20/01/2025
ஏன் தேவை சினிமா கன்சல்டன்சி?
--------------------------------------------------
ஒரு நல்ல இயக்குநர் என்பவர் பெரும்பான்மையான மக்கள் ரசிக்கக்கூடிய படங்களை எடுத்துத் தருவார். அவர் அக்கவுண்ட் பார்ப்பதில், எடுத்த படத்தை வியாபாரம் செய்வதில் எக்ஸ்பர்ட்டாக இருப்பாரா என்று கேட்டால், பெரும்பாலும் வாய்ப்பில்லை என்பதே பதிலாக இருக்கும். அது தேவையுமில்லை.
ஒரு தயாரிப்பாளருக்குப் பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது, எப்படிச் செலவு செய்வது என்பவை தெரிந்திருக்கும். சீன்கள் பற்றியோ, ஷாட்ஸ் பற்றியோ, கேமரா கோணங்கள் பற்றியோ, எடிட்டிங்கின் நெளிவுசுளிவுகள் பற்றியோ, வியாபாரத்தின் அத்தனை நுணுக்கங்கள் பற்றியோ முழுயைாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு விநியோகஸ்தருக்கு வியாபார ரீதியில் படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகர்கள் பற்றி, டெக்னீசன்களின் முக்கியத்துவம் பற்றி, எத்தனை சென்டர்களில் ரிலீஸ் செய்யலாம் என்பவை பற்றித் தெரிந்திருக்கும். படம் பார்த்தபின் மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது பற்றி ஓரளவு கணிக்கக்கூடும். ஆனால், ஒரு சாதாரண கதையை அவரிடம் சொன்னால் அதனை எப்படி திரைக்கதையாக்குவது, எப்படிப் படமாக்குவது என்பது பற்றித் தெரிய வாய்ப்பு குறைவு.
ஒரு மேஸ்திரி இல்லாமல் கட்டிடம் கட்ட முடியாது. அதற்காக, மேஸ்திரிதான் எல்லாமே என்றும் சொல்லிவிட முடியாது. டிசைன், அப்ரூவல், ஒர்க்கிங் டிராயிங் என்று முக்கியமான வேலைகளைச் செய்ய எக்ஸ்பர்ட்ஸ் வேண்டும். கட்டிய வீடுகளை விற்பனை செய்ய தனி டிபார்ட்மெண்ட் வேண்டும்.
அதுவே சினிமாவுக்கும் பொருந்தும்.
சரி, சினிமா கன்சல்டன்ட் என்னவெல்லாம் செய்வார்?
1. கதையையும், திரைக்கதையையும் மெருகேற்ற அனுபவசாலிகளை ஏற்பாடு செய்வார்.
2. படமாக்கப்படும் விதத்தை சரிபார்க்க அதற்கான ஆட்களை ஏற்பாடு செய்வார்.
3. செலவைக் கவனிக்க ஆட்கள் இருப்பார்கள்
4. முடித்த படத்தைப் பார்த்து விவாதித்து சரிசெய்ய அனுபவசாலிகளை ஏற்பாடு செய்வார்
5. வியாபாரத்துக்கு சம்பந்தப்பட்ட ஆட்கள் / நிறுவனங்களிடம் பேச / படத்தைக் காட்ட ஏற்பாடு செய்வார். லாபகரமாக வியாபாரத்தை முடிப்பார். பேராசைப்பட்டு நஷ்டப்பட வைக்க மாட்டார்.
6. இவை அத்தனையையும் அட்வகேட் மூலம் அக்ரீமெண்ட் போட்டு செயல்படுவார்.
விரைவில் நல்ல, லாபகரமான சினிமாக்களைத் தயாரிக்கலாம்.
-கஸாலி,
இயக்குநர், தயாரிப்பாளர் & சினிமா கன்சல்டன்ட்
+91 97910 72335