Karthik vishwakarma

Karthik vishwakarma KARTHIK VISHWAKARMA

09/11/2024
மூளை தான் முதலீடு... 🤔😀ஒரு பையன் தினம் வங்கிக்கு வந்து ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து கொண்டு இருந்தான்.இதை கவனித்த வங்கி ...
03/11/2024

மூளை தான் முதலீடு... 🤔😀

ஒரு பையன் தினம் வங்கிக்கு வந்து ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து கொண்டு இருந்தான்.

இதை கவனித்த வங்கி மேலாளர் அவனை என்ன சேதி என்று கேட்க அதற்கு அந்த சிறுவன் வாங்க உங்க உங்க அறைக்கு அங்க போய் பேசலாம்! என்றான்.

உள்ளே போனதும் சிறுவன் சொன்னான் சார்! தினம் நான் ஒருவரிடம் ஆயிரம் பந்தயம் கட்டுவேன்! ஜெயித்த காசை இங்கு வந்து டெபாசிட் செய்கிறேன் என்றான். சரி இன்று என்னுடன் பந்தயம் கட்டு ஜெயித்தால் உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்! சொல்லு என்ன பந்தயம்.

சிறுவன் சொன்னான் என் கண்ணை என்னால் முத்தமிட முடியும்! சரி பந்தயம் தயார் எங்கே உன் கண்ணை நீ முத்தம் இடு பார்க்கலாம். என்றார் மேலாளர்.

அவனும் உடனே தன் செயற்கை கண்ணை முகத்தில் இருந்து கையில் எடுத்து முத்தம் கொடுத்தான்!

வங்கி மேலாளரும் தன் தோல்வியை ஒப்பு கொண்டார்.

ஆனால் அவர் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை, சிறுவனிடம் இன்னும் ஒரு தடவை பந்தயம் கட்டலாம், ஆனால் இந்த தடவை பந்தயம் என்னை வைத்து கட்ட வேண்டும். சரி என்றான் சிறுவன் மேலாளரை பார்த்து நீங்கள் இன்று பட்டா பட்டி டவுசர் தான் போட்டு இருக்கீங்க அதே ஆயிரம் ரூபாய் பந்தயம்! என்றான். இப்பொழுது மேலாளருக்கு சந்தோசம்! சரி என்று பந்தயதிற்கு ஒப்பு கொண்டார்.

ஆனால் சிறுவன் ஒரே ஒரு கண்டிசன் வங்கியில் வேலை செய்யும் பத்து பேர் முன்னிலையில் தான் நடக்கனும் என்று சொல்ல அவரும் சரி என்றான்.

பத்து பேர் முன்னிலையில் அவர் தன் கால் சட்டையை விளக்கி காட்ட, என்ன ஆச்சரியம் அவர் அன்று பட்டா பட்டி டவுசர் போடவே இல்லை! சிறவனை ஜெயித்து விட்டோம் திரும்பி ஆயிரம் ரூபாயை வாங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் அவர் தள்ளி குதிக்க!

வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள். என்று சொல்ல அவர் பதறி போய் என்ன ஆச்சு என்று கேட்க,

இந்த சிறுவன் எங்கள் எல்லாரிடமும் வந்து உங்கள் வங்கி மேலாளரை இன்று உங்கள் முன் டவுசரை கழட்டி நிற்க வைக்கிறேன் என்று ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினான். நாங்களும் நீங்கள் மிகவும் கண்டிப்பானவர் கட்டாயம் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று பத்து பேரும் தலைக்கு ஆயிரம் பந்தயம் கட்டினோம் என்றார்கள்.

சிறுவன் தோற்ற ஆயிரத்தை மேலாளரிடம் கொடுத்து விட்டு பத்து பேரிடம் பத்தாயிரம் வாங்கி கொண்டு வேற வங்கிக்கு செல்ல ஆரம்பித்தான்...

மூளை தான் முதலீடு... 🤔
நன்றி Damodharan Ramu 😀

அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) அந்த கணக்கு தெரியுமா?இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் மட்டும்  அல்...
16/10/2024

அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) அந்த கணக்கு தெரியுமா?

இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் மட்டும் அல்ல.

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ?

அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.

அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ?

அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ?

அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.

ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்
எப்படி என்கிறீர்களா...?

இதோ இப்படி,,,,

கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள் 9+12+27=48

எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.

இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் (மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத) கை கூடுகின்றன.

நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
இன்னும் சந்தேகமா ?

ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! இந்த யோக அறிவியல் உண்மை விளங்கும்.

ஓம் குருவே சரணம் 🙇 🙏

பணம் நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவார்கள்?அனுபவத்துல சொல்றேன்கொஞ்சம் கூட நம்மள மனுசங்களா மதிக்க...
16/10/2024

பணம் நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவார்கள்?

அனுபவத்துல சொல்றேன்

கொஞ்சம் கூட நம்மள மனுசங்களா மதிக்கவே மாட்டாங்க.

அவங்க தேவைக்கு நம்மள பயன் படுத்திக்குவங்க.

அவங்க வீட்ல எந்த நல்லது கெட்டது நாலும் நமக்கு யாரோ சொல்லிதா தெரிய வரும்.

முக்கியமா நம்ம வீட்டுக்கு வரத கமி பண்ணிக்குவாங்க.

ரெண்டு வார்த்த அதையும் அளந்து அளவா பேசுவாங்க.

அறிவுரை அடை மழையா பொழிவாங்க.

பணமில்லாவிட்டால் ஒரு நாள் பொழுதை நீங்க கழிக்க முடியாது.

மளிகை பொருட்கள், குழந்தைகளின் படிப்பு, அன்றாடம் செலவு, போக்குவரத்து, டாக்டர் பில் முதற்கொண்டு எல்லாவற்றிக்கும் பணம் வேண்டும்.

பணம் இல்லை என்றால் உங்கள் தன்மானம் அழிந்து விடும். உங்கள் வாழ்க்கை துணை கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.

உயிரற்ற பணத்திற்கு இருக்கும் மதிப்பு கூட! உயிருள்ள மனிதனுக்கு இருப்பதில்லை!

இயற்கைக்கும் மனிதனுக்கும்  இடையே நடக்கும் போரில் இயற்கையே வெல்லும் நீங்கள் ஒரு நிலத்தை வாங்குகிறீர்கள், அதன் உரிமையாளர் ...
15/10/2024

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரில் இயற்கையே வெல்லும்

நீங்கள் ஒரு நிலத்தை வாங்குகிறீர்கள், அதன் உரிமையாளர் நீங்கள் அதைக் கொடுப்பீர்களா அல்லது மற்றவர்களுக்குக் கொடுப்பீர்களா?

இயற்கையும் யாருக்காகவும் தன் பாதையை மாற்றாது, #சென்னையில் வாழும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரு பாடம்🙂

Address

Chennai

Telephone

9445339883

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karthik vishwakarma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share