Humun Cinema News

Humun Cinema News Humun Cinema news is an Indian cinema news channel across the world. It is sub-company of Humun Ente

Rail இன்று முதல் Ott Plusல் மாதம் ரூ.29/க்கு உங்களுக்கு விருப்பமான படங்களை பார்க்க தவறாதீர்கள். Vediappan Discovery Cine...
31/10/2024

Rail இன்று முதல் Ott Plusல் மாதம் ரூ.29/க்கு உங்களுக்கு விருப்பமான படங்களை பார்க்க தவறாதீர்கள். Vediappan Discovery Cinemas Bhaskar Sakthi Ahila Sridhar ரமேஷ் வைத்யா

31/10/2024

முந்தைய நாள் சொன்னது போல ஒருவர் போல ஒருவர் நடித்ததில் ஆட்களுக்குள் வன்மம் கிளறிவிடப்பட்டிருக்கிறது. வருகிற நாமினேஷனில் எல்லாம் வெளிப்படும். தீபாவளி பட்சணம் எல்லாம் செய்து கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய பொழுது அநேகமாய் மொக்கையாய் இருக்க அனைத்து வாய்ப்புகளும் உண்டு.

30/10/2024

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

30/10/2024

Interesting, engaging. very nice Backround score G.v. Prakash

Dont Breathe தயாரிப்பாளரின் படம். மகனின் இழப்பை தாங்க முடியாமல் தற்கொலைக்கு போகும் தாயை ஒருவன் கடத்தி, அவளுக்கு பேரலைஸ் ...
30/10/2024

Dont Breathe தயாரிப்பாளரின் படம். மகனின் இழப்பை தாங்க முடியாமல் தற்கொலைக்கு போகும் தாயை ஒருவன் கடத்தி, அவளுக்கு பேரலைஸ் ஊசிப் போட்டு மெல்ல மெல்ல கொல்ல திட்டமிடுகிற சைக்கோ. அமெரிக்கபடங்களில் சைக்கோவிற்கு பின் கதை எல்லாம் தேவையில்லை. சைக்கோன்னா சைக்கோதான். கடைசியில் அவள் எப்படி தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. நடுவே அவளுக்கு உதவப் போய் ரெண்டு பேரை காவு வாங்கிவிடுகிறாள். இம்மாதிரி கதைக்கான அத்தனை டெம்ப்ளேட்டுடன் இருக்கிறது.

27/10/2024

ஒரு வழியாய் தர்ஷாவை அனுப்பி விட்டார்கள். தர்ஷா தன் பங்கிற்கு வெளிவந்ததுவுடன் பேசிவிட்டுத்தான் போனார். அர்னவ் பேசும் போது பாதியில் குறுக்கிட்டு வியாகியானம் செய்த வி.ஜே. தர்ஷாவை மொத்தமாய் பேச விட்டுவிட்டுத்தான் தடுத்தார். பார்ஷியாலிட்டி. உள்ளெ இருக்கும் போதே சொல்லுங்கள் என்கிறார். அப்படி சொல்லாமல் சொல்லி ஒருத்தரை நாமினேட் செய்து வெளியனுப்பவதுதான் ஆட்டமே.

