Swasam Publications

Swasam Publications Tamil book publisher.

சத்தியப்பிரியன் எழுதிய 'நாவல் வடிவில் குண்டலகேசி' நூல் அறிமுகம். நன்றி தினத்தந்தி.சுவாசம் பதிப்பக வெளியீடு.புத்தகத்தின் ...
30/07/2025

சத்தியப்பிரியன் எழுதிய 'நாவல் வடிவில் குண்டலகேசி' நூல் அறிமுகம். நன்றி தினத்தந்தி.

சுவாசம் பதிப்பக வெளியீடு.

புத்தகத்தின் விற்பனை விவரங்கள் கீழே commentல் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதிய 'ஆர்ட்டிகிள் 370' நூல் அறிமுகம்.சுவாசம் பதிப்பக வெளியீடு.புத்தகத்தின் விற்பனை விவரங்கள் கீழே co...
28/07/2025

ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதிய 'ஆர்ட்டிகிள் 370' நூல் அறிமுகம்.

சுவாசம் பதிப்பக வெளியீடு.

புத்தகத்தின் விற்பனை விவரங்கள் கீழே commentல் கொடுக்கப்பட்டுள்ளன.

அஸ்வகோஷர் இயற்றிய புத்த சரித்திரம், சம்ஸ்கிருத மொழியில் மகா காவியமாகப் புகழ்பெற்றது. அஸ்வகோஷர் சம்ஸ்கிருத அறிஞர். மகாகவி...
26/07/2025

அஸ்வகோஷர் இயற்றிய புத்த சரித்திரம், சம்ஸ்கிருத மொழியில் மகா காவியமாகப் புகழ்பெற்றது. அஸ்வகோஷர் சம்ஸ்கிருத அறிஞர். மகாகவி. இவர் சம்ஸ்கிருத இலக்கியத்தின் முதல் நாடக ஆசிரியராக அறியப்படுகிறார்.

அஸ்வகோஷர் அந்தணரானாலும் பிராமண வர்ணாசிரமத்தைத் துறந்து பௌத்தராக மாறி புத்தரின் போதனைகளைத் தன் இலக்கியப் பங்களிப்பின் மூலம் விரிவாகப் பிரசாரம் செய்தார்.

புத்தரின் வாழ்க்கை வரலாற்றை இருபத்தெட்டு அத்தியாயங்களில் முழுமையாக விவரிக்கிறது இந்த நூல்.

இந்தக் காவியத்தின் முதல் பகுதியில், புத்தரின் வீடு துறத்தல், தவம், காமதேவனின் தூண்டல்கள், மன்மதனை வென்றது போன்ற சம்பவங்கள் உணர்ச்சிபூர்வமாக அழகான காவிய நடையில் விளக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பகுதியில் புத்தரின் காசி வருகை, சீடர்களுக்குப் போதனை, பெரிய சீடர்களுக்குத் தீட்சை, தந்தையும் மகனும் சந்திப்பு, ‘ஜேத்’ வனத்தை ஏற்பது, ஆம்ரபாலியின் தோட்டத்தில் ஆயுள் நிர்ணயம், லிச்சவிகள் மீது கருணை, நிர்வாண மார்க்கம், மகா பரிநிர்வாணம், நிர்வாணத்தைப் போற்றும் துதிகள், புத்தரின் உடல் எச்சங்களைப் பகிர்தல் ஆகியவை உள்ளன. இதில், புத்தரின் கொள்கை பற்றிய கூடுதல் விவரம் காணப்படுகிறது.

தமிழில் முதன்முறையாக அஸ்வகோஷரின் புத்த சரிதத்தை முழுமையாக விரிவாக எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன்.

