08/10/2025
கீழே இருப்பது ஒரு வாடகை கார் ஓட்டுநர் பதிவு, பெரும்பாலான ஹோட்டல் அல்லது லாட்ஜ்களில் கவனித்து உள்ளேன் நமக்கு வாடிக்கையாளர் வருவதே அவர்களால் தான் என்று புரிந்துகொள்ளாமல் டிரைவர் என்றாலே இரண்டாந்தரமாக தான் நடத்துகிறார்கள். நம்மள பாதுகாப்பா கூட்டிட்டு போற அவங்கள நாம தான் பாத்துக்கனும். கெஸ்ட் அவங்க டேபிள்ல இருந்தே சாருக்கு என்ன வேணும்னு கேட்டு கொடுங்கன்னு முதல்லயே சொல்லியிருந்தா இந்த மாதிரி அவமானங்கள் நிகழாது.
எல்லோருக்கும் வணக்கம்.
நான் வாடகை கார் உரிமையாளர் +.ஓட்டுநர்.
சில தினங்களுக்கு முன் ஒரு ஃபேமிலி உடன் கோவை சென்றேன்.
வழியில் அவர்கள் சாப்பிடலாம் என்று சொன்னதால் இரவு சாப்பாட்டுக்கு அவிநாசியில் புதிதாக திறந்து இருக்கும் இந்த சிவகண்ணன் ஹோட்டலுக்கு சென்றோம். இது அந்த யூ டியூபர் சிவகண்ணன் ஹோட்டல் ஆகும்.
சரி , புதியதாக திறந்து இருக்கிறார்கள். என்று நான்தான் அவர்களிடம் சொல்லி இந்த கடைக்கு அழைத்து சென்றேன்.
ஆனால், கடைகாரண் சரியான பாடம் கற்பித்து விட்டான்.
முதலில் நான் அழைத்து சென்றவர்கள் ஒரு டேபிளில் அமர, நான் இரண்டு மூன்று டேபிள் தள்ளி அமர்ந்தேன்.
என்னிடம் வந்த சர்வர், என்னை என்ன வேண்டும் என்று கேட்க, ஒரு எக் ரைஸ் மட்டும், என்று கூறிவிட்டு, பில்லை அவர்களிடம் கொடுத்து விடுங்கள் என யதார்த்தமாக கூறினேன்.
அவன், அவர்கள் அருகில் சென்று விசாரித்து இருக்கலாம்., ஆனால் என் பக்கத்திலேயே நின்று கொண்டு, சார் சார் என சத்தமாக அழைத்தான். அவர்கள் திரும்பி பார்க்க, இவர் உங்களுடன் வந்து இருக்கிறாரா ? என விசாரித்தான். அப்போதுதான் நான் கவனித்தேன் , ஒட்டு மொத்த ஹோட்டலும் என்னைத்தான் பார்த்து கொண்டு இருக்கிறது என்பதை.
ஒரு மாதிரி சங்கடம் ஆகிவிட்டது.
சரி என அமைதியாக இருந்தேன்.
பத்து நிமிடம் ஆகியும் ஆர்டர் வரவில்லை. கேட்டேன். இதோ கொண்டு வருகிறேன் என சொல்லி விட்டு சென்று விட்டான். கொஞ்ச நேரத்தில் எக் ரைஸ் வந்தது. ஒரு ஸ்பூன் கூட இல்லை.
ஸ்பூன் கேட்டு வாங்கி , சாப்பிட ஆரம்பிக்க , சார் , சாஸ் இல்லை.
கொஞ்சம் கொடுங்கள் என கேட்டேன். அவன் அவனுக்கு help பண்ணும் ஒரு சிறுவனிடம், இந்த டேபிளுக்கு சாஸ் கொண்டு வந்து கொடு, என அலட்சியமாக கூறினான்.
நாம் நா*யை ஏவினால், அது அதன் வாலை ஏவுகிறது என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
அதற்கும் மேல சாப்பிட விருப்பம் இல்லை. இருப்பினும், வாடிக்கையாளர்களை அழைத்து வந்ததே நாம்தான் நாமே அவசரப்படக்கூடாது என்று, பாதி அளவு.சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டேன். அப்போதுதான் அந்த சிறுவன் சாஸ் கொண்டு வந்தான்.
அதையும் புறம் தள்ளி, கை கழுவி விட்டு வெளியே வந்து விட்டேன்.
இதில், எனக்கு என்ன கோபம் என்றால், டிரைவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா..? என்பதே.
மேலும் எங்களுக்கு ஒன்றும் இலவசமாக அதுவும் தரவில்லையே. ஹோட்டல்காரன் கொடுக்கும் சாப்பாட்டுக்கு , நானோ அல்லது என் வாடிக்கையாளரோ பணம் கொடுத்து விடுகிறோம் அல்லவா..?
பின் ஏன் இந்த அலட்சியம்..? இந்த 100 அல்லது 120 ரூபாய்க்கு கூட வக்கில்லாமலா நாங்கள் இருக்கிறோம்..?
மேலும், வெளியூரில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை அழைத்து செல்வதே நாங்கள்தான். வாடிக்கையாளர்கள் ஒரு ஹோட்டலை சொன்னால் கூட, அந்த ஹோட்டல் முன்பு போல இல்லை சார் என ஒரு வார்த்தை சொன்னால் போதும். வாடிக்கையாளர் மனம் மாறிவிடும். மேலும், நமக்கு எல்லா கடைகளும் ஒன்றுதான். யாரும் இலவசமாக கொடுக்க போவதில்லை. அதனால் தரமான மற்றும் சரியான ஹோட்டலுக்கு
வாடிக்கையாளர்களை அழைத்து செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
இப்படி அழைத்து வரும் எங்களையே இப்படி அலட்சியமாக நடத்துவது சரியா..?
அதனால் , நண்பர்களே, இப்படிப்பட்ட
பாடாவதி பயலுக நடத்தும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாம். தவிர்த்து விடுங்கள்.
நன்றி.