Tamil News Anchors

Tamil News Anchors Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil News Anchors, TV Channel, Nesappakkam, Chennai.

20/12/2025
20/12/2025

அன்புடையீர் வணக்கம்
போலி தேர்தல் - முக்கிய அறிவிப்பு

கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் பெயரில் போலி வாக்காளர்களைக் கொண்டு ஒரு சிலர் தேர்தல் என்ற ஒன்றை நடத்தி நிர்வாகிகள் என சிலரை குறிப்பிட்டு ஒரு அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்களிடம் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் தொடர்பான எந்த ஆவணங்களோ, ஆதாரங்களோ இல்லை.
சென்னையில் உள்ள முக்கிய பத்திரிகையாளர் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் அண்மைக்காலமாக பத்திரிகையாளர் சங்கங்களை பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் கைப்பாவையாக செயல்படும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடக அமைப்புகளை பிளவுபடுத்தி அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் சலுகைகளை பெறும் நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருவது அண்மைக்காலமாக அம்பலப்பட்டு வருகிறது.
சங்கத்தை பிளந்து அதற்கு அங்கீகாரம் பெற தேர்தல், பதவியேற்பு விழா,நலத்திட்ட உதவிகள் என நடத்தி அதில் சில அரசியல் சக்திகளையும், ஆளுமைகளையும் வரவழைத்து, பங்கேற்கச் செய்து முறைகேடாக அந்த சங்கங்களுக்கு அங்கீகாரம் பெற முயற்சிக்கின்றனர், அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளுடன் இணைந்து இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் பெயரை துஷ்பிரயோகம் செய்து அவர்கள் வெளியிடும் அறிக்கை, விழாக்கள் குறித்து சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்பதையும்,. எங்களது சங்கமே உண்மையான சங்கம், போலியாளர்களை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அருள் கேப்ரியல்
செய்தித் தொடர்பாளர்
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம்
Ph: 76677 53353

டிசம்பர் 21,  தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம்...
16/12/2025

டிசம்பர் 21, தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம்...

நமது சங்கத்தின் பொருளாளர் திருமதி.தமிழரசி சிவகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐சங்கம் தொடங்கியது முதல் இன...
15/12/2025

நமது சங்கத்தின் பொருளாளர் திருமதி.தமிழரசி சிவகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐

சங்கம் தொடங்கியது முதல் இன்றுவரை சங்கப் பணியே எம் பணி என சங்க நலனுக்காக 10 ஆண்டு காலமாக உழைத்து கொண்டிருப்பவர்.28 ஆண்டுகளாக செய்திவாசிப்பாளராக, நெறியாளராக தொடர்ந்துவரும் அழகான தமிழுக்கு சொந்தக்காரர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் ஆசிரியராக அயராது பணிபுரிந்து வருபவர். பல்வேறு அலுவல்கள், குடும்ப பணிகளுக்கிடையே கஜா புயல் நிவாரண உதவிகள், கொரோனா கால கட்டம், நமது நிகழ்ச்சிகளுக்காக அன்னை வேளாங்கண்ணி பள்ளியை இலவசமாக பெற்றுத் தருவது, ஷசுன் ஜெயின் கல்லூரியை அகாடமிக்காக பெற்றுத் தந்தது, எந்த நிகழ்ச்சி ஆனாலும் மேடையேறி அனைவரையும் அடைமொழிகளுடன் அலங்கரித்து வரவேற்பது, பொருளாளராக மெச்சத்தக்க வகையில் கணக்கு வழக்குகளை பாரமரித்து வருவது, பெற்றோர் இறப்புக்கு பணம், தங்க நாணயம், 10ஆயிரம் கடனுதவி திட்டம் என ஒட்டுமொத்த தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்கத்தின் மிகப்பெரும் ஆளுமையான திருமதி.தமிழரசி சிவகுமார் நிரந்தரப் பொருளாளராக வீற்றிருக்க சங்க உறுப்பினர்கள் சார்பில் நன்றியுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐💐

⚫️ *ஆழ்ந்த இரங்கல்*⚫️தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர், செய்தி வாசிப்பாளர், கவிஞர், எழுத்தாளர் திரு. ...
22/11/2025

⚫️ *ஆழ்ந்த இரங்கல்*⚫️

தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர், செய்தி வாசிப்பாளர், கவிஞர், எழுத்தாளர் திரு. ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

மகாகவி ஈரோடு தமிழன்பன் இறுதிச் சடங்கு அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் நாளை காலை 23-11-2025, 10:30 மணி அளவில் நடைபெறும்.

இல்லம் - C2 Block Door No.231, 1st floor SAFG towers Koyambedu chennai-600107.
pH no: 9444184753

*கும்கி 2 சிறப்பு காட்சி**தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்காக கும்கி 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்...
14/11/2025

*கும்கி 2 சிறப்பு காட்சி*

*தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்காக கும்கி 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

*நமது சங்க உறுப்பினர் விஜய் டிவி புகழ் திரு.ஆண்ட்ரூஸ் அவர்கள் அனைவருக்கும் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்*

*நாளை(15.11.2025) காலை 10:30 மணி*

*கமலா தியேட்டர், வடபழனி*

*உடனடியாக முன்பதிவு செய்யவும்*

*டிக்கெட் இலவசம்*

*விருப்பமுள்ளவர்கள் உடனடியாக பின்வரும் குரூப்பில் இணையவும்*

*ஏஞ்சலினா பிரியதர்ஷினி*
*சங்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்*
*தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம்*

தமிழ்நாடு அரசின் சிறந்த உச்சரிப்பு விருது பெற்ற* @⁨🔸Sun Tv Sarvodaya Ramalingam⁩@⁨🔸PT Vedhavalli⁩ @⁨Win Tv Aruna Pandiya...
08/09/2025

தமிழ்நாடு அரசின் சிறந்த உச்சரிப்பு விருது பெற்ற* @⁨🔸Sun Tv Sarvodaya Ramalingam⁩@⁨🔸PT Vedhavalli⁩ @⁨Win Tv Aruna Pandiyaraj⁩ @⁨A News Mohanraj⁩ ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 2022 முதல் ஆண்டுதோறும் 4 செய்தி வாசிப்பாளர்களுக்கு விருது வழங்க வலியுறுத்தி, அதனை போராடி பெற்றுத் தந்ததில் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கம் பெருமிதம் கொள்கிறது. நன்றி! 10 ஆண்டு கால சங்க சாதனைகளில் இது மணி மகுடம்.❤️🙏

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 22
01/09/2025

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 22

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 21
01/09/2025

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 21

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 20
01/09/2025

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 20

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 19
01/09/2025

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 19

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 18
01/09/2025

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் பகுதி 18

Address

Nesappakkam
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Tamil News Anchors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil News Anchors:

Share

Category