அஸ்வகோஷரின் புத்த சரிதம், ராஜி ரகுநாதன். ரூ.330

ஆன்லைனில் வாங்க
https://www.swasambookart.com/books/9788198918185

ஃபோன் மூலம் வாங்க 081480 66645

இளையராஜாவை இசைத் தெய்வமாக ஆராதிப்பவர்களுக்கும், ரஹ்மானின் ‘முத்த மழை’ பாடலைக் கிறுக்குப் பிடித்துக் கேட்பவர்களுக்கும், இ...
25/07/2025

இளையராஜாவை இசைத் தெய்வமாக ஆராதிப்பவர்களுக்கும், ரஹ்மானின் ‘முத்த மழை’ பாடலைக் கிறுக்குப் பிடித்துக் கேட்பவர்களுக்கும், இந்தத் திரை இசை அலைகள் எழுந்த திரை இசைக் கடலின் இனிமைகளும் வரலாற்றுப் பரிமாணங்களும் தெரிந்திருக்குமா? தெரிந்திருக்காது என்பதுதான் நிதர்சனம்.

திரை இசை கடந்து வந்த பல மைல்கற்களைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறது ‘திரை இசையின் பொற்காலம்’ நூல்.

மாறி மாறி வரும் திரை இசைக் காலங்களை மறைத்திருக்கும் திரைகளை நீக்கி, நாம் மறந்துபோன திரைப்பாடல் நாயகர்களை இனம் காட்டுகிறது.

ஊமைத் திரைப்படம் தமிழ் பேசத் தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரை மிளிர்ந்த மிக முக்கியமான திரை இசை நாயகர்களின் வரலாற்றைப் பருந்துப் பார்வையில் சொல்கிறது இந்தப் புத்தகம்.

சுவாரஸ்யமான நிகழ்வுகள், அரிய படங்கள், நெடிய தேடல், சலியாத உழைப்பு - இவற்றின் பலன் உங்கள் உள்ளங்கையில்.

திரை இசை தொடர்பான நூல்களுக்குப் பல பரிசுகளும் அங்கீகாரமும் பெற்ற வாமனன் எழுதி இருக்கும் இந்த நூல், திரை இசைச் சாதனைகளின் என்சைக்ளோபீடியா.

திரை இசையின் பொற்காலம், வாமனன் ரூ.260.

ஆன்லைனில் வாங்க
https://www.swasambookart.com/books/9788198918154

ஃபோன் மூலம் வாங்க 081480 66645

இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.--சுவாசம் பதிப்பகம்மற்றும்எழுத்தாளர். ராமச்சந்திரன் உஷாஇணைந்து நடத்தும்வரலக்ஷ்மி அம்மாள...
25/07/2025

இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

--

சுவாசம் பதிப்பகம்
மற்றும்
எழுத்தாளர். ராமச்சந்திரன் உஷா
இணைந்து நடத்தும்

வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டி – 2025

முதல் பரிசு ரூ.50,000
இரண்டாம் பரிசு ரூ.25,000
மூன்றாம் பரிசு ரூ.10,000

ஆறுதல் பரிசு ( மூன்று கதைகளுக்கு தலா) ரூ.2,000
சுவாசம் பதிப்பகம் நடத்துகின்ற இப்போட்டி எழுத்தாளர் ராமசந்திரன் உஷாஅவர்களின் பாட்டியும் தேர்ந்த வாசகியுமான 'வரலக்ஷ்மி அம்மாள்' அவர்கள் பெயரில் 'வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டி 2025' என அறிவிக்கப்படுகிறது.

நோக்கம்

புதிய படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பது. படைப்புத் திறனை ஊக்குவிப்பது. படைப்பு வெளியை விரிவடையச் செய்வது, வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கங்களைப் பிரதானமாக முன்வைத்து இந்தப் போட்டி அறிவிக்கப்படுகிறது.

விதிமுறைகள்

*இந்த நாவல் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

* ஒரு நபருக்கு ஒரு நாவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

* நாவலின் அளவு குறைந்தபட்சம் 32000 முதல் 50000 வார்த்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

* நாவல்கள் எந்த வகைமையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம் (சமூகம் அரசியல், சூழலியல், பின்நவீனத்துவம், அறிவியல், புனைவு, வரலாற்றுப்புனைவு, யதார்த்தவாதம், கற்பனாவாதம், துப்பறியும் கதை உள்ளிட்ட வகைமை....)