27/10/2024

விஜய்யின் பேச்சு சொல்லிக் கொடுத்தது. மனப்பாடம் செய்தது.என்றெல்லாம் விமர்சனங்கள் இருந்தாலும். நான் பார்த்தவரையில் எப்போதும் இண்ட்ரோவர்ட்டாக புரிந்து கொள்ளப்பட்டவரிடமிருந்து நல்ல பேச்சே.குறிப்பாய் பெரியாரின் இறை மறுப்பைதவிர மற்றதையெல்லாம் எடுத்துக் கொள்கிறோம் என்றது. விகிதாச்சார பிரதிநதித்துவம். மற்றும் உடன் கூட்டணி சேருகிறவர்களுக்கு கூட்டணி ஆட்சிக்கான அறிவிப்பு என கூடிய கூட்டத்தை சினிமா போல கட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இவரது வரவு ஒரு சின்ன கவனத்தைப் பெற்றிருக்கிறது என்பதை இந்த போஸ்டுக்கு வந்து கருத்து சொல்லும் எதிர்கட்சிக்காரர்களின் கமெண்டுகளே சாட்சி. நிஜமாகவே பத்து பைசாவுக்கு பெறாத பேச்சு என்று நினைத்தால் அதை மிக சுலபமாய் கடந்து போக முடியும். எனிவே பார்ப்போம் அவரின் அடுத்த் செயல்பாடுகளை. இதை வைத்து அவர் அடுத்த ஆட்சி அமைப்பார் என்று சொல்ல்வது எல்லாம் குழந்தைத்தனம். என் மகனார் இந்த நிக்ழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது சொன்ன கருத்து ஆச்சர்யமாய் இருந்தது.

ஐந்தாம் வேதம். வழக்கமான இந்திரா சவுந்தராஜன், நாகா காம்பினேஷன் மைத்திலாஜிக்கல் திரில்லர். அந்த வகையில் மிக சுவாரஸ்யமான நா...
27/10/2024

ஐந்தாம் வேதம். வழக்கமான இந்திரா சவுந்தராஜன், நாகா காம்பினேஷன் மைத்திலாஜிக்கல் திரில்லர். அந்த வகையில் மிக சுவாரஸ்யமான நாட் தான். ஒவ்வொரு எபிசோடிலும் சரியான ஹூக் பாயிண்டுடன் அடுத்த எபிசோடுக்கு போனது சுவாரஸ்யமே. நாகா தான் கிரியேட் செய்திருந்தாலும், அவரின் டச் மிக குறைவாகவே இருந்தது. சாய் தன்ஷிகாவின் கேரக்டரில் மிகச் சரியாய் பொருந்தியிருந்தார். பட் ஒய்.ஜி.பி மற்றும் அவரது மகன் கேரக்டர் எல்லாம் ரொம்பவே 80களின் கேரக்டர்களாகவே இருந்தது மிகப் பெரிய குறை. ஏஐ, 3டி மீட் பிரிண்டர், கிட்டத்தட்ட டெர்மினேட்டர் கேரக்டர் போல ஒரு விஷயத்தை எடுத்திருந்தாலும், ஏனோ மேக்கிங்கில் பட்ஜெட் காரணமாகவோ, அல்லது புவர் சிஜி எல்லாம் சேர்ந்து பழைய டிவி சீரியல் எபெக்ட்டை தந்தது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. பட். கதை தரும் மைத்தாலஜி, சயின்ஸ், திரில்லர் எல்லாம் சேர்ந்து விடாது கருப்பு கொடுத்த உணர்வை கொடுக்க் முயன்றது ஓரளவுக்கு வெற்றியே என்று தான் சொல்ல வேண்டும்.

27/10/2024

வழக்கம் போல நேற்றைய எபிசோட் தடால்புடாலென வி.ஜே ஹோஸ்டிங்கில் போனது. அடிபிடி ஆட்டத்தில் பெண்களை கஷ்டப்படுத்தினார்கள் என்று பிம்பத்தை ஆண்களிடையே ஏற்படுத்தியது. சுனிதா இல்லை என்று சொல்லியும். முத்துகுமார் மட்டுமே எல்லாவற்றையும் முடிவு செய்கிறார் நீங்க எல்லாம் என்ன சொம்பைங்களா? என்று ஏத்தி விட்டவரை அடுத்த வாரத்துக்கான சுவாரஸ்யத்தை ஏற்றி விட்டிருக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு ஆதரவாய் வி.ஜே பேசியதும் அவர்கள் எல்லாம் கண் கலங்கியதும், எமோஷனலாய் ஃபீல் லுக் கொடுத்தது எல்லாம் மஹா நடிப்பு.

