தேவா

தேவா How can I curse whom God has not cursed? How can I hate whom the Lord does not hate?
(4)

(தேவன் சபிக்காதவனை நான் சபிப்ப தெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பது எப்படி?)

30/07/2025

டிரம்ப் என்ன தைரியத்துல இப்படி 25% வரி விதிக்கிறாரு??

🤔🤔🤔

30/07/2025

காதலிக்கவில்லை என்று சொல்வது இப்போது passion ஆகிவிட்டது 😢

16 வயதில், ஒரு திறமையான பரதநாட்டிய நடனக் கலைஞரான சுதா சந்திரன், தன் வாழ்க்கையையே மாற்றும் ஒரு விபத்தை சந்தித்தார், இதன் ...
30/07/2025

16 வயதில், ஒரு திறமையான பரதநாட்டிய நடனக் கலைஞரான சுதா சந்திரன், தன் வாழ்க்கையையே மாற்றும் ஒரு விபத்தை சந்தித்தார், இதன் விளைவாக அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் சோர்ந்துபோயிருப்பார்கள். ஆனால் அவர் அப்படி இல்லை.

சுதா சக்கர நாற்காலியில் தன்னை அடைத்து வைக்க மறுத்துவிட்டார். அசைக்க முடியாத மன உறுதியுடன், அவர் மீண்டும் நடக்கவும் நடனமாடவும் தேர்வு செய்தார். அவருக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கை மூட்டு ஜெய்ப்பூர் கால் பொருத்தப்பட்டது, மேலும் அவரது கலையை மீண்டும் கற்றுக்கொள்வதற்கான வேதனையான பயிற்சியை தொடங்கினார்.

மாதக்கணக்கான இடைவிடாத பயிற்சி மற்றும் மன உறுதி அவருக்கு பலனளித்தது. அவர் மேடைக்குத் திரும்பினார் மற்றும் தனது முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் பார்வையாளர்களை திகைக்க வைத்தார்.

அவரது பயணம் நடனத்துடன் நிற்கவில்லை. பிரபலமான இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட ஒரு வெற்றிகரமான நடிகையானார் சுதா. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது, உடல் வரம்புகள் மன வலிமைக்கு இணையற்றவை என்பதை நிரூபித்துள்ளது.

இன்று, அவர் மனஉறுதி, தைரியம் மற்றும் ஒருபோதும் கைவிடாத முயற்சியின் உலகளாவிய அடையாளமாக நிற்கிறார்.

நீங்கள் எப்போதும் சோர்ந்து போகாதீங்க.

நன்றி வணக்கம் 🙏❤️

பணம் இருந்தாலும் கொல்றானுக, பணம் இல்லாட்டியும் கொல்றானுங்க, என்னதான்டா பிரச்சனை உங்களுக்கு? 😢 சாதியை வைத்து உங்களால் கொல...
30/07/2025

பணம் இருந்தாலும் கொல்றானுக, பணம் இல்லாட்டியும் கொல்றானுங்க, என்னதான்டா பிரச்சனை உங்களுக்கு? 😢 சாதியை வைத்து உங்களால் கொலை மட்டும்தாண்டா பண்ண முடியுது 😢😡

ஒரு பெண் இரண்டு பெரிய பணப் பைகளை சுமந்தவாறு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து, "என்னிடம் இருக்கும் மொத்தப் பணமும் இவ்வளவுத...
30/07/2025

ஒரு பெண் இரண்டு பெரிய பணப் பைகளை சுமந்தவாறு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து, "என்னிடம் இருக்கும் மொத்தப் பணமும் இவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டு எனக்கு நிவாரணம் வழங்குங்கள்'' என்று வேண்டினார்.

அதற்கு மருத்துவர், "இதுபோன்ற நூறு பைகளைக் கொண்டுவந்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் இறுதிக் கட்டத்தில் இருக்கிறீர்கள்'' என்றார்.

ஆம். அந்தப் பெண்மணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தில் இருந்தார்.
மருத்துவரின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நோயாளி, மருத்துவமனையின் நடைபாதையில் பணத்தை வீசத் தொடங்கினாள்.