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected]

படைப்பினை அனுப்புவதற்குக் கடைசி நாள் : 31 ஜூலை 2025.

போட்டி முடிவுகள் நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும்.

* போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார் எனக் கண்டறிவது அவர்களோடு தொடர்பு கொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

உறுதிமொழி

படைப்பை அனுப்பியதில் இருந்து போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும்.

எந்த ஒரு மதத்தையோ ஜாதியையோ இனத்தையோ காழ்ப்புடன் தாழ்த்திச் சொல்லும் படைப்பு ஏற்கப்படாது.

ஏற்கெனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புத்தகம் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும்.

மேலும் படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியும் இணைத்திருக்க வேண்டும்.

படைப்புகளை MS WORD FILE-ல் UNICODE முறையில் மட்டுமே அனுப்பவேண்டும் PDF FILE-கள் நிராகரிக்கப்படும்.

தேர்வும் பரிசும்

* இப்போட்டியின் முடிவில் பதினைந்து நாவல்கள் Shortlist செய்யப்படும்.

* இந்தப் பதினைந்து நாவல்களிலிருந்து பரிசுக்குரிய புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படும்.

* பரிசு பெற்ற நாவல்கள் சுவாசம் பதிப்பகம் மூலம் வெளியிடப்படும்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected]

சோழர்களின் கடற்போர்த் திறமையையும் கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே எடுத்துக்காட்டுவது ராஜேந்திர சோழனின் கடா...
24/07/2025

சோழர்களின் கடற்போர்த் திறமையையும் கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே எடுத்துக்காட்டுவது ராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு.

இன்றைய மலேசியாவான அன்றைய கடாரத்துக்கு, பல ஆயிரம் வீரர்கள், போர்த் தளவாடங்கள், யானைகள், குதிரைகள், உணவுப் பொருட்கள், குடிநீர் ஆகியவற்றோடு, புயலைத் தாங்கும் வலிமையுடன் கட்டப்பட்ட போர்க் கப்பல்களில் பயணம் செய்து, அங்கே நடந்த போரில் பெரும் வெற்றியை அடைந்தான் ராஜேந்திர சோழன். இந்தக் கடும் பயணமும் பெரும் வெற்றியும் எப்படிச் சாத்தியமானது? இதுவே இந்த நாவலின் களம்.

கடாரப் போரையும், கடல் சாகசப் பயணத்தையும், அதில் ராஜேந்திர சோழனும் வீரர்களும் சந்தித்த சோதனைகளையும், அதைச் சமாளித்த தீரத்தையும், நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் விரிவாகவும் ஆதாரத்துடன் இந்தச் சரித்திர நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

கடாரம் கொண்ட சோழன். ஸ்ரீமதி ரூ.580

ஆன்லைனில் வாங்க
https://www.swasambookart.com/books/9788198918161

ஃபோன் மூலம் வாங்க 081480 66645

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் ஒரே குறிக்கோள், தம் வாழ்நாளில் ஒரு முறையாவது திருப்பதி வேங்கடாசலபதியைத் தரிச...
23/07/2025

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் ஒரே குறிக்கோள், தம் வாழ்நாளில் ஒரு முறையாவது திருப்பதி வேங்கடாசலபதியைத் தரிசித்துவிடவேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட பெருமைமிகு திருப்பதியைப் பற்றியும் பெருமாளைப் பற்றியும் பக்திப் பரவசத்தோடு சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம்.

திருப்பதியின் தல வரலாறு, புராண வரலாறு, ஏழுமலையானின் பெருமை, அவர் நிகழ்த்திய அற்புதங்கள், கீழ் திருப்பதி எனப்படும் தாயார் சன்னதியின் வரலாறு என திருப்பதி குறித்த ஒரு பருந்துப் பார்வையை இந்தப் புத்தகம் நமக்கு அளிக்கிறது.

