
08/09/2025
SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 07-09-2025 காலை 11:30 மணி அளவில் மாநிலத் தலைமை அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர் முஸம்மில் பாஷா தலைமையில் நடைபெற்றது.
மத்திய சென்னை மாவட்ட தலைவர் காதர் பாஷா வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பாளர் அழைப்பாளராக
மாநிலச் செயலாளர் பூட்டோ சாகுல் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில்
வருட சந்தா, புதிய உறுப்பினர் சேர்த்தல், கிளை கட்டமைப்பு, நல வாரியம், ஏரியா நிர்வாகம் அமைத்தல் என பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில்
மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜாவித், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் வெங்கட்,வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஹனிபா, வடசென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் இஸ்மாயில், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் மூசா, சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிந்தா, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்
முகமது சாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர்
தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சர்புதீன் நன்றி உரையாற்றினார்.
இவன்
சென்னை மண்டல ஊடகப்பிரிவு.