"இதோ என் பணம். யார் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். மாறாக எனக்கு ஆரோக்கியத்தை தாருங்கள். நிவாரணம் தாருங்கள். இந்த முழுப் பணத்தையும் எடுத்துக்கொண்டு உடல்நலத்தை எனக்கு கொடுப்பபவர் யார்?'' என்று மருத்துவமனை வாசலில் நின்றவாறு அந்தப் பெண் உரத்த சப்தத்தில் கதறி அழுதாள்.

இப்போது... இந்த விநாடி... ஓரளவு உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றீர்களா? உடனே ஆண்டவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

ஆரோக்கியத்துக்கு இணையாக எதுவும் இல்லை. அதற்காக ஆயிரம் முறை தேவனுக்கு நன்றி சொலுத்தினாலும் போதுமாகாது.

உடல் நலம் உங்களை கைவிடும்போதுதான் வாழ்வில் உண்மையான வலியை உணர்வீர்கள். இந்த பூமிக்கும், பூமியில் வாழ்ந்த மனிதருக்கும் நாம் செய்த பெரும் துரோகம் அப்போதுதான் புரியவரும்.

கடைசி கட்டத்தில் இருக்கிறீர்களா? எல்லாரும் உங்களை கைவிட்டு விட்டார்களா? பயப்படாதீங்க.
உங்களைக் காக்க ஒருவர் இருக்கிறார். தாவீதை மரணக்கட்டுகள் அவனை சூழ்ந்து கொண்ட போதும், பாதாளத்தின் இடுக்கன்கள் அவனைப் பிடித்துக் கொண்ட போது அவன் மிகவும் வருத்தம் அடைந்தான். ஆனால் அவன் செய்த அடுத்த விஷயம் என்ன தெரியுமா? கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டு அவர் பாதத்தில் அமர்ந்து என்னை விடுவியும் ஆண்டவரே என்று கெஞ்சினான்.

கிருபையும் நீதியும் உள்ளவராகிய கர்த்தராகிய தேவன் அவனுக்கு உதவி செய்தார். அவனை காப்பாற்றினார். அதேபோல உங்களையும் காப்பாற்ற அவர் வல்லவராய் இருக்கிறார். நீங்கள் ஏன் தயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இப்போதைய அவர் பாதத்தில் சரணடைந்து கெஞ்சி மன்றாடுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்ய காத்துக் கொண்டிருக்கிறார். ஆமென் அல்லேலூயா 🙏🙌

😢
30/07/2025

😢

உன்னோட வாழ்க்கை எப்படி இருக்கு நண்பா?
30/07/2025

உன்னோட வாழ்க்கை எப்படி இருக்கு நண்பா?

கர்த்தருக்கே துதி கனம் மகிமையெல்லாம் 🙏❤️ கர்த்தர் குடும்பத்தை அன்பு, நம்பிக்கை, மன்னிப்புகான இடமாக படைத்துள்ளார்.📖 நானும...
30/07/2025

கர்த்தருக்கே துதி கனம் மகிமையெல்லாம் 🙏❤️ கர்த்தர் குடும்பத்தை அன்பு, நம்பிக்கை, மன்னிப்புகான இடமாக படைத்துள்ளார்.

📖 நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
யோசுவா 24:15

ஏரியில் உலக வரைப்படம்!!  fans
30/07/2025

ஏரியில் உலக வரைப்படம்!! fans

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம்...
29/07/2025

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

• (2 கொரிந்தியர் 4:17).

இரட்சண்ய சேனை சபையின் ஸ்தாபகர் சகோ.வில்லியம் பூத் அவர்கள் எழுதிய ஒரு செய்தியில் தான் கண்ட ஒரு கனவை பற்றி எழுதியிருக்கிறார். அக்கனவில் தன்னை ஒரு சாதாரண விசுவாசியாகவே கணடார். அதில் தான் மரித்து. பரலோகத்தில் நுழைவதை போன்ற காட்சிகளையும் கண்டார். அங்கே பரலோகத்தில் வில்லயம் பூத் ஜீவ புத்தகத்தை கண்டார். அந்த ஜீவ புஸ்தகத்தில் பதிவேட்டில் 'மன்னிக்கப்பட்டான்' என்ற வார்த்தை மட்டுமே பெரிதாக எழுதப்பட்டிருப்பதாக கண்டார். முதலில் அவர் தான் மன்னிக்கப்பட்டு இப்போழுது பரலோகத்தில் இருப்பதற்காக பேரானந்தம் கொண்டார். ஆனால் பரலோகத்தில் வேறொரு விசுவாசிகளின் குழுவையும் கண்டார். அவர்களோ சொல்லி முடியா விசேஷித்த மகிமை கொண்டவர்களாய் இருந்தார்கள். யார் இவர்கள்? இந்த பூமியில் தங்கள் சொந்த ஜீவனை அருமையாய் எண்ணாதவர்கள். இவர்கள் ஆண்டவருக்காகவும் அவருடைய சபைக்காகவும், சகலத்தையும் இழந்தவர்கள். பணத்தை, பதவியை, கௌரவத்தை இன்னும் இவ்வுலகம் அதிக மதிப்புடையதாய் கருதும் யாவற்றையும் இவர்கள் இழந்து தியாகம் செய்திருந்தார்கள்.