திருப்பதியில் நிகழும் பல திருவிழாக்கள், பூஜைகள், ஆராதனைகள், அவற்றில் பங்குபெறுவதற்கான வழிமுறைகள், அங்கே நாம் அவசியம் காணவேண்டிய பிற கோயில்கள் போன்ற பல தகவல்களைத் திரட்டித் தரும் இந்தப் புத்தகம், திருப்பதி கோவிலின் முழுமையான வழிகாட்டி!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாறும் வழிபாடும். சைதை முரளி, ரூ.190

ஆன்லைனில் வாங்க
https://www.swasambookart.com/books/978819863862

ஃபோன் மூலம் வாங்க 81480 66645

நம் புராணத்தில் பரசுராமனுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஆனால் பரசுராமனின் வரலாறு அதிகம் தமிழில் பேசப்படவில்லை. அந்தக் குறையைப்...
22/07/2025

நம் புராணத்தில் பரசுராமனுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஆனால் பரசுராமனின் வரலாறு அதிகம் தமிழில் பேசப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் ‘பரசுராமாயணம்’ நூலை எழுதி இருக்கிறார் கு.சடகோபன்.

திருமாலின் அவதார நோக்கங்களைப் பற்றி முதலில் பருந்துப் பார்வையில் கூறும் இந்நூல், பின்பு பரசுராமனின் பிறப்பைப் பற்றியும், அவன் சிவனிடத்தில் எப்படி பரசு எனும் கோடாரியைப் பெற்றான் என்பது குறித்தும் விரிவாக விளக்குகிறது.

பரசுராமன் தனது தந்தையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்ற தாயையே கொல்வது, ராவணனையே வீழ்த்திய கார்த்த வீர்யார்ச்சுனனிடம் இருந்து ஓமதேனு எனும் பசுவை மீட்கச் செல்வது போன்ற சுவைமிக்க பகுதிகள் இந்நூலில் ஏராளம். ஸ்ரீ ராமன் பரசுராமனுடன் மோதும் காட்சிகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.

பரசுராமனின் அவதார நோக்கத்தை இந்த நூல் அழகுத் தமிழில் சிறப்பாகப் பதிவு செய்கிறது.

பரசுராமாயணம், கு.சடகோபன், ரூ 160

ஆன்லைனில் வாங்க https://www.swasambookart.com/books/9788198638687

ஃபோன் மூலம் வாங்க 81480 66645

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டுத் தேர்தல்கள் எப்போதுமே பரபரப்பான திருப்பங்களையும் அதிரடிகளையும் கொ...
21/07/2025

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டுத் தேர்தல்கள் எப்போதுமே பரபரப்பான திருப்பங்களையும் அதிரடிகளையும் கொண்டது. அதை இந்தப் புத்தகம் அதே சுவாரசியத்துடன் காட்சிப்படுத்துகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தொடங்கிப் பின்னர் சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் முழுமையான தேர்தல் வரலாற்றை, அந்தச் சமயத்தில் நாட்டில் நிலவிய அரசியல் கணக்குகள், மக்களின் எண்ணவோட்டம், கூட்டணிப் பஞ்சாயத்துகள், மத்திய அரசின் தலையீடுகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல்வாதிகளின் கட்சி மாறும் காட்சிகள், இவற்றால் உண்டான எதிர்பாராத முடிவுகள் என அனைத்து விவரங்களையும் விரிவான புள்ளிவிவரங்களுடன் தெளிவாகப் பதிவுசெய்கிறது இந்த நூல்.

அரசியல் ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அனைத்துக் கட்சி விசுவாசிகளுக்கும் பயன்படும் அரிய ஆவணம் இது.

