Kollywood Street

Kollywood Street Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More...

 #சிக்மா -   - திரை விமர்சனம் - 4/5வெளிநாட்டில் உள்ள ஒரு ரகசிய லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.500 கோடி மதிப்ப...
02/10/2026

#சிக்மா - - திரை விமர்சனம் - 4/5

வெளிநாட்டில் உள்ள ஒரு ரகசிய லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.500 கோடி மதிப்பிலான மாஃபியா பணத்துடன் தொடங்குகிறது சிக்மா திரைப்படம். கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கும் குரு (சந்தீப் கிஷன்), தனது தாயின் நினைவுகளுடன் தொடர்புடைய நூலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும், பண நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்திலும் இருக்கிறார். இதற்காக கேசினோ ஒன்றுக்குச் செல்லும் அவர், அங்கு நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்கிறார். பலரின் தேடலுக்கு உள்ளாகும் பென் டிரைவ் மற்றும் ஒரு முக்கிய சாவி ஆகியவை கதையின் போக்கை மாற்றுகின்றன. அதன் பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

படத்தின் இடைவேளைக் காட்சியில் இடம்பெறும் சண்டை ஓரளவுக்குக் கவனம் ஈர்க்கிறது. ஆனால், அதற்கு முன்பான காட்சிகளில் குருவின் கடன் பிரச்சினைகளும், தாயின் நினைவாக இருக்கும் நூலகத்தைக் காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுமே அதிகம் இடம்பெறுகின்றன. ஒரு ஹீஸ்ட் மற்றும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் சிக்மா, முதல் பாதியில் எதிர்பார்க்கும் அளவுக்கு வேகத்தையும் பரபரப்பையும் கொடுக்கவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளுக்காகக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்தப் பகுதி சற்றே ஏமாற்றத்தைத் தரலாம்.

முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதியில் சண்டைக் காட்சிகள் ஓரளவுக்கு அதிகம் உள்ளன. இருப்பினும், அந்தக் காட்சிகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. கதையில் அடுத்தடுத்து பல திருப்பங்களையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தினாலும், அவை படத்தின் சுவாரஸ்யத்தைத் தொடர்ந்து தக்கவைக்கப் போதுமானதாக இல்லை.

ஃபரியா, சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டோருடன் சாரங்கி, எழில், வின்சி எனப் பல கதாபாத்திரங்கள் கதையில் இடம்பெறுகின்றன. ஆனால், இவர்களில் பெரும்பாலானோரின் பின்னணி மற்றும் குணாதிசயங்கள் ஆழமாக விவரிக்கப்படவில்லை. இதனால், கதையில் முக்கியத்துவம் பெறக்கூடிய கதாபாத்திரங்கள்கூட மனதில் பதியாமல் கடந்து செல்கின்றன.

இயக்குநர் ஜேசன் சஞ்சயின் முதல் திரைப்படம் என்பதாலும், படத்திற்குக் கிடைத்துள்ள தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டும், திரைக்கதையில் இன்னும் புதுமையான அணுகுமுறையையும், காட்சியமைப்பில் கூடுதல் நேர்த்தியையும் எதிர்பார்க்க முடிகிறது. திரையில் ஓரளவுக்கு பிரம்மாண்டம் தெரிந்தாலும், அதைச் சுவாரஸ்யமான ஆக்‌ஷன் விருந்தாக மாற்றுவதற்குத் தேவையான வலுவான எழுத்தும், திரைக்கதை அமைப்பும், இயக்கமும் படத்தில் போதிய அளவில் இல்லை.

ஒலிப்பதிவு குறிப்பிடத்தக்க வகையில் நன்றாக அமைந்துள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப அம்சங்களில் தெரியும் சில நேர்மறையான அம்சங்கள் மட்டுமே படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தை உயர்த்திவிடவில்லை.

