Tamil Sithergal

Tamil Sithergal 🔴𝕎𝕖 𝕨𝕚𝕝𝕝 𝕕𝕠 𝕝𝕚𝕧𝕖 𝕥𝕖𝕞𝕡𝕝𝕖 𝕧𝕚𝕕𝕖𝕠
🎵𝕊𝕚𝕥𝕙𝕖𝕣𝕘𝕒𝕝 𝕤𝕠𝕟𝕘
❇️𝕘𝕠𝕕 𝕋𝕖𝕩𝕥

26/09/2025

*‘’ஆர்வம் என்னும் உந்து சக்தி’’..*......................................

உலகில் யாரலும் செய்ய முடியாது என்று கைவிட்ட செயல்களை சிலர் நிறைவேற்றி காட்டியது தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் மட்டும் அல்ல.. அதன்மீது உள்ள தனியாத 'ஆர்வம்''தான்..

எடுத்த செயலில் ஒருவரிடம் ''ஆர்வம்'' இருந்து விட்டால், ஒவ்வொருநாளும் அவர் லட்சியத்தை நெருங்கிக் கொண்டு இருப்பார் என்பது திண்ணம்..

*வாழ்வின் வெற்றி என்பது, ஒருவரின் செயலில் காட்டும் முயற்சி மட்டும் போதாது.அதன் மீது மிகுந்த ஆர்வத்தைப் பொறுத்தது.*

பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி ஒரு நாவல் ஆசிரியரும் கூட..அவர் அறுபத்தேழு நாவல்களை எழுதி உள்ளார்..

ஒரு முறை செய்தியாளர்கள் அவரிடம்,’’ எழுத்தில் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் எப்படி ஏற்பட்டது? என்று வினவினார்கள்..

அதற்கு அவர் சொன்னார்..’’எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.. படிப்பதற்கு புத்தகம் ஏதும் கிடைக்கா விட்டால், அதற்க்காவே நானே நாவல் எழுதிப் படிக்க ஆரம்பித்து விடுவேன்..

அப்படியே எழுதி,எழுதி எழுத்தாளராகி விட்டேன் என்றார் பெஞ்சமின் டிஸ்ரெலி..

*இரத்தத்தில் உறுதியும், நெருப்பும் கொண்டு, சிந்தனை வேகமும்,, ஆர்வமிக்க மனிதர்கள்தான் உலக ஓட்டத்திற்கு காரணமாக இருக்கின்றார்கள்..*

அரை மனமுள்ளவர்கள், குறிக்கோளற்ற இளைஞர்கள் , வாழ்க்கையென்னும் கடலிலே அடித்து செல்லப்பட்டு அவதிக்கு உள்ளாகிறார்கள்..

ஆம்.,நண்பர்களே..,

*ஆர்வம்’’’ என்பதற்கு நிகரானது வேறு எதுவும் இல்லை..*

ஆற்றலைத் தருவது ஆர்வம்; ஆர்வத்தைத் தருவது வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை.

*ஆசைகள் ஆர்வங்களாக மாறவேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புக்களாக மாற வேண்டும்*

*விடாமுயற்சியும், செயலில் ஆர்வம் இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்..🌹🙏🏻💐*

24/09/2025

இனிய காலை வணக்கம்🌼
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் சொத்து.

தன்னம்பிக்கை குறைந்தவர்களால் எதையும் சாதிக்க முடியாது..

உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சில எளிதான் வழிகள்:

1 . உங்களிடம் நீங்களே தனிமையில் பேசுங்கள்...
நீ சாதிக்க பிறந்தவன் என.

2. நேர்த்தியாக ஆடை அணியுங்கள். விலை குறைந்ததோ, அதிகமானதோ கவலை இல்லை...
இருப்பதை நேர்த்தியாக அணியுங்கள்.

3 . எதிர்மறையான பயங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள்.

4 . வாழ்க்கை விளையாட்டு என்பதை மனதில் நிறுத்தி, எதையும் எதிர்கொள்ளும் வலிமையை மனதிற்கு கொடுங்கள்.

5 . நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள்..
தன்னம்பிக்கை தானே அதிகரிக்கும்.

6 . உள்ளம் எப்படியும் இருக்கட்டும்... முகத்தில் மட்டும் சிறு புன்னைகையுடன் இருக்க பழக்குங்கள்.

7 . சின்ன இலக்குகளை தினமும் நிர்ணயியுங்கள்..
அதை சாதித்து விட்டு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்..

8 . தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.. மூச்சை அடிக்கடி இழுத்து, நுறையீரலில் புதுக்காற்றை நிரப்பிக் கொள்ளுங்கள்.

9 . இவை எல்லாவையும் விட மிக முக்கியமாக..

உங்களுக்கு நடந்த நல்லவைகளை அடிக்கடி பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்..

நிச்சயம் தன்னம்பிக்கை வளரும்..
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

🙏🏻🍀🙏🏻🌸🙏🏻🌺🙏🏻☘🙏🏻💐👍🏻💜👍🏻❤👍🏻💚👍🏻💛👍🏻💗👍🏻💖👍🏻💓👍🏻💕👍🏻💙👍🏻🌷👍🏻☘👍🏻🌼👍🏻🌹👍🏻🌹👍🏻🌹👍🏻🌹

23/09/2025
23/09/2025

varahi Amman Uthrakosamangai

20/09/2025

இனிய காலை வணக்கம். . . .

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து
முளைத்துக் காட்டுகிறது !

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !

மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !

ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !

சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !

இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .

அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !

சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !

எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !

என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !

எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !

எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !

என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !

என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !

என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !

மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !

என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !

ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !

பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !

ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் இறைவனுக்கு மனதார நன்றி !

இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !

26/04/2025

திருநாவுக்கரசர் அருளிய, ஐந்தாம் திருமுறை
*இராம்;* ஜோன்புரி
*தாளம்:* ஆதி தாளம்
*சிறப்பு:* தனித் திருக்குறுந்தொகை

மாசில் வீணையும்
மாலை மதியமும்|
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்|
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே|
ஈசன் எந்தை
இணையடி நீழலே.|| *பாடலின் பொருள்:* எனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது. *என்பது பொருள்*

25/02/2025

*சூக்ஷ்ம விஞ்ஞானம் :*

1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் சூ‎ட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன்மதி இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. சூ‎ரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
.. .................. நன்றி ..

31/01/2025

*நாம் ஏன் நிலக்கடலை சாப்பிட வேண்டும்*

*ஆங்கில மருத்துவம் பார்க்கும் டாக்டர்களின் முதல் எதிரி
நிலக்கடலை*

சர்க்கரையை கொல்லும்
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

*நீரழிவு நோயை தடுக்கும்*:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

*பித்தப் பை கல்லைக் கரைக்கும்*:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

*இதயம் காக்கும்*:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

*இளமையை பராமரிக்கும்*

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

*ஞாபக சக்தி அதிகரிக்கும்*:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

*மன அழுத்தம் போக்கும்*:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

*கொழுப்பை குறைக்கும்*:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை*:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.
இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

*கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி*:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

*பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது*:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.
*நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு*

**********************************

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Sithergal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share