையாட்டு உங்களுக்கு சாதகமா முடியும்போது போது "செக்மேட்" னு மட்டுமே பேசுவீங்க.

வாழ்க்கை என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. அடுத்து என்ன செய்ய போறிங்கனு வெளியே சொல்லாதீங்க. அமைதியாக செயல்படுங்கள். சாதித்துக் கொண்டே இருங்கள்.
உங்கள் சாதனைகள் தான் உங்கள் life ...

இந்த பாடல் யாருக்கு இன்னும் நியாபகம் இருக்கு! யாருக்கெல்லாம் பிடிக்கும்!!
19/07/2024

இந்த பாடல் யாருக்கு இன்னும் நியாபகம் இருக்கு! யாருக்கெல்லாம் பிடிக்கும்!!

இது தான் வாழ்க்கை ! இது தான் பயணம் !ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் ம...
08/07/2024

இது தான் வாழ்க்கை ! இது தான் பயணம் !

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

#ஒரு_நாள்.

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.
அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ "நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் "சாரி, என்னால் உன் கல்லறை வரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது" என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.

அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது.
"நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன்"’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.

"நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன்" என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே இறந்து போனான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
எப்படி ?

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

#படித்ததில்பிடித்தது

17/06/2024

Love Music 🎶 🧘‍♂️❤️

Dear everyone who Listen this, we don't know each other but I wish you all the best in life and happiness ❤️

08/05/2024

அடேய் 🤣🤣🤣

😁
07/05/2024

😁

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamizhan Tube posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share