குரு கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷனுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், கதையின் நகர்வும் அவருடைய நடிப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், அவரது நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன.
மாஃபியா பணம், கேசினோ, ரகசிய பென் டிரைவ், கடன் பிரச்சினைகள் என ஆக்‌ஷன் த்ரில்லருக்கான பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றை விறுவிறுப்பான திரை அனுபவமாக மாற்றுவதில் சிக்மா தடுமாறுகிறது. குறிப்பிடத்தக்க திருப்பங்களோ, மனதில் நிற்கும் ஆக்‌ஷன் காட்சிகளோ இல்லாததால், படம் முழுவதும் பெரிய அளவிலான ஈர்ப்பை உருவாக்கவில்லை.

02/10/2026

Director With Team 🥳

*என் கணவர் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய "காகிதமலர்" என்னும் திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரை...
01/10/2026

*என் கணவர் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய "காகிதமலர்" என்னும் திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் "Asian Future" பிரிவில் 'World Premiere' ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.*

World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். இந்தச் செய்தி மூலம் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் அவர்களுக்கும் செழியன் சாரின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், R.P. ராஜா, பேச்சியப்பன் அவர்களுக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திரைப்படத்தை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தமது பிஸியான நேரத்திலும் செய்து கொடுத்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், எப்போது தொடர்புகொண்டாலும் எனது கோப்புகளைப் (Files) பற்றித் கேட்டு உடனே அனுப்பி வைத்த தபஸ் நாயக் அவர்களுக்கும், D Studioவின் A.L.விஜய் அவர்களின் பங்களிப்பிற்கும், தபாலில் அனுப்புவது தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்த இயக்குநர் லீனா மணிமேகலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் உதவியாளர்கள் சங்கத் தமிழன், ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், D Studio கலரிஸ்ட் ராஜசேகர், மேனேஜர் சரவணன், எப்போது என்ன கேள்விகள் அனுப்பினாலும் பூர்த்தி செய்து அனுப்பும் கிருஷ்ணசுவாமி அவர்களுக்கும், என் அன்பான, திறமையான மாணவன் செழியன் என்று எப்போதும் பெருமைப்படும் ஆசான், ஒளிப்பதிவாளர் P. C. ஸ்ரீராம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
திருமதி பிரேமா செழியன்
தயாரிப்பாளர்

*“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!*லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தய...
01/10/2026

*“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!*

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜேசன் சஞ்சய பகிர்ந்து கொண்டதாவது, ”’சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.

அறிமுக இயக்குநராக என் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்களை முன்னின்று வழிநடத்திய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழ்குமரன் அவர்களுக்கும் எனது நன்றி. என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப் ப்ரோ மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகிய இருவருக்கும் நன்றி. நடிகர்கள் சம்பத், ராஜு மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.

எந்தவொரு இயக்குநருக்கும், குறிப்பாக அறிமுக இயக்குநருக்கு அவரது சிந்தனையுடன் ஒத்துப்போகும் ஒளிப்பதிவாளர் அமைவது மிகப்பெரிய வரம். அந்த வகையில் கிருஷ்ணன் வசந்த் அவர்களுடன் பணியாற்றியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவரது காட்சிப் பார்வையும் புரிதலும் சிக்மா திரைப்படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. அதேபோல், எங்கள் படத்தின் எடிட்டராக அனுபவமும் புரிதலும் கொண்ட பிரவீன் கே.எல். அமைந்ததும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம். இசையமைப்பாளர் தமனின் இசையும், அதிரடியான பீட்டும் திரைப்படத்திற்கு மேலும் உற்சாகமளித்துள்ளது.

ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் சிக்மா திரைப்படம் சாத்தியமாகியிருக்காது. குறிப்பாக, எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுப்ரமணியன் நாராயணன் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சீவ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. எங்களது ஆக்‌ஷன் இயக்குநர்களான வெங்கட் மற்றும் சில்வா சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்தின் மையக் கதைக்களத்திற்கு மிகப்பெரிய ஆற்றலையும், சுவாரஸ்யத்தையும் சேர்த்துள்ளனர். திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் தோற்றத்திற்கும் உணர்வுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஒரு ஊடகம். அந்த வகையில், சிக்மா திரைப்படத்தை சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவமாக உருவாக்குவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். பிராந்திய மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து, பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களையும் சென்றடையும் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றியுள்ளோம். ஒரு படைப்பின் மீதான நம்பிக்கை எப்போதும் பணிவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடனும், பணிவுடனும், அக்டோபர் 2 ஆம் தேதி சிக்மா திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு, எங்களுடன் இந்தப் பயணத்தை அனுபவிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சினிமா எனும் பிரம்மாண்டமான திறமைக் கடலில், மற்றொரு அறிமுக இயக்குநராக நான் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பயணத்தில், ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானவை. ’சிக்மா’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

 #ஏழுகடல்ஏழுமலை -   - திரை விமர்சனம் - 3/5படத்தில் நாயகன் நிவின் பாலிக்கு கதாபாத்திரத்திற்கு பெயர் எதுவும் இல்லை. சுமார்...
01/10/2026

#ஏழுகடல்ஏழுமலை - - திரை விமர்சனம் - 3/5

படத்தில் நாயகன் நிவின் பாலிக்கு கதாபாத்திரத்திற்கு பெயர் எதுவும் இல்லை. சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் சாகாவரம் பெற்ற மனிதராக அவர் தோன்றுகிறார். இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்தாலும், அவரது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது ஒரு பெண்ணின் மீதான காதல்தான். பல நூற்றாண்டுகளாக தனது காதலியைத் தேடி வரும் அவரால், நிஜ வாழ்க்கையில் அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தீபாவளி இரவில் ஒரு ரயிலின் முன்பதிவு இல்லாத கடைசி பெட்டியில் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அவருக்கு ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் பல ஆண்டுகளாகத் தேடி வரும் அந்தப் பெண் தோன்றுகிறார். இதற்கிடையே, படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக சூரி வருகிறார். அவருடைய கதாபாத்திரத்திற்கும் பெயர் கிடையாது. குடும்பத்தின் எதிர்காலத்திற்காக பல ஆண்டுகளாக வெளிநாட்டில் கடுமையாக உழைத்துவிட்டு, சம்பாதித்த பணம் மற்றும் குடும்பத்திற்கான பொருட்களுடன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.

படத்தின் முதல் பாதி பெரும்பாலும் ரயிலிலேயே பயணிக்கிறது. இதில் சூரி பல நகைச்சுவை வசனங்களைப் பேசினாலும், அவை பெரிதாகச் சிரிப்பை வரவழைக்கவில்லை. குறிப்பாக, நிவின் பாலியைத் தொடர்ந்து "ப்ரோ, ப்ரோ" என்று சூரி அழைத்துக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

முதல் பாதியைக் கடப்பதற்குக் கொஞ்சம் அதிகமான பொறுமை தேவைப்படுகிறது. எதிர்பார்த்த அளவுக்குத் திரைக்கதை விறுவிறுப்பாக இல்லாதது சற்று ஏமாற்றத்தைத் தருகிறது. இருப்பினும், இடைவேளைக்கு முந்தைய காட்சிகளும், இடைவேளைக் காட்சியும் ஓரளவுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும், காட்சிகளைப் படமாக்கிய விதமும் பாராட்டும்படி உள்ளன. யுவன் சங்கர் ராஜாவின் இசை சில இடங்களில் மட்டுமே கவனம் ஈர்க்கிறது. அஞ்சலி நடித்த கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை, கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் அவரது கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இயக்குநர் ராம் என்றாலே கதையை அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லக்கூடியவர் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் சூரி, நிவின் பாலியிடம் வாழ்க்கை தொடர்பான அறிவுரைகளைக் கேட்கும் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன. குறிப்பாக, அந்த அறிவுரைகள் படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்லாமல், நமக்கே சொல்லப்படுவதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. அந்தப் பகுதிகள் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளன.

