Dmk Medias

Dmk Medias Digital Creator

30/05/2026

காங்கிரஸ் இனி மெல்லச் சாகும்!

தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலினோடு ராகுல் காந்தி ஒன்றாக கலந்துகொள்ளவில்லை, பிரிவு உறுதியாகிவிட்டது என்று பலர் பேசினார்கள். ஆம், அணி மாறத்தயாராகி இருந்த காங்கிரஸை ப.சிதம்பரம்தான் இழுத்துப்பிடித்து ஒட்ட வைத்தார் என்று செய்திகள் வந்தன. தேர்தல் முடிந்தவுடன் அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது காங்கிரஸ்.

ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்தாரே ராகுல் காந்தி! பக்கத்து மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவுக்கு கூட விஜய் செல்லவில்லை. அமைச்சர்களையும் யாரையும் அனுப்பவில்லை. அதுகுறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதும் வழக்கம்போல வாயை திறக்கவில்லை விஜய்.

இப்போது டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த விஜய் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியையோ அல்லது ராகுல் காந்தியையோ சந்திக்கவில்லையே ஏன்? 3 கிமீ தொலைவுக்குள்தானே பிரதமர் இல்லமும் ராகுல் இல்லமும் உள்ளது. கால அவகாசமும் இருந்ததே! ஏன் சந்திக்கவில்லை?

காரணம், இனி காங்கிரஸின் தயவு தவெகவுக்கு தேவையில்லை. அதிமுகவை உடைக்க முயன்றவர்களில் நான்கு பேரை உடைத்து, தன் பக்கம் இழுத்துவிட்டோம், அவர்கள் எல்லோரையும் வெற்றி பெறச் செய்துவிடலாம் என்ற மிதப்பில் இருக்கிறார் விஜய். கூடவே, 20 ஆண்டுகள் சுமந்த திமுகவையே காங்கிரஸ் கட்சி ஒரு நொடியில் தூக்கியெறிந்து விட்டது. அரசியலில் கத்துக்குட்டியான நாம் எம்மாத்திரம் என்று யோசித்திருப்பார்கள். அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களை ஒதுக்க வேண்டியிருக்கும், அவர்களை தூக்கிச் சுமப்பதற்கான கட்டமைப்பு பலமும் இன்னும் அங்கு உருவாகவில்லை. காங்கிரஸை தவெக இணைத்துக்கொண்டிருப்பதை பாஜகவும் விரும்பவில்லை.

எனவே காங்கிரஸை எப்படி கழட்டிவிடுவது என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டதன் அறிகுறியாகவே விஜய்யின் தொடர் நிராகரிப்புகள் உள்ளன. ‘கிடைக்காத கொம்புக்கு ஆசைப்பட்டு, கையில் இருந்த பூவை விட்டுவிடாதே’ என்பார்கள் ஊர்ப்பக்கம். காங்கிரஸால் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் தனியாக கொம்பை எட்டிப்பிடித்து பூவை பறிக்க முடியாது. அடுத்தவர் முதுகில் சவாரி செய்துதான் சில எம்.எல்.ஏக்களையாவது பெற்றுக்கொண்டிருக்க முடியும். திமுகவும் இனி எந்த காலத்திலும் காங்கிரஸை சேர்க்கக்கூடாது என்று அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி சமீபத்தில் பேசியிருக்கிறார்.

‘You will never rule over the people of Tamil Nadu’ அது பாஜகவுக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் சேர்த்துதான் சொல்லிக்கொண்டாரோ ராகுல் காந்தி!

காங்கிரஸ் இனி மெல்லச் சாகும்! மிச்ச சொச்ச இருப்பும் காலியாகும்!

--பகிர்வு..

29/05/2026

சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!

இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நாளை (மே 30, சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னையில் பிரம்மாண்டமான முறையில் 'GenZ DMK' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

'ஜென்-இசட்' (Gen-Z) எனப்படும் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் சமூக ஊடகங்கள் வாயிலாகத் திராவிட இயக்கக் கொள்கைகளை இன்னும் ஆழமாகக் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாகும். திமுக ஆதரவு இளம் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் யாசர் அராபத் (Lawyer Yasar Arafhat) உள்ளிட்ட திமுக ஆதரவு உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் சொந்த முயற்சியில் இந்த எழுச்சிமிகு இயக்கத்தை ஒருங்கிணைத்துள்ளனர்.

