Social Talkies

Social Talkies SOCIAL TALKIES IS A NEW PAGE FROM THE HOUSE OF TOURING TALKIES. "CHAI WITH CHITHRA -SOCIAL TALK"
(2)

தங்கம் விலை ஏற்றம்!! இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன...
20/08/2026

தங்கம் விலை ஏற்றம்!!

இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு பதிலடி!!டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தின் கட்டடத்தின் முன்புறம் உள்ள ஒரு பகுதியை இன்று காலையி...
20/08/2026

பாகிஸ்தானுக்கு பதிலடி!!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தின் கட்டடத்தின் முன்புறம் உள்ள ஒரு பகுதியை இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து அகற்றியதோடு, அங்கிருந்த இரும்பு தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தினர் மேலும் இது பழிக்கு பழியாக எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் முன்பு இருந்த பேரிகார்டுகள் மற்றும் வாகன நிறுத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டு இருந்த கம்பங்கள் அகற்றப்பட்டது. இதற்கு பதிலடியாக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவண...
20/08/2026

21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

முதல்-மந்திரிகள் மாநாடுமத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திர...
20/08/2026

முதல்-மந்திரிகள் மாநாடு

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் விஜய் "காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் நதிநீர் உரிமையை பாதுகாக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Today 6 Pm.. Don't Miss It.🔥🔥✨
18/08/2026

Today 6 Pm.. Don't Miss It.🔥🔥✨

நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு ரூ.35-க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கூலி...
18/08/2026

நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு ரூ.35-க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கூலி, இயந்திர வாடகை போன்ற செலவுகள் இரு மடங்கு உயர்ந்துள்ளதை சுட்டி காட்டி இருக்கும் விவசாயிகள், மேற்கண்ட கோரிக்கையை விடுத்தது உள்ளனர்

https://www.youtube.com/watch?v=jima6BMIUQo
16/08/2026

https://www.youtube.com/watch?v=jima6BMIUQo

தமிழ் சினிமாவில் இசையும் வரிகளும் அழகாக ஒன்றிணைந்த படங்களில் Rhythm...

முதல்வர் குடும்பமும் த்ரிஷாவும்சென்னையில் நடந்த சுதந்திர விழாவில் முதல்வர் விஜய் கொடியேற்றுவதை காண்பதற்காக நடிகை த்ரிஷா ...
15/08/2026

முதல்வர் குடும்பமும் த்ரிஷாவும்

சென்னையில் நடந்த சுதந்திர விழாவில் முதல்வர் விஜய் கொடியேற்றுவதை காண்பதற்காக நடிகை த்ரிஷா தனது அம்மாவுடன் வந்திருந்தார். அப்போது விஜய்யின் தாய் ஷோபாவுக்கு வணக்கம் கூறிய த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் வணக்கம் வைத்தார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தக...
15/08/2026

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், பரிசினையும் விஜய் வழங்கினார்

முதல்வரை சீண்டும் திமுகசினிமா நடிகராக இருந்து அரசியலில் இன்று வெற்றி பெற்றிருந்தாலும் விஜய், தற்காலிக கவர்ச்சிதான் என்று...
14/08/2026

முதல்வரை சீண்டும் திமுக

சினிமா நடிகராக இருந்து அரசியலில் இன்று வெற்றி பெற்றிருந்தாலும் விஜய், தற்காலிக கவர்ச்சிதான் என்றும்.. திமுக நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்டது எனவும் திண்டுக்கல் லியோனி குறிப்பிட்டிருக்கிறார்.

Address

Social Talkies
Chennai
600026

Alerts

Be the first to know and let us send you an email when Social Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share