மொத்தத்தில், இயக்குநர் ராமின் படைப்புகளை விரும்பிப் பார்ப்பவர்களும், வித்தியாசமான கதைக்களங்களை ரசிப்பவர்களும் ஒருமுறை பார்க்கலாம். ஆனால், விறுவிறுப்பான திரைக்கதையையும், தொடர்ந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவையையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் மிகவும் சுமாரான அனுபவமாகவே இருக்கும்.

 #பத்தா -   - திரை விமர்சனம் - 2.5/5ஒரு கேங்ஸ்டர் கதைக்கான வழக்கமான ஆக்‌ஷன், வன்முறை, மாஸ் காட்சிகளை மட்டுமே நம்பாமல், ஒ...
01/10/2026

#பத்தா - - திரை விமர்சனம் - 2.5/5

ஒரு கேங்ஸ்டர் கதைக்கான வழக்கமான ஆக்‌ஷன், வன்முறை, மாஸ் காட்சிகளை மட்டுமே நம்பாமல், ஒரு மனிதனுக்குள் ஏற்படும் உணர்வு மாற்றங்களையும் உறவுகளையும் மையமாக வைத்து கதை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணீதரன். வெளியில் பார்ப்பதற்கு கடினமான கேங்ஸ்டர். ஆனால், தனிமை, பசி, பயம், குடும்பம் என அவனுக்குள் இருக்கும் இன்னொரு மனிதனைச் சூழ்நிலைகள் மெல்ல வெளிக்கொண்டு வருகின்றன. குறிப்பாக சிறுவனுடனான உறவு உருவாகும் விதம் படத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் நகைச்சுவையாகத் தொடங்கும் இந்த உறவு, பின்னர் பாசம், பொறுப்பு மற்றும் மனிதநேயம் என பல உணர்வுகளைத் தொட்டுச் செல்கிறது. ஒரு கட்டத்தில் பத்தாவின் வாழ்க்கையையும் அவனது முடிவுகளையும் அந்த உறவு எப்படிப் பாதிக்கிறது என்பதே படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாக மாறுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் விஜய் சேதுபதியின் நடிப்பு. கேங்ஸ்டர் கதாபாத்திரத்துக்கான மிரட்டல், இயல்பான நகைச்சுவை, கோபம், பயம், பலவீனம் என வெவ்வேறு உணர்வுகளை அவர் மிகவும் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ஆக்ரோஷமான கேங்ஸ்டராக இருக்கும் கதாபாத்திரம் படிப்படியாக குடும்பத்தைப் பற்றியும் பொறுப்பைப் பற்றியும் சிந்திக்கும் மனிதனாக மாறும் பயணத்தை விஜய் சேதுபதி நம்பும்படியாகக் கொண்டு செல்கிறார். அவருடைய உடல்மொழியும் வசன உச்சரிப்பும் 1980களின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

பத்தாவின் மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸ், குடும்பம் சார்ந்த காட்சிகளுக்கு தேவையான உணர்வைச் சேர்க்கிறார். கணவனுக்கும் குடும்பத்துக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாக உள்ளது. சாந்தி பாலச்சந்திரன், விஷ்ணு கோவிந்தன், அர்ஜுன் சிதம்பரம், ஹரிகிருஷ்ணன், அஜய் கோஷ் உள்ளிட்டவர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

படத்தின் மைய ஈர்ப்பாக இருப்பது பத்தாவுக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத உறவுதான். ஒருபுறம் அனைவராலும் அஞ்சப்படும் கேங்ஸ்டர்; மறுபுறம் உலகத்தை இன்னும் அப்பாவித்தனத்துடன் பார்க்கும் சிறுவன். இருவரின் குணாதிசயங்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமே பல நகைச்சுவையான தருணங்களுக்கும், சில நெகிழ்ச்சியான காட்சிகளுக்கும் காரணமாகிறது. இந்த உறவு படத்தின் இரண்டாம் பாதியில் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இயக்குநர் பாலாஜி தரணீதரன், கேங்ஸ்டர் கதையை வழக்கமான ‘மாஸ்’ பாதையில் கொண்டு செல்லாமல், கதாபாத்திரங்களை மையப்படுத்தியிருக்கிறார். குற்ற உலகம், குடும்பம், நகைச்சுவை மற்றும் மனித உணர்வுகளை ஒன்றாகக் கலந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

