26/04/2025
ஒவ்வொரு பிரேத பரிசோதனை முடிக்கும் போதும் ஒவ்வொரு வகையான மனநிலை தோன்றும். ...😔
இறப்புக்காக நிறைய முறை கண்ணீர் வடித்துள்ளேன்...😢
இன்றைய பிரேத பரிசோதனை முடிந்து வெளியே வந்ததிலிருந்து என்ன காரணம் ஏதோ ஒன்று மனதை கனமாய் அழுத்துகிறதே....😟
கதறி அழவேண்டும் போல் தோன்றுகிறதே....😢
ஏனிந்த பொருளாதார ஏற்றதாழ்வு என் நாட்டில் என்று சிறுவயது முதலே யோசிக்கும் மனம் கொண்டதாலா இந்த கண்ணீர்..😢😢
பதிலற்ற
கேள்விளோடு நானும் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன்.....😟
என் பாரதத்தில் இதுவரையிலும் பதில் கிடைக்கவில்லை. ....😢
கண்பார்வை குறைபாடு கொண்ட ஒரு எண்பது வயது பெரியவர் இன்று காலை கோவிலூர் காட்டுப்பகுதியில்
யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார் ....😟
எண்பது வயது...
40 கிலோவுக்கும் குறைவான எடை...😟
எலும்புக்கு பஞ்சமில்லை
ஒட்டிப்போன வயிறு..😟
கொழுப்பை பார்க்காத உள்ளுறுப்புகள். .😟
இரு கண்களிலும் புரை வழிந்து விழித்திரைக்கு வெளியே தெரிகிறது. ...😢..
இரைப்பை காலியாக இருந்த போதுதான்
நான் காவல் துறையினரிடம் கேட்டேன்
ஏன் தாத்தா காலையில் சாப்பிடாமல் சென்று விட்டாரா என்று. ..
அதற்கு எங்கள் ஏட்டய்யா சொன்னார்..
காட்டுக்குள் சென்று சாப்பிடுவதற்கு பழைய சோறு தண்ணீர் எடுத்து சென்றிருக்கிறார் ங்ம்மா...
அதைக் கொண்டு செல்ல தூக்கு பாத்திரம் இல்லை
பூசணிக்காய் புரடையில் குச்சி போட்டு அடைத்து கொண்டு போய்ருக்கார்ங்கம்மா என்றார்....😢😢
அதைக்கேட்டபின்புதான் மனம் சுக்குநூறானது...😢😢😢😢😢😢😢😢
அந்த கஞ்சி புரடையையும் யானை மிதித்து மண்ணில் அமுத்தியிருக்கிறது.....😢😢😢😢
பத்தோடு பதினொன்றாய் இந்த மரணத்தை எடுத்துக் கொள்ள என் மனம் மறுக்கிறதே....😟
காட்டில் வாழும் யானைக்கும் பாதுகாப்பில்லை....😟
நாட்டுக்குள் வாழவேண்டிய முதியோர்களுக்கும்
பொருளாதார பாதுகாப்பு இல்லை.....😟
எத்தனையோ பொருளாதார வல்லுனர்கள் வாழும் இந்த நாடடில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்.....
பொருளாதார கொள்கைகள் சரிசெய்யப்பட
கூடாதா..
அல்லது முடியாதா
முதியோர் பாதுகாப்பு என்பது ஏன் கவனிக்கப்படாமல் இருக்கிறது.....
வயதான பெற்றோர்களை கவனத்திக்
கொள்ள வேண்டிய பிள்ளைகள் ஏன் பின் வாங்குகிறார்கள்....
ஆகப்படித்த பொருளாதார வல்லுனர்களே ....
ஏதாவது மாற்றங்கள் கொண்டுவர முடியுமா......
பணத்தில் கொழுத்து பார்களிலும்.
பப்புகளிலும் தினம் தினம் லட்சங்கள் செலவிடும் இந்த நாட்டிலே தான் ஒரு ஏழை முதியவரின் ஒரு வேளைசோற்றுக்கு உயிர் பணயமும் நடக்கின்றதோ....😟
இளைய சமுதாயமே நீங்கள் நினைத்தால் இந்த நிலை மாறும்....
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உடைய உங்கள் கல்வியும், செல்வமும் பயண்படட்டும்.....
பிள்ளைகள் வயதான பெற்றோர்களை கவனியுங்கள். ..
கவனிக்கும் மனம் இருந்திருந்தால் அவர் கண்கள் புரையோடி
கண்முன்னே யானை நின்றதையும் அவர்
உணர்ந்திருப்பார்....
அரசு மருத்துவமனைக்கு கூட்டி வந்து இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள கூட முயற்சி செய்யாத பிள்ளைகளூம் இருக்கிறார்கள். ...😟😟😟
ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் முதியோர்கள் மருத்துவர்களிடம் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்..😢😢
நான் அனாதை என்ன பார்த்துக்க யாருமில்லை என்று. ....😢😢
இந்த நிலை மாற வேண்டும். ....
முதியோர்களுக்கு தகுந்த உதவிகளும்
உரிமைகளும்..
முக்கியமாக பசிக்கு உணவும் கிடைக்க வேண்டும். ...
என்னவோ மனம் வேதனையில் விசும்புகிறது. ...
எழுத்துக்களால் அழுததால் மனம் கொஞ்சம் ஆசுவாசப்படுகிறது...😟😢😢
ஆனால் பல மாற்றங்கள் வர வேண்டும். ...
முதியோர்களுக்கு
நாம் விரல் பிடித்து நடைபழக்கி
நாங்கள் இருக்கிறோம்
உங்களுக்காக
என்று ஆறுதல் கூறுவோம்........❣️
அன்பால் அவர்களை அரவணைப்போம்.....❣️❣️
மரு.சு.கவிதா
அந்தியூர்.
26.4.2025