News Que

News Que Daily news Updates

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து  காங்கிரஸ் கட்சியினர்  கண்களில் கருப்...
11/08/2025

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டியும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு

ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் முன்னிலையில் அதிமுக மற்றும் பாமக கட்சிகளை சேர்ந்த 300 க்கும் மே...
10/08/2025

ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் முன்னிலையில் அதிமுக மற்றும் பாமக கட்சிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

மாநிலங்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான அந்தியூர் செல்வராஜ் மற்றும் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மஹா மாரியம்மன் ஆலயத்தில் நான்காம் நாள் பிரம்மோற்சவ விழாவான...
09/08/2025

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மஹா மாரியம்மன் ஆலயத்தில் நான்காம் நாள் பிரம்மோற்சவ விழாவான இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில், தஞ்சை மகாதேவன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும் மயிலை கருணைக்கரங்கள் அ...
09/08/2025

தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில், தஞ்சை மகாதேவன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும் மயிலை கருணைக்கரங்கள் அறக்கட்டளையின் மூலம் சுமார் 75 வயதான ஆதரவற்ற முதியவர் ஆறுமுகத்தை பராமரித்து வந்தனர்அவர் இறந்த பிறகு மகாதேவனும் அவரது மனைவியும் இறுதிச் சடங்குகளை நடத்தி ஆறுமுகத்தின் உடலை நல்லடக்கம் செய்தனர்.இவர்களுடன் திருநங்கைகள் பாரதி,கீர்த்தி ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூரில்  குடியிருப்பு வீடு முன்வாசலை தடுத்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றதால்  பரபரப்பு     ...
22/05/2025

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூரில் குடியிருப்பு வீடு முன்வாசலை தடுத்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றதால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் எடக்குடி வடபாதி கூட்டுக் குடிநீர் நீரேற்ற நிலையத்தில் இருந்து கடற்கரையோர கிரா...
26/04/2025

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் எடக்குடி வடபாதி கூட்டுக் குடிநீர் நீரேற்ற நிலையத்தில் இருந்து கடற்கரையோர கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில், நீர் கசிவு ஏற்பட்டது. பழமையான குழாய்களில் ஏற்பட்ட நீர்க்கசிவு சரி செய்யும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்

கொடைக்கானல் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயில் அருகில் பிரேக் பிடிக்காத பிக்கப் மோதி சின்ன பள்ளத்தை சேர்ந்த ஒருவர் சம்பவ...
15/04/2025

கொடைக்கானல் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயில் அருகில் பிரேக் பிடிக்காத பிக்கப் மோதி சின்ன பள்ளத்தை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலே பலி!

நாடுபுரத்தில் பரபரப்பு!

செய்தியாளர் கோடை ரஜினி...

கொடைக்கானல் செல்ல பெருமாள் மலையிலிருந்து புதிய பாதை விரைவில்        🌎
05/04/2025

கொடைக்கானல் செல்ல பெருமாள் மலையிலிருந்து புதிய பாதை விரைவில்

🌎

வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது- ஊட்டி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு உத்தரவை மறு ஆய்வு செய்யக் க...
05/04/2025

வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது- ஊட்டி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய தமிழ்நாடு அரசின் மனு ஏப்ரல் 8ல் விசாரிக்கப்படும்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 24.02.2025 முதல் 01.03.2025 வரை அகில இந்திய புலிகள் கணக்...
20/02/2025

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 24.02.2025 முதல் 01.03.2025 வரை அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளதால் அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்படுகிறது !

மீண்டும் 03.03.2025 லிருந்து பாபநாசம் சோதனை சாவடி திறக்கப்பட்டு வழக்கம் போல் மக்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் - வனச்சரக அலுவலர்
பாபநாசம்.

அண்ணா சாலைக்கு தனியாக வரேன்!!!உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்
20/02/2025

அண்ணா சாலைக்கு தனியாக வரேன்!!!உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்டணமில்லாமல்  அரசு நகர ...
10/02/2025

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்டணமில்லாமல் அரசு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது‌.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சண்முக நதியில் இருந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு நகர பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இலவசமாக இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை பழனி திருக்கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது. இலவச அரசு பேருந்துகள் இயக்கத்தை பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இன்று முதல் 3 நாட்களுக்கு இலவசமாக பேருந்து இயக்கப்படுவது போலவே இன்று முதல் மூன்று நாட்களுக்கு பழனி மலைக்கோவிலில் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகிகள் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#தைப்பூசம்

Address

Perungudi
Chennai
6000096

Alerts

Be the first to know and let us send you an email when News Que posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share