1980களின் மெட்ராஸ் நகர வாழ்க்கையை உருவாக்கிய விதமும் படத்திற்கு தனி அடையாளத்தைத் தருகிறது. அந்தக் காலகட்டத்தின் உடைகள், வீடுகள், தெருக்கள், பொருட்கள் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் பழைய மெட்ராஸை மீண்டும் திரையில் கொண்டுவர முயற்சி தெரிகிறது.

செல்வகுமார் எஸ்.கே.-வின் ஒளிப்பதிவு படத்தின் காலகட்டத்துக்கு ஏற்ற வெப்பமான, பழைய காலத்து தோற்றத்தை உருவாக்குகிறது. காட்சிகளின் வண்ணத் தேர்வும் பின்னணியும் 1980களின் சூழலை உணர வைக்கின்றன.

ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு கதையின் மெதுவான பயணத்துக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. அதே நேரத்தில், சில இடங்களில் காட்சிகளை இன்னும் சுருக்கமாக வைத்திருக்கலாம் என்ற உணர்வும் ஏற்படுகிறது.

சாய் அபியங்கர் இசை படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. குறிப்பாக குடும்பம் சார்ந்த காட்சிகளிலும் ரெட்ரோ உணர்வை வெளிப்படுத்தும் இசையிலும் தனித்தன்மை தெரிகிறது.

படத்தின் முக்கியமான குறையாக அதன் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நெருக்கமான நீளம் இருக்கிறது. கதை மெதுவாக நகரும் தன்மை கொண்டதால், குறிப்பாக நடுப்பகுதியில் வரும் நீண்ட உரையாடல் காட்சிகள் சிலருக்கு சற்று பொறுமையை சோதிக்கலாம்.

தொடர்ச்சியான ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான திருப்பங்களை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த மெதுவான திரைக்கதை அணுகுமுறை சற்று வித்தியாசமாகத் தோன்றலாம். சில காட்சிகளை சற்று கத்தரித்திருந்தால் படத்தின் வேகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ‘பத்தா’ வழக்கமான கேங்ஸ்டர் படமாக இல்லாமல், ஒரு கேங்ஸ்டருக்குள் இருக்கும் மனிதனைப் பற்றி பேசும் வித்தியாசமான கதையாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு, சிறுவனுடனான எதிர்பாராத உறவு, 1980களின் மெட்ராஸ் பின்னணி, குடும்ப உணர்வுகள் மற்றும் இசை ஆகியவை படத்தின் முக்கிய பலங்களாக அமைகின்றன. மெதுவான திரைக்கதை மற்றும் படத்தின் நீளம் சில இடங்களில் சற்று சோர்வை ஏற்படுத்தினாலும், கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படங்களை ரசிப்பவர்களுக்கு இந்தப் படம் வேறுபட்ட அனுபவமாக இருக்கலாம்.

Meesaya Murukku 2 Box Office: வெளிநாடுகளில் பெரிதாக கல்லா கட்டும் மீசைய முறுக்கு 2.. 5 நாள் வசூல்!குஷ்பு சுந்தர் தயாரிப்...
01/10/2026

Meesaya Murukku 2 Box Office: வெளிநாடுகளில் பெரிதாக கல்லா கட்டும் மீசைய முறுக்கு 2.. 5 நாள் வசூல்!

குஷ்பு சுந்தர் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி தமிழா இயக்கி நடித்த மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. 4 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் அதிகபட்சமாக 51 கோடி வசூலை கடந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுந்தர். சி மற்றும் ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட படக்குழுவினர் அறிவித்தனர்.

