23/02/2025
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எழுத்தடைவுகள் - 16 தொகுதிகள்
மழலைச் செல்வங்கள் தொடங்கி மெய்யியல் ஆழம் கண்ட அறிவாசான்கள்வரை அனைவருக்குமாக எழுதும் எழுத்தாற்றல் கொண்ட ஐயா அவர்களின், எழுத்தியக்க முயற்சிகள் பல.. பலருக்கும் ஐயா எழுதிய ஆயிரக்கணக்கான மடல்கள், வரைந்த ஓவியங்கள், கதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், அணிந்துரைகள் என்பவையும் விரிவானவை... எழுதுவதற்கு எண்ணிக் குறிப்பெடுத்து வைத்தவை பல..
பாவலரேறு அவர்களின் எழுத்தாக்கங்கள் தமிழ்நாட்டு வரலாற்றின் 50 ஆண்டுக் காலத்தை முன்னிறுத்திக் காட்டுவன.. அவரின் படைப்புகளைக் காணாமல் 50 ஆண்டுக் காலத்தை வரலாற்றில் நிறைவு செய்ய முடியாது...
தமிழ்த் தேச விடுதலையில் அக்கறை கொண்ட அனைவரும் கட்டாயம் படித்தறிய வேண்டிய இத்தொகுப்புகள், எளியவகையில் கையாளுவதற்கு ஏற்ற முறையில் பின்வருமாறு நிரல் செய்யப்பெற்றுள்ளன.
1. தனிப் பாடல்கள் – கனிச்சாறு – 580 பக்கங்கள்
2. பாவியங்கள் - 320 பக்கங்கள்
3. பா - நூல்கள் - 420 பக்கங்கள்
4. உரை நூல்கள் - 1 - 380 பக்கங்கள்
5. உரை நூல்கள் - 2 - 340 பக்கங்கள்
6. உரை நூலகள - 3 - 320 பக்கங்கள்
7. உரை நூல்கள் - 4 - 400 பக்கங்கள்
8. உரை நூல்கள் - 5 - 320 பக்கங்கள்
9. உரை நூல்கள் - 6 - 570 பக்கங்கள்
10. உரை நூல்கள் - 7 - 420 பக்கங்கள்
11. உரை நூல்கள் - 8 - 240 பக்கங்கள்
12. உரை நூல்கள் - 9 - 240 பக்கங்கள்
13. உரை நூல்கள் - 10 - 240 பக்கங்கள்
14. உரை நூல்கள் - 11 - 280 பக்கங்கள்
15. உரை நூல்கள் - 12 - 200 பக்கங்கள்
16. ஓவியங்கள், ஒளிப் படங்கள், பிற பதிவுகள் - 200 பக்கங்கள்
#பாவலரேறுபெருஞ்சித்திரனார்
#தமிழ்த்தேசியம்
#இந்தித்திணிப்புஎதிர்ப்பு
#தென்மொழிபதிப்பகம்
#தமிழ்மொழி
#தமிழ்நாடுஅரசியல்
#இலக்கியஇலக்கணஆய்வுகள்
#அரசியல்ஆய்வு
#மொழியாய்வு
#வரலாறு