Parivu.TV

Parivu.TV Buyya is a collection of neighborhood stores that are now online.

We help local businesses to come online and serve their customers seamlessly as well as acquire new customers through their online presence in Buyya.

ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்; தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!வரும் ஜூன்...
28/05/2023

ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்; தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும். ஜூன் மாதத்தில் இயல்பு அளவை விடவும் குறைவான மழையே இருக்கும். இந்த மழைக்காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய 55 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. ‘எல் நினோ’ காரணமாக, வரும் பருவமழைக் காலத்தில் குறைவான மழை கிடைக்கும் அபாயமும் உள்ளது.

பல வழிகளில் ஆராய்ந்து பார்த்ததில், வரும் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவில் இருக்கும். ஜூன் மாதத்தில் பெய்யும் குறைவான மழை காரணமாக, காரீப் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படலாம். இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒருசில பகுதிகளைத் தவிர்த்து ஜூன் மாதத்தில் குறைவான மழை பெய்யவே வாய்ப்புள்ளது. சில இடங்களில் மட்டுமே இயல்பான அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தென்மேற்கு #பருவமழை #இந்தியவானிலைஆய்வுமையம்

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!டெல்லியில் ப...
28/05/2023

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறிய பாஜக எம்.பி. மீது அக்கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது போராட்டம் நடத்தியவர்களை இழுத்துச் சென்று கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே, கைது நடவடிக்கை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

#மல்யுத்தவீராங்கனைகள் #பாலியல்புகார் #முகஸ்டாலின்

மனித மூளைக்குள் மைக்ரோசிப்.. இனி இதெல்லாம் சாத்தியம்.. ட்விட்டர் ஓனரின் அடுத்த அதிரடி..!!டெஸ்லா,  ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் ...
28/05/2023

மனித மூளைக்குள் மைக்ரோசிப்.. இனி இதெல்லாம் சாத்தியம்.. ட்விட்டர் ஓனரின் அடுத்த அதிரடி..!!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், நியூராலிங்க் என்ற நிறுவனம் மூலம் நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ டிவைஸ்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த டிவைஸ்கள் மூலம் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை எளிதாக பயன்படுத்தும் நோக்குடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் நியூராலிங்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த சிப்பை பொருத்துவதன் மூலம் அவர்கள் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர்களை தொடாமலேயே அவற்றை பயன்படுத்த முடியும்.

இவர்கள் மூளையின் சிந்தனையை அந்த சிப் கமெண்ட்டுளாக பதிவு செய்து கொள்ளும். இதனால் நாம் நினைப்பதை நமது ஸ்மார்ட் போனும் கம்ப்யூட்டரும் நிறைவேற்றும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ஸ்மார்ட் டிவைஸ்களை நம்மால் மைண்ட் கன்ட்ரோல் செய்ய முடியும். இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க், அந்த நிறுவனத்தை தொடங்கியதுபோது தெரிவித்திருந்தார்.

#டெஸ்லா #ஸ்பேஸ்எக்ஸ் #ட்விட்டர் #மனிதமூளை #மைக்ரோசிப்

‘சீனாவிடம் இருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை   அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். குஜராத்தின் இந்தியாவுக்கு சீனாவிடம...
28/05/2023

‘சீனாவிடம் இருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். குஜராத்தின்
இந்தியாவுக்கு சீனாவிடம் இருந்து சிக்கலான சவால்: ஜெய்சங்கர் பேச்சு..!!

அகமதாபாத்தில் உள்ள அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசியதாவது: இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையே அமைதி சீர்குலைந்தால், இருதரப்பு உறவு பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. நிச்சயமாக சீனாவிடம் இருந்து நமக்கு சவால்கள் உள்ளன. அந்த சவால் மிகவும் சிக்கலான சவால். ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளாக எல்லையில் உள்ள நிலையை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் இருக்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பரஸ்பர மரியாதை, உணர்திறன் மற்றும் ஆர்வம் ஆகியவை இருதரப்பு உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும். நீங்கள் என்னை மதிக்கவில்லை என்றால், என் கவலைகளை உணரவில்லை என்றால், என் ஆர்வத்தை புறக்கணித்தால், நாம் எப்படி நீண்ட காலம் பழக முடியும்? இதனால் நாங்கள் எங்கள் உரிமைக்காக நிற்க வேண்டி உள்ளது. எதிர்ப்பை வலியுறுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டி உள்ளது. இதுதான் துரதிஷ்டவசமாக சீனா உடனான உறவு வலுவாக இல்லாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

#இந்தியா #சீனா #சவால் #ஜெய்சங்கர்

தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தில் ஆய்வு; கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்...
28/05/2023

தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தில் ஆய்வு; கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்..!!

தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தை ஆய்வு செய்து, கட்டுமான தொழிலாளர்களுக்கு 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஓய்வுக்கூடத்தை,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து படித்த, படிக்காத இளைஞர்களும் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 3 மாதகால திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது.

காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்தில் 2 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவை இலவசம். இதற்கு 12ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படித்தவர்களும், பயிற்சியில் சேரலாம். இந்த பயிற்சியில் சேரும் அனைவருக்கும் எல் அண்டு டி நிறுவனத்தின் சார்பில், 100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதுமட்டுமின்றி, தையூர் மையத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் மற்றொரு திட்டமும் உள்ளது. தினசரி 800 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இதில் சேருவதற்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். சுமார் ரூ16 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 72000 சதுரஅடி உள்ள இந்த கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றதொரு கட்டிடம் திருப்பெரும்புதூர் அருகே எழிச்சூர் என்ற இடத்திலும் இருக்கிறது. இந்த இரு கட்டிடங்களும் இனி பூட்டப்பட்டு இருக்காது. 2 கட்டிடங்களும் இனி வருங்காலத்தில் முறையாக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து இந்த அளவிற்கு வசதிகள் உள்ள கட்டிடம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமலும், பயன்படுத்தாமலும் இருந்த அதிகாரிகளை அழைத்து அமைச்சர் சி.வி.கணேசன் கடுமையாக எச்சரித்தார்.

#தையூர் #தொழிலாளர் #திறன்மேம்பாட்டுபயிற்சி

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பு..!!புதிய நாடாளுமன்றத்தில...
27/05/2023

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பு..!!

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்கள், பிரதமரை சந்தித்து செங்கோலை வழங்கினர். பிரதமருக்கு மதுரை, திருவாவடுதுறை ஆதீனங்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

#செங்கோல் #ஆதீனங்கள் #பிரதமர் #நரேந்திரமோடி

மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!மாற்று...
27/05/2023

மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 500 மின்சார பேருந்துகள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

#மாற்றுத்திறனாளிகள் #பேருந்துகள் #போக்குவரத்துத்துறை #அமைச்சர் #சிவசங்கர்

சென்னை மெரினா சாலையில் அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள், அரசு விடுமுறை நாட்களில் போக்குவரத்து மாற்றம்..!!அனைத்து சனி, ஞாயி...
27/05/2023

சென்னை மெரினா சாலையில் அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள், அரசு விடுமுறை நாட்களில் போக்குவரத்து மாற்றம்..!!

அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு (27.05.2023) முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
1. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.
2. கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப் பட்டு பாரதி சாலை – பெல்ஸ் ரோடு – வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
3. ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பாரதி சாலை சந்திப்பில் திருப்பப் பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

4. அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஓரு வழிப்பாதையாக மாற்றப்படும்)
5. நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை – பெல்ஸ் ரோடு – வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
6. பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஓருவழிப்பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஓத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#மெரினா #அரசுவிடுமுறைநாட்கள் #போக்குவரத்துமாற்றம்

செல்பி எடுத்த போது தவறியது; அணையில் விழுந்த செல்போனை மீட்க 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்: சட்டீஸ்கர் அரசு அதிகார...
27/05/2023

செல்பி எடுத்த போது தவறியது; அணையில் விழுந்த செல்போனை மீட்க 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்: சட்டீஸ்கர் அரசு அதிகாரி சஸ்பெண்ட்..!