தமிழ்நாட்டுத் தேர்தல்கள், ருஷேந்தர் ரகுராம், ரூ 370

ஆன்லைனில் வாங்க: https://www.swasambookart.com/books/9788198681522

ஃபோன் மூலம் வாங்க 81480 66645

ஆப்ரேஷன் சிந்தூர்.புதிய புத்தகம். சுவாசம் வெளியீடு.எழுதியவர் விதூஷ்.முதல்‌ 1000 புத்தகங்கள் சலுகை விலையாக 99 ரூபாய்க்கு....
18/07/2025

ஆப்ரேஷன் சிந்தூர்.

புதிய புத்தகம். சுவாசம் வெளியீடு.

எழுதியவர் விதூஷ்.

முதல்‌ 1000 புத்தகங்கள் சலுகை விலையாக 99 ரூபாய்க்கு.

அதன் பிறகு, இதன் விலை ரூபாய் 220.

-

ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத நோக்கில் நம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான வன்முறை. இந்தியாவின் கெளரவத்திற்கு விடுக்கப்பட்ட சவால்.

இந்தக் கொடும் சம்பவத்திற்கான இந்தியாவின் ராஜதந்திரப் பதிலடியே ஆபரேஷன் சிந்தூர்.

இந்தியா 'சிந்தூர்' என்ற பெயரில் பெண்மையின் சக்தியோடு பதிலடி தந்தது.

ஆபரேஷன் சிந்தூர் என்பது வெற்று வன்முறைத் தாக்குதல் அல்ல, சரியான, முறையான, துணிச்சலான எதிர்வினை. எதிரி நாட்டை அச்சத்திலும் உலக நாடுகளை வியப்பிலும் ஆழ்த்திய துல்லியமான நவீனமான போர்முறை.

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த கணம் முதல் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி வரையிலான ஒவ்வொரு நொடியையும், அதே பரபரப்புடன், அந்தப் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள், ராணுவத்தின் திட்டமிடல், அசாத்தியமான வியூகங்கள், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், உலக நாடுகளின் நிலைப்பாடுகள் என ஆபரேஷன் சிந்தூரின் முழுமையான செயல் வடிவத்தை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியுள்ளது.

இந்தப் புத்தகம் ஓர் இந்தியப் பெருமை மட்டுமல்ல, பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான அஞ்சலியும் கூட..

ஆன்லைனில் ஆர்டர் செய்ய https://www.swasambookart.com/books/9788198918123

ஃபோன் மூலம் ஆர்டர் செய்ய 8148066645

எட்கர் தர்ஸ்டன் எழுதிய 'தென்னிந்திய ஈமச் சடங்குகள்' நூல் அறிமுகம். நன்றி தினத்தந்தி.சுவாசம் பதிப்பக வெளியீடு.புத்தகத்தின...
16/07/2025

எட்கர் தர்ஸ்டன் எழுதிய 'தென்னிந்திய ஈமச் சடங்குகள்' நூல் அறிமுகம். நன்றி தினத்தந்தி.

சுவாசம் பதிப்பக வெளியீடு.

புத்தகத்தின் விற்பனை விவரங்கள் கீழே commentல் கொடுக்கப்பட்டுள்ளன.

ப.சரவணன் எழுதிய 'இந்தியாவை உலுக்கிய கிரைம் வழக்குகள்' நூல் அறிமுகம். நன்றி தினமலர்.சுவாசம் பதிப்பக வெளியீடு.புத்தகத்தின்...
14/07/2025

ப.சரவணன் எழுதிய 'இந்தியாவை உலுக்கிய கிரைம் வழக்குகள்' நூல் அறிமுகம். நன்றி தினமலர்.

சுவாசம் பதிப்பக வெளியீடு.

புத்தகத்தின் விற்பனை விவரங்கள் கீழே commentல் கொடுக்கப்பட்டுள்ளன.

Address

Shop At: Selaiyur, Tambaram, (Opp GST Office Selaiyur)
Chennai
600073

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+918148066645

Alerts

Be the first to know and let us send you an email when Swasam Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swasam Publications:

Share

Category