இவர்களின் சொல்லி முடியா மகிமையை கண்ட பூத் அவர்கள் மீது பொறாமை கொண்டார். அச்சமயத்தில் இயேசு (அவரது கனவில்) அருகில் வந்து, 'பூத் நீ காணும் இந்த சொல்லி முடியா மகிமையில் ஜொலிக்கும் இந்த ஜனங்களோடு ஒன்றாய் சேர்ந்து கொள்வதற்கு உன்னால் ஒரு போதும் முடியாது. ஏன் தெரியுமா? நீ இந்த மகிமையான ஜனங்களை போல் அல்லாமல், இந்த பூமியில் உனக்காகவே ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாய்' என மனம் வருந்தி கூறினார். வில்லியம் பூத் விழித்து கொண்டார். அப்பொழுது தான் இன்னமும் உயிரோடிருப்பதையும், தான் கண்டது கனவு என்றும் அறிந்தார். அன்றிலிருந்து எஞ்சியுள்ள தன் முழு வாழ்வையும் சுயநலமின்றி தன் ஆண்டவருக்கே வாழ்ந்து விட தீர்மானம் எடுத்தார்.

நம்மில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுகொண்டுள்ளோம், இரட்சிக்கப்பட்டுள்ளோம், அபிஷேகம் பெற்றுள்ளோம், ஆலயத்திற்கு செல்கிறோம், காணிக்கை கொடுக்கிறோம், பரலோகம் சென்று விடுவோம் என்ற நிச்சயமும் உண்டு. அவற்றை தாண்டி ஒரு கிறிஸ்தவ சத்தியம் உண்டு. அது என்ன? 'ஒருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைதானே வெறுத்து தன் சிலுவையை எடுத்து கொண்டு அனுதினமும் என்னை பின்பற்றக்கடவன்' - (லூக்கா 9:23) என்பதே. கிறிஸ்து எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லியும், இன்னும் பணத்தினால் வரும கௌரவத்தையும், பதவியினால் வரும் கௌரவத்தையும் வாஞ்சித்து, இவ்வுலக வாழ்வின் மேன்மை நம்முள் வாழ்ந்து கொண்டிருக்குமேயானால் இன்னும் நாம் சுயத்தை சார்ந்தவர்களாகவும் நம்மை வெறுக்காதவர்களாகவும் காணப்படுகிறோம் என்பதே பொருள்.

பிரியமானவர்களே, நமது இருதயத்தில் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை தாண்டி கிறிஸ்துவின் சிந்தை உண்டா? நமக்காகவே நாம் வாழ்ந்தது போதும், சுயநலமின்றி கிறிஸ்துவின் சிந்தையோடு வாழ்வோம். அந்த சொல்லி முடியாத மகிமையுள்ள கூட்டத்தாரோடு நாமும் காணப்பட பிரயாசப்படுவோம். ஒரு வாழ்வு அதை நமக்காகவே வாழ்ந்து, நாம் சம்பாதித்ததை நாமே அனுபவித்து, பிறரது மதிப்பையும், பாராட்டையும் பெற்று, வாழ்ந்த வாழ்வை விட்டு, தியாகத்தோடு கிறிஸ்துவின் சிந்தை நிறைந்த வாழ்வை வாழ்ந்து முடிப்போம். ஆமென் அல்லேலூயா!

இயேசுவும் தமக்காய் வாழாமல் - அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரை கூட நமக்கு தந்தாரே
அதற்கு பதிலாய் என்ன செய்வோமே – நாமும்
வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை அவருக்கு கொடுத்திடுவோம்...

Address

Chennai

Telephone

+917904427349

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தேவா:

Share