
25/07/2025
🙏🥣ஆடி மாதம் அம்மன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் ராகி கூழ் அம்மனுக்கும் உகந்தது
தேவையான பொருட்கள்👇
🌺ராகி மாவு - 1/4 கப்
🌺தண்ணீர் - 3 கப் (1 கப் - 250 மிலி)
🌺கெட்டியான தயிர்
🌺சின்ன வெங்காயம்
🌺மாங்காய்
🌺பச்சை மிளகாய் - 2
🌺கொத்துமல்லி தழை
🌺உப்பு - 1 டீஸ்பூன்
🌺ஒரு கப் குருணை அரிசி ஒரு கப்
செய்முறை👇
🖋ராகி மாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
🖋குருணை அரிசியை இரண்டு தடவை கழுவி ஊற வைக்கவும்
🖋மறுநாள் காலையில், தண்ணீரில் உருவாகும் மேல் நுரை அகற்றவும்.
🖋ராகி மாவுடன் தண்ணீரின் அடிப்பகுதியை நன்றாக கலக்கவும்.
🖋ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
🖋தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது ஊற வைத்து இருந்த குருணை அரிசியை சேர்த்து முக்கால் பதம் வெந்தவுடன் புளிக்க வைத்திருந்த ராகி மாவு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
🖋நன்றாக வெந்த பின் கெட்டியாக தண்ணீர் எல்லாம் பற்றி விடும் கைவிடாமல் கிளற வேண்டும் கையில் தண்ணீர் தடவி வெந்த ராகி அரிசியை தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது அதுதான் சரியான பக்குவம்
🖋முடிந்ததும், தீயை அணைத்து, ராகி கலவையை முழுவதுமாக ஆற விடவும்.
🖋ஆறிய ராகி கலவையில் கெட்டியான தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, மாங்காய் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
🖋கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
🖋அவ்வளவுதான், ஆரோக்கியமான ஆடி மாத ராகி கூழ் பரிமாற தயாராக உள்ளது.
🖋சாமிக்கு நெய்வேதியம் செய்துவிட்டு நீங்களும் பரிமாறலாம் பக்தர்களுக்கும் கொடுக்கலாம் சுவையான ஆடி மாத ராகி கூழ்
Follow Mrs Mrs Home Food more recipes