
14/12/2024
Ajinkya Rahane likely to be KKR's captain**
எந்த அணியை ரஹானே வழி நடத்தினாலும் அதில் சக்சஸ் ரேட் அதிகம் தனிப்பட்ட முறையில் கேப்டனாக அவர் பங்களிப்பும் சிறப்பாக இருக்கும் இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ரஹானேதான் கேப்டனாக ஆஸி மண்ணில் வென்று கொடுத்தார் அப்போ குழந்தை பிறந்துள்ளது என்று ஒரே ஒரு போட்டியில் (முதல் டெஸ்ட்) மட்டும் கோலி கேப்டன் செய்துவிட்டு இந்தியா வந்துட்டார் அந்த போட்டியில் இந்தியா படு தோல்வி முதல் இன்னிங்சில் 36 ரன்னுக்கு ஆல் அவுட்! அந்த அணியை தொடரை வெல்ல வைத்த பெருமை ரஹானேவுக்கு தான் சேரும்
என்ன தான் 23.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தாலும் அவரை கேப்டனாக போட வாய்ப்பு குறைவு ரஹானே விட்டுட்டு இந்த முடிவு எடுத்தால் அது தவறான முடிவுனு தான் சொல்வேன்!
கடைசியாக நடந்து முடிந்த ரஞ்சி கோப்பையை (இந்திய உள்ளூர் டெஸ்ட் தொடர்) ரஹானே தலைமையில் மும்பை அணி 8 ஆண்டுகள் இடைவெளியில் வென்றது
தொடரில் கோப்பையை வென்ற அணி இரானி கோப்பை தொடரில் "Rest of India" அணியிடன் மோதும் இது சற்று கடினமான தொடர் எல்லா உள்ளூர் அணியிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து ஒரு அணியை உருவாக்கி அதில் ரஞ்சி கோப்பை வெற்றி பெற்ற அணியை மோதவிடுவார்கள் அதிலும் ரஹானே தலைமையில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் அதிக ரன் எடுத்த காரணத்தினால் வெற்றி இந்த வெற்றி மும்பைக்கு 27 ஆண்டுகள் கழித்து இரானி கோப்பை கிடைத்தது
இப்ப நடப்பு செய்யது முஷ்தாக் அலி (SMAT) T20 தொடரில் தலைமையில் மும்பை அணி ஃபைனல் வந்து இருக்கு அதில் காலிறுதி & அரையிறுதி இரண்டிலும் அஜிங்கியா ரஹானே தான் போட்டியின் நாயகன் (man of the Match) 84(45) & 98(56) சராசரியாக 175 strike rate 💥
ஆக, ரஹானே கேப்டனாக போட்டால் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு இருக்கு கேப்டன் ரஹானே சிறப்பான சம்பவக்காரர்.
KKR management என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் 🧘