24/08/2025
நீங்க Google-ல போய் “50 World Best Directors list” என்று search பண்ணி பாத்தீங்கன்னா, அதுல 8th placeல இவரு இருப்பாரு.
அதே மாதிரி “10 Indian Best Directors” list எடுத்து பாத்தீங்கன்னா, அதுல 1st placeல இருப்பாரு.
இந்திய சினிமாவில ரோபோவை வைத்து எடுக்கப்பட்ட முதலாவது முழுமையான திரைப்படம் இவரோடது தான் – Hollywood (2002).
அதுக்கப்புறம் தான் சங்கர் அவரோட எந்திரன் படம் வந்துச்சு ன்னு சொல்லலாம்.
இவருக்கு Non-Linear Patternல படம் எடுப்பது கை வந்த கதை.
ஒரு Example சொல்லனும்னா – தமிழ்ல வந்த துருவங்கள் பதினாறு.
ஒரு Crimeக்கான கேள்விகள் – அதுக்கான பல Flashbacks, Twists… நேரான பாதைல போகாம, Non-Linear Flowல படம் போகும்.
இத தான் Non-Linear Story Pattern ன்னு சொல்வோம்.
ஆனா இத 1999-லேயே உப்பெந்திரா, Upendra படத்துல பண்ணிருப்பாரு.
இவரோட முதல் படம் – Comedy.
அதுக்கு அடுத்த படம் – Horror.
அதுல நிறைய Experiment பண்ணாரு.
அதுக்கப்புறம், இரண்டு வருஷம் கழிச்சு Omன்னு ஒரு Gangster Masterpiece கொடுத்தாரு.
அந்த படத்துல யாருமே எதிர்ப்பாக்காத ஒரு விஷயம் பண்ணாரு…
நிஜ Gangsters-ஐயே நடிக்க வச்சாரு!
இது மாதிரி Experiment பண்ணும் Director-கள் ரொம்பவே குறைவு.
சொல்லிக்கொண்டே போகலாம்… ஆனா இவர பத்தி உண்மையா தெரிஞ்சிக்கணும்னா –
அவரோட படைப்புகளை கண்டிப்பா நீங்க பாக்கணும்.