07/11/2025
என் கடன்
பணி செய்து கிடப்பதே
என்றார் திரு வி.க. என்ற
திரு வி.கலியாணசுந்தரனார்.
நாகர்கோவில் கோட்டார்
48-ாவது வார்டு
கச்சேரி ரோட்டில் வசிப்பவர்
அப்துல் பாஸித்.
சமூக ஆர்வலர் மற்றும்
சமூக சேவகர்.
சமூக மக்களிடம்
அன்பு நேசம பாச நட்புடன்
ஆர்வங் கொண்டு
சமூக சேவை செய்பவர்.
சமூகத்தில் ஆர்வம்
இருப்பவரால் தான்
சமூக சேவை செய்திட முடியும்.
அதனால் தான்
அப்துல் பாசித் ஒரு
சமூக சேவராக திகழ்கிறார்.
பொது நலனுக்காக
எத்தனையோ விசயங்களை
தன்னுள் எடுத்து
பொதுநலத்துக்கு
சேவை செய்து வருகிறார்.
தற்போது SIR பணியில்
தன்னை பெருநேரமாக ஈடுபடுத்தி
பொது இடங்களில்
சொற்பொழிவுகளுடன்
தனியாகவும்
விவரங்களை
புரியும் வண்ணம்
விளக்கி வருகிறார்.
பொறுமையுடன்
தான் ஈடுபடும் செயல்களில்
தன்னை அர்ப்பணித்து
நல் பணி செய்பவரை
பாராட்டி வாழ்த்துவோம்.
ஒரு வழக்குரைஞராக
பயிற்சி எடுத்து வரும் இவர்
வழக்கறிஞராக சிறக்க
அருளாளன் வல்ல ரஹ்மான்
அருள் புரிவானாக.
பொது சேவை என்பது
இரக்கம் உடையவர்
மனதில் ஏற்பட்டு
பரந்து விரிவது
__ இந்த மொழி
பாஸித்துக்கு
ரொம்பவே பொருந்தும்.