வாட்ஸ்அப்பில் குவியும் இளைஞர் பட்டாளம்!
இது வழக்கமான அரசியல் மேடையோ அல்லது அதிகாரப்பூர்வ உட்கட்சிக் கூட்டமோ அல்ல. கொள்கை ரீதியாகத் திராவிட இயக்கத்தின் மீது பற்றுகொண்ட இளைஞர்களால், முழுக்க முழுக்க தங்களின் முயற்சியில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஒருங்கிணைப்பு வேலைகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் தளங்களில் மிக ஆக்கப்பூர்வமாக நடந்து வருகின்றன. பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்கள் உருவாக்கப்பட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளம் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள், மற்றும் திமுக ஆதரவு மீம் கிரியேட்டர்கள் மின்னல் வேகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த வாட்ஸ்அப் நெட்வொர்க் மூலமாகவே அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் நாளை மாலை நிகழ்ச்சி நடக்கும் இடம் குறித்த விவரங்கள் மிக உத்வேகத்துடன் பகிரப்பட்டு வருகின்றன.

பூங்காவில் இல்லை; பிரம்மாண்ட அரங்கிற்கு மாற்றம்!
முதலில் இந்த விவாதக்கூட்டம் அண்ணா நகர் டவர் பூங்காவில் எளிமையான முறையில் நடத்தப்படுவதாகத் தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாட்ஸ்அப் குரூப்கள் வழியாக எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு அதிகமான திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து வருவதால், பூங்காவில் இடநெருக்கடி ஏற்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் கருதுகின்றனர். இதனால், நாளை மாலை 4 மணிக்கு சென்னையில் தனி அரங்கில் நடத்த உள்ளனர்.

விவாதத்தின் முக்கிய அஜெண்டா:
2K கிட்ஸ் மொழியில் திராவிட சித்தாந்தம்: இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் மீம்ஸ்களில் வாழும் இந்தத் தலைமுறையிடம், திராவிட இயக்கத்தின் சாதனைகளையும், சமூக நீதிக் கருத்துகளையும் அவர்களின் சொந்த 'ஸ்லாங்'-கில் (Gen-Z Slang) நேர்மறையாகவும் சுவாரசியமாகவும் எப்படிக் கொண்டு சேர்ப்பது?

இளைஞர்களின் புதிய ஐடியாக்கள்: எந்தவித கட்சி ஃபார்மாலிட்டிகளும் இன்றி, இளைஞர்கள் தங்களின் புதிய சிந்தனைகளையும், ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் வெளிப்படையாகப் பேச இந்த மேடை முழு சுதந்திரம் வழங்குகிறது.

டிஜிட்டல் மீடியா வியூகம்: சமூக வலைத்தளங்களில் சமூக நீதி-பெரியாரியக் கருத்துக்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ஒரு புதிய, துடிப்பான டிஜிட்டல் படையை உருவாக்குவது இவர்களின் பிரதான இலக்காகும்.

திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் கொள்கைப் பற்றால் வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த 'GenZ DMK' நிகழ்ச்சி, தமிழக இணையவாசிகள் மற்றும் இளம்தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.

பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய அனைவருக்கும் வாழ்த்துகள் 🌹🌹🌹

29/05/2026

மாறுவேடத்தில் சென்ற தவெக அமைச்சர்.

~ நீங்க சும்மா போனாவே ஒருத்தருக்கும் அடையாளம் தெரியாதேபா.😂

29/05/2026

ஆளும் கட்சியா இருந்து தோற்றே போனலும் எங்கள் வேட்பாளர்கள் யாரும் கட்சி தாவல.. கெத்தா காலர தூக்கி சொல்வோம் நாங்க திமுகடா. 🔥

29/05/2026

திமுகவில் இணைய அதிமுக மு. அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர். சிவி சண்முகம் உள்ளிட்ட 15 பேர் தூது என தகவல் ...

29/05/2026

Book பண்ண volvo bus வரல சார்….🤷

ஓவரா பேசாதீங்க….. volvo bus வரலனா volvo company கிட்ட கேளுங்க…. government வண்டிக்கு தான் நான் பொறுப்பு….🙃

சார்… government கிட்ட volvo bus இருக்கு சார்...🙄

ஓ அப்படியா...🤦🤦

விசய் அண்ணாவிட மூளைக்காரன் .

29/05/2026

நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir - Udhayanidhi Stalin 🔥🔥🔥🔥🔥🔥

29/05/2026
29/05/2026

ஊடக வாயை மூடலாம் ... ஊர் வாயை மூட முடியாது - புதிய தலைமுறை சேனல் அலறல்🤣

நீ தானே... விஜய் அவுத்தாரு.... விஜய் போட்டாருனு செய்தி போட்டவன் ?🤔

29/05/2026

|| விவசாயத்தை விட கஷ்டம் விளையாட்டு - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Address

Kalaignar Street
Chennai

Telephone

+918807427376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dmk Medias posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share