மீசைய முறுக்கு 2 படத்தின் வெற்றியையும் நடிகை குஷ்புவின் பிறந்தநாளையும் ஒரே மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். படத்தில் வருவதை போலவே கானா கேங் எனும் இசைக்குழுவை நிஜத்திலும் உருவாக்கி 3 கானா கலைஞர்களை இசையமைப்பாளர் தேவா முன்னிலையில் அறிமுகமும் செய்து வைத்தனர்.

கடந்த வாரம் வெளியான படங்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி படத்தை வசூலில் முந்தியது. இந்தியளவில் 20 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியதாக சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் வெப்சைட்டுகள் இந்த தகவலை சொல்லியுள்ள நிலையில், படத்தின் வெற்றிக்கு ஓவர்சீஸ் வசூல் அதிகளவில் கைகொடுத்துள்ளது என்கின்றனர்.

5 நாள் வசூல்: செவ்வாய்க்கிழமையான நேற்று மீசைய முறுக்கு 2 திரைப்படம் தமிழ்நாட்டில் அதிகபட்சம் 2.35 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 5 நாட்களில் 22 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் இந்த படம் வசூல் செய்துள்ளது என சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், படக்குழுவின் பாக்ஸ் ஆபீஸ் கணக்கோ அதற்குள் 50 கோடியை கடந்து விட்டது. 50 கோடி வசூல்: ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த படங்களிலேயே மீசைய முறுக்கு 2 திரைப்படம் தான் அவருக்கு முதல் 50 கோடி படம் என படக்குழு கொண்டாடியுள்ளனர். 4 நாட்களிலேயே 51.3 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரையே நேற்று வெளியிட்டது. இந்த வாரம் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க படக்குழுவும் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

A timeless touch of elegance ✨🌸Sakshi Agarwal in a beautiful pastel drape, making every frame look effortlessly graceful...
30/09/2026

A timeless touch of elegance ✨🌸

Sakshi Agarwal in a beautiful pastel drape, making every frame look effortlessly graceful. ❤️

திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திவரும் “மீசைய முறுக்கு-2” படத்தின் இயக்குநர், கதாநாயகன், இசையமைப்பாளர் ஹிப்ஹா...
29/09/2026

திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திவரும் “மீசைய முறுக்கு-2” படத்தின் இயக்குநர், கதாநாயகன், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும், தயாரிப்பாளர் சுந்தர்.சி-க்கும் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த விநியோகிஸ்தர் 5 ஸ்டார் செந்தில். செப்டம்பர் 25ஆம் தேதி வெளியான மீசைய முறுக்கு-2 திரைப்படம் நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்து அசத்தியுள்ளது.

*நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தன...
29/09/2026

*நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு சினேகா ரெட்டி!*

அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட வலுவான சோஷியல் மீடியா கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளார்.

அவரது தொழில்முனைவுப் பயணத்தின் முக்கிய அங்கமாக ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ உள்ளது. தனது தொழில்முறை பணிகளுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் சினேகா அதிக ஆர்வம் உள்ளவர். தனது உடற்பயிற்சி மற்றும் லைஃப்ஸ்டைல் பற்றிய கிளிம்ப்ஸை அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

தனது குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களையும் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதேபோல் அவரது பயணங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான பதிவுகளும் ரசிகர்களுடனான அவரது நெருக்கத்தை மேலும் அதிகரித்துள்ளன. அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அந்தஸ்து அவரை பிரபலமாக்கினாலும் கடந்த சில ஆண்டுகளில் தொழில்முனைவு, குடும்பம், உடற்பயிற்சி, பயணம் என தனக்கு விருப்பமானவைகளில் கவனம் செலுத்தி, சினேகா தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இன்று சினேகா ரெட்டி அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தால் மட்டுமல்லாமல், வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் தனக்கென தனி டிஜிட்டல் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பிரபல ஆளுமையாகவும் அறியப்படுகிறார்.

Address

Chennai
600093

Alerts

Be the first to know and let us send you an email when Kollywood Street posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share