15 வருடங்களுக்கு மேலான கேஸ்களை மூடச் சொல்லி ஒரு உத்தரவை கோர்டில் வாங்குகிறது போலீஸ். ஆனால் அதே நேரத்தில் 15 வருடங்களாய் ...
26/10/2024

15 வருடங்களுக்கு மேலான கேஸ்களை மூடச் சொல்லி ஒரு உத்தரவை கோர்டில் வாங்குகிறது போலீஸ். ஆனால் அதே நேரத்தில் 15 வருடங்களாய் என் பெண்ணை கொலை செய்தவனை கண்டுபிடிக்காத போலீஸ் கண்டுபிடிக்க சொல்லி அப்பெண்ணின் தாய் போராடுகிறாள். உடன் ஒரு போலீஸ் அதிகாரியும் சப்போர்ட் செய்கிறார். ஏனென்றால் அவர் சிறு பிள்ளையாய் இருந்த போது அதிதியை கடத்தியது ஒரு பெண் என்று போலீஸிடம் சொல்ல முயன்று சிறுவனை நம்பாமல் விட்ட நிலையில் அவர் போலீஸ் ஆனதும் அக்கேஸை எடுக்க கூட போராடுகிறார். அதே நேரத்தில் ஒரு வாக்கி டாக்கி மூலம் 15 வருடத்திற்கு முன் 11.11 மணிக்கு அந்த கேஸை விசாரித்த அஹலாவதிடமிருந்து நம்பமுடியாத வகையில் தொடர்பு கிடைக்க, இரண்டு டைம்லைனில் பயணித்து அந்த குற்றவாளியை கண்டு பிடிக்கிறார் நாயகன். இது போல மூன்று செக்டர்கள். சுவாரஸ்யமான ஐடியா. இது போல பாடீஸ் என ஒரு தொடர் ஆங்கிலத்தில் மூன்று கால நிலை ஒரு போலீஸ் என செம்ம ஐடியா வந்திருக்கிறது. இது ஜீ5யில் தமிழிலும் இருக்கு.

26/10/2024

கரகர சவுந்தர்யா கேஷுவலாய் இருக்கும் பெண் இன்மேட்ஸ்களில் ஒருவர். பெரியதாய் பாலின பேதமில்லாமல் பழகுகிறார். நீ என்னத்த காண்ட்ரிப்யூட் பண்ணிட்டே என்று கேட்பதற்கு முன்பாகவே நான் இப்பத்தான் ஸ்டார்ட் பண்ணுறேன். அதனால எனக்கு நாமினேஷன் ப்ரீவேணும்னு கேட்கிறார். அவருக்கு கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே. கொடுக்கவில்லை. ஆனால் அதற்காக ஓரமாய் போய் அழவில்லை. ஆண் நண்பரிடம் இதைப் பற்றி டிஸ்கஸ் செய்கிறார். நூல் விடும் போட்டி செம்ம இண்ட்ரஸ்டிங். ஆனந்தி பெஸ்ட் ப்ளேயர் என்பது கொஞ்சம் இடரலான விஷயம் தான்.

25/10/2024

நேற்றைய நிகழ்வுகளில் ஏதும் பெரிய சுவாரஸ்யமில்லை என்றே சொல்ல வேண்டும். தேவையில்லாமல் சுனிதா ஜாக்குலினிடம் ஆலு பயன்படுத்தியதற்காக காலையிலேயே சண்டைக்கு போக, ஜாக்குலின் சண்டையை தவிர்த்ததால் புஸ்ஸென ஆனது. லெட்ஸீ டுடே

Address

Flat No. 3GF, Saradha Homes, Old No. 3, New No. 2, Saradha Nagar, Virugambakkam
Chennai
600093

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humun Cinema News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humun Cinema News:

Share

Category