09/06/2026
மந்திரம்நூல் வாங்கி பயனடைந்து வருகிறவர்களில் பலர், செயல்முறையாக மந்திரப்பாடு ஆற்றி, பயன்விளைத்துக் கொள்கிற வழிகாட்டுதலை வேண்டியிருந்த நிலையில், மந்திரம் அடிப்படையிலான சிறப்பு முயற்சியாக ஐந்திணைக்கோயில் முன்னெடுத்திருக்கிறது, ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை, அருட்காசு, மந்திரம்நூல், பதிவேடு, தூவல் எனும் ஐந்திரப்பொதி வணிகப்பாடாற்றலை
இந்தப்பொதியில்- 1.ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை 2.முதலாவது அருட்காசு 3.மந்திரம் அச்சுநூல். 4.அருட்காசு, வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகம் 5.வண்ண அடிக்கோடு இடும் தூவல் (பேனா) ஆகியன இடம்பெற்றுள்ளன.
இந்தப் பொதியில், மூன்றாவதாக அமைந்த. அருட்காசு, வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகமே இந்தச் சிறுநூல் ஆகும்.
இந்தச்சிறு நூலை முழுமையாகப் படித்து, நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து பாடாற்றல்களையும் பேணியிருங்கள்.
இந்த ஐந்திரப்பொதி, நீங்கள், “எல்லையற்ற கடவுளில்” இயங்குவதற்கான பாடாற்றலை முன்னெடுத்திட வடிவமைக்கப்பட்டிருப்பதால், இந்தநூல் தெரிவிக்கும் பாடாற்றலை நீங்கள் பேணியிருக்க, உங்களுக்கு எல்லையில்லாத முன்னேற்றம் எளிதாகச் சாத்தியம் ஆகும்.
ஐந்திணைக்கோயிலின் அருட்காசு எல்லையில்லாத மதிப்புக்கு உரியதே என்று புரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு தொகை மதிப்பை நீங்கள்தான் அளிக்கின்றீர்கள். அதைத், தொடர்ந்து உயர்த்தி உயர்த்தி, எல்லை ஏதும் இல்லாமல், பொருளாதார முன்னேற்றத்தைக் குவித்திட வாழ்த்துகிறது ஐந்திணைக்கோயில்.
ஆசிரியர் உரை: மந்திரம்நூல் வாங்கி பயனடைந்து வருகிறவர்களில் பலர், செயல்முறையாக மந்திரப்பாடு ஆற்றி, பயன்விளைத்.....