
20/09/2025
கேபிஒய் பாலா பதிலடி
கேபிஒய் பாலா விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தவர் என்றாலும் அதன் பிறகு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதன் மூலமே அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தார். நிறைய ஆம்புலன்ஸ்கள், பண உதவிகள், பொருள் உதவிகள் செய்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பேட்டி கொடுத்த யூ டியூபர் ஒருவர் பாலாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர் ஒரு சர்வதேச கைக்கூலி என்ற வகையில் பேட்டி கொடுத்த உடன், உடனே பாலா எக்ஸ்போஸ்டு என அவரை பற்றி அவதூறு செய்திகள் நிறைய வந்தன.
இந்த நிலையில் இது குறித்து அவரே பேட்டியளித்துள்ளார், ஏங்க நான் படத்துல நடிக்கிறேன், இங்க நிறைய ஈவண்ட் போறேன், பாரின் ஈவண்ட் போறேன், நிறைய ad பண்றேன் இதுல இருந்து வர்ற வருமானத்துல செய்றேன், அதற்குள் நான் ஃபாரின் கைக்கூலி என்றெல்லாம் கிளப்பி விடுறிங்களே, எனவும் கூறியுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரும் பேட்டி கொடுத்துள்ளார், ஒரு எஃப் சி பிரச்சினை அதை வச்சுக்கிட்டு மறைச்சு நின்னோம் அப்படி இப்படினு பிரச்சினை கிளப்புறாங்க, அது ஆம்புலன்ஸ் வந்து ரெண்டு நாளிலேயே சரியாயிடுச்சு என்கிறார்.
பாலா மேலும் கூறுகையில் நினைத்திருந்தா லக்சுரி கார், பங்களா இப்படிலாம் செட்டில் ஆகிருக்கலாம், என்னால எனக்கு முடிஞ்ச வருமானத்தை வச்சு நான் செய்றேன் அதற்குள் சர்வதேச கைக்கூலி அளவுக்கு போயிட்டிங்களே என்ற வகையில் பேட்டியளித்துள்ளார் பாலா.
மேலும் பாலா குறித்து அமுதவாணனும் பேட்டியளித்துள்ளார். பாலா சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டவன், இளையராஜாவே அவனை பாராட்டியுள்ளார், உதவும் நோக்கம் கொண்டவன், அவன் மீது வீண்பழி சொல்லாதீர்கள் என கூறியுள்ளார்.