செல்பி எடுத்த போது தவறி தண்ணீரில் விழுந்த செல்போனை எடுக்க அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீரை அரசு அதிகாரி வெளியேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை சட்டீஸ்கர் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் உணவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 21ம் தேதி காங்கர் மாவட்டத்தில் உள்ள கெர்கட்டா அணை பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது அணையில் மேற்பகுதியில் நின்று கொண்டு வெளியேறும் தண்ணீர் தெரியும்படி செல்பி எடுக்க ராஜேஷ் விஸ்வா முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரது ரூ1 லட்சம் மதிப்பிலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 செல்போன் அணைக்குள் விழுந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குள்ள கிராம மக்களை தொடர்பு கொண்டு செல்போனை எடுத்து தரும்படி கேட்டார். அணையில் 10 அடி அளவுக்கு 41 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூழ்கி பார்த்து தேடியும் எடுக்க முடியவில்லை. இதையடுத்து நீர்வளத்துறையை சேர்ந்த சப்டிவிஷனல் அதிகாரி ஆர்.சி. திவாரை தொடர்பு கொண்ட ராஜேஷ் விஸ்வாஸ் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுத்து விட்டார். இதையடுத்து 30எச்பி சக்தி கொண்ட 2 டீசல் மோட்டார்களை கொண்டு வந்து அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீர் 3 நாட்களாக வெளியேற்றப்பட்டது. அதன்பின் அவர் தண்ணீரில் விழுந்த செல்போனை எடுத்தார்.

1500 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் அணைத்தண்ணீர் ரூ1 லட்சம் செல்போனுக்காக முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றிய தகவல் அறிந்த கலெக்டர் பிரியங்கா சுக்லா உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும்அணை தண்ணீரை வெளியேற்ற அனுமதி கொடுத்த அதிகாரி ஆர்.சி.திவார் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார். அந்த அறிக்கையில் எந்தவித அனுமதியும் பெறாமல் செல்போனை எடுப்பதற்காக அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கோடை காலத்தில் இப்படி தண்ணீரை வீணாக்கிய உணவு அதிகாரி ராஜேஷ் விஸ்வாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். ஆர்சி திவாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒருநாளுக்குள் அவர் விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி நீர்வளத்துறை செயலாளருக்கு கலெக்டர் பிரியங்கா சுக்லா கடிதம் எழுதி உள்ளார். அதில் அணை தண்ணீரை வெளியேற்ற தன்னிச்சையாக அனுமதி அளித்த திவார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். இந்த சம்பவம் சட்டீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#அணை #சட்டீஸ்கர் #அரசுஅதிகாரி #சஸ்பெண்ட்

பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன திட்டம்: ஜூன் 16க்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம்..!!பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிச...
27/05/2023

பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன திட்டம்: ஜூன் 16க்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம்..!!

பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன வசதி அமைப்பது தொடர்பாக ஜூன் 16ம் தேதிக்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் அதிகளவு வரும் கோயில்களில் விரைவு தரிசனம் செய்வதற்கு சட்டமன்ற அறிவிப்பின்படி நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ரூ300 கட்டணத்தில் இடை நிறுத்த தரிசனம் (பிரேக் தரிசனம்) வசதி அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், விபூதி, 1 மஞ்சள் பை ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.

தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, அக்னி நட்சத்திரம் நிறைவு நாள், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆங்கில வருடப்பிறப்பு, தை மாதத்தில் முதல் 5 நாட்கள், தைப்பூச திருவிழாவின் 10 நாட்கள், பங்குனி உத்திர திருவிழாவின் 10 நாட்கள், மாதாந்திர கார்த்திகை தினங்களில் இந்த தரிசனம் இருக்காது. இதுதொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகளை பக்தர்கள் வரும் ஜூன் 16ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக இணை ஆணையர், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாமென்றும், அந்நாளுக்கு பின் கிடைக்கும் ஆலோசனைகள், ஆட்சேபனைகள் ஏற்கப்பட மாட்டாதென பழநி மலைக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான அறிவிப்புகளை அரசு அலுவலக தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

#பழநி #மலைக்கோயில் #பக்தர்கள்

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!தமிழ்நா...
26/05/2023

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 7 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை வரும் 5ம் தேதியும் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு வரும் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்த அமைச்சர் திட்டமிட்டபடி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் தணியாத நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்.நேற்று மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி இருக்கிறோம். தி.மலை, வேலூர், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாவட்ட அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பள்ளி திறப்பை தள்ளிவைக்க பெற்றோர் கோரிக்கை வைக்காவிட்டாலும் வெயிலின் தாக்கம் உள்ளது உண்மை தான்.வெயில் தாக்கத்தால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது கடும் சிரமம் என்பதை முதல்வரிடம் கூறியுள்ளோம்.” என்றார்.

இந்த நிலையில் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஜூன் மாதம் 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்,” என பதிவிட்டுள்ளார்.

#வெயில் #பள்ளிகள்திறப்பு #பள்ளிக்கல்வித்துறை

Address

Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when Parivu.TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parivu.TV:

Share