SRI VETRI SAI BABA

SRI VETRI SAI BABA SAIBABA DIYANA MAIYAM

நலம்பெற, வளம்பெற, நினைத்த காரியங்கள் நிறைவேற ...... மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள்.Please subscribe our YouTu...
08/06/2023

நலம்பெற, வளம்பெற, நினைத்த காரியங்கள் நிறைவேற ...... மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள்.

Please subscribe our YouTube channel: https://youtu.be/XnFsG5DsFkg

06/06/2023

கவலை பயத்தை போக்கும் ஶ்ரீ சாய்பாபா மந்திரம்!

Please Subscribe our channel; https://youtu.be/XnFsG5DsFkg
தினமும் சாய்பாபா மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட்டால் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். மனக்கவலைகளை போக்கும் சாய்பாபா மந்திரம் ஒருவரின் மனதில் உள்ள தேவையற்ற கவலைகள் மற்றும் பயங்களை போக்கும் வல்லமை கொண்ட சாய் பாபாவின் பதம் பணிந்து அவருக்கான இந்த சாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பதன் மூலம் நமது கவலைகளும் துன்பங்களும் நீங்கீவிடும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:
"ஓம் சாய் குருவாயே நமஹ
ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ"

இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி ‘ஸ்ரீ சாய் பாபாவை’ மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும். வியாழக்கிழமைகளில் சாய் பாபா கோவிலுக்கு சென்றோ அப்படி முடியாதவர்கள் வீட்டில் சாய்பாபா படமிருந்தால் அந்த படத்திற்கு முன்பு சிறிது முந்திரி பருப்புகளையோ அல்லது கற்கண்டுகளையோ நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட, உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடமுடியும். உங்கள் மனத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகி உங்கள் மனம் சாந்தமடையும்.

நினைத்த காரியங்களை நிறைவேற்றி தரும் ஶ்ரீ வெற்றி சாய்பாபா அருளை பெற தியானம் செய்யுங்கள்.....“ஓம் சாய் குருவாயே நமஹஓம் ஷீர...
06/06/2023

நினைத்த காரியங்களை நிறைவேற்றி தரும் ஶ்ரீ வெற்றி சாய்பாபா அருளை பெற தியானம் செய்யுங்கள்.....
“ஓம் சாய் குருவாயே நமஹ
ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”







#சாய்பாபா

சாய் பாபாவின் வரலாறு மற்றும் மிகச்சிறந்த சில பொன்மொழிகள்!இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்ந்த ஆன்மீக குருவும்,  இ...
05/06/2023

சாய் பாபாவின் வரலாறு மற்றும் மிகச்சிறந்த சில பொன்மொழிகள்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்ந்த ஆன்மீக குருவும், இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் போற்றப்படும் புனிதத் துறவியும் தான் சாய் பாபா (Sai Baba). தீவிர சிவ பக்தர்களான தாய் தந்தையருக்கு இவர் பிறந்திருந்தாலும், இவர் முஸ்லிம் பக்கீர் ஒருவராலேயே வளர்க்கப்பட்டார். அதனாலேயே இரு மதத்தாரும் இவரைப் போற்றி வணங்குகின்றனர்.
சாய் பாபா தான் வாழ்ந்த காலத்தில் பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் பல்வேறு செயல்கள் மூலம் இந்து மற்றும் முஸ்லிம் மத இணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இவர் சமாதி அடைந்த இடமான சீரடி தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

பொன்மொழிகள்.........

**கடவுள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து உங்களை ஒன்றுமில்லாதவராக்கினால், வருத்தப்படாதீர்கள், ஏனெனில் கடவுள் உங்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுக்கப் போகிறார். மேலும் அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தொடங்குவார்.

**உங்கள் வாழ்க்கையில் பல வருடங்களாக இருந்த இருள் இப்போது மறைந்துவிடும்.

**எல்லாச் செயல்களையும் இறைவனின் செயல்களாகப் பார்த்தால், நாம் பற்றற்றவர்களாகவும், கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டவர்களாகவும் இருப்போம்.

**பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை.

**ஒருவரையொருவர் நேசியுங்கள், அன்பைப் பொழிவதன் மூலம் மற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு உயர உதவுங்கள்.

**அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்.

**அறிவை ஞானமாக மாற்றி, ஞானம் குணத்தில் வெளிப்பட்டாலன்றி, கல்வி என்பது ஒரு வீணான செயலாகும்.

**எந்தவொரு மகிழ்ச்சியும் மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது.

**தன்னலமற்ற சேவை மட்டுமே ஒருவரின் இதயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதநேயத்தை எழுப்புவதற்கு தேவையான வலிமையையும் தைரியத்தையும் தருகிறது.

**இன்றைய கல்வியானது, அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையோ, மனஉறுதியையோ மாணவர்களுக்கு வழங்கவில்லை. கல்வித் துறை அறியாமையின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது.

**நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம்.

**தான் பிறந்த சேறு அல்லது தன்னைத் தாங்கும் நீரால் கூட பாதிக்கப்படாமல், சூரியன் வானத்தில் உதிக்கும்போது, தன் இதழ்களை விரிக்கும், தாமரையாக நீங்கள் இருக்க வேண்டும்.

**எல்லாச் செயல்களும் எண்ணத்தின் விளைவுகளே, எனவே எண்ணங்களே முக்கியமானது.

**இந்தப் பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகம்.

**பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை.

**தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் மூவரும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முதன்மையானவர்கள்.

**உண்மையான அழகு உண்மையான கல்வியில் உள்ளது.

**வாழ்க்கை என்பது ஒரு பாடல் - அதைப் பாடுங்கள். வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - அதை விளையாடுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சவால் - அதை எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு கனவு - அதை உணருங்கள். வாழ்க்கை என்பது ஒரு தியாகம் - அதை வழங்குங்கள். வாழ்க்கை என்பது ஒரு காதல் - அதை அனுபவியுங்கள்.

**நீங்கள் என் உதவியையும் வழிகாட்டுதலையும் நாடினால், நான் உடனடியாக அதை உங்களுக்குத் தருவேன்.

**இன்றைய கல்வி முறை கற்றவரை சுயநலவாதியாக்குகிறது. அந்த நபரை புலன்களுக்கு அடிமையாக்குகிறது. அதன் விளைவாக அந்த நபர் தனது தெய்வீக தன்மையை மறந்து விடுகிறார்.

**இந்த உலகில் புதியது எது? எதுவும் இல்லை. இந்த உலகில் பழையது எது? எதுவும் இல்லை. எல்லாம் எப்பொழுதும் இருந்தது மேலும் எப்போதும் இருக்கும்.

**நமது கர்மாவே நமது இன்பத்திற்கும் துக்கத்திற்கும் காரணம், அதனால் உனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்.

**இறைவனுடன் முழுமையான இணக்கத்துடன் வாழக் கற்றுக்கொண்டால் மட்டுமே உங்கள் எதிர்கால வாழ்வு மகிமையடையும்.

**நீங்கள் உங்கள் அகக் கண்ணால் பார்க்கும்போது. நீங்கள் தான் கடவுள் என்றும் நீங்கள் அவரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் உணருவீர்கள்.

**நம் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் உருகிக்கொண்டிருக்கும் பனிக்கட்டி போன்றது. அது முழுமையாக உருகும் முன், அதை மற்றவர்களுக்கான சேவைக்கு அர்ப்பணியுங்கள்.

**நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே நீங்கள் அறுவடை செய்வீர்கள். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ, அதையே நீங்கள் பெறுவீர்கள்.

**மற்றவர்களின் செயல்கள் அவர்களை மட்டுமே பாதிக்கும். உங்கள் சொந்த செயல்கள் மட்டுமே உங்களைப் பாதிக்கும்.

**நான் இரத்தமும் சதையுமாக இல்லாவிட்டாலும், நான் என் பக்தர்களைக் காப்பேன். நீ என்னை நினைக்கும் கணத்தில் நான் உன்னுடன் இருப்பேன்

ஶ்ரீ வெற்றி சாய்பாபா அருளை பெற தியானம் செய்யுங்கள்.
நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும்.
ஜெய் சாய்ராம்..
ஜெய் ஜெய் சாய்ராம்.
ஜெய் ஶ்ரீ வெற்றி சாய்ராம்.

04/06/2023

ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...வெற்றிபாபா உருவ தியானம்!

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்கள் எங்கும் நிறைந்தவர்கள். இதை நினைவில் கொள்ள வேண்டும்.
தியானம்! மிக மிக சக்தி வாய்ந்தது. நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதை மிக எளிதாக அடைய தியானம் ஒன்றே கைகொடுக்கும்.
புத்தரும், இயேசுவும் அன்பை பிரதானமாக கொண்டனர். அன்பின் உருவமாக வாழ்ந்தனர். அதற்கு காரணம் அவர்கள் செய்த தியானம்தான். முகமது நபி, ஹீராமலையில் தியானத்தில் ஆழ்ந்தபோதுதான் மிகப் பெரிய மாற்றத்தை கண்டார்.
மகாவீரர் தியானம் செய்து தன்னையே வென்றார். இவர்களைப்போல நீங்களும், நானும் தியானம் செய்தால் நிச்சயமாக நாம் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க முடியாத ஒருவராக மாறிவிடுவோம். சீரடி சாய்பாபாவும் இதைத்தான் சொன்னார். பாபா காட்டிய பல வகையான ஆன்மீக பாதைகளில் இந்த தியானப் பாதை தனித்துவம் கொண்டது. ஆத்மார்த்தமான பலன்களை அள்ளித்தரவல்லது. தன்னை நாடி வந்த லட்சக்கணக்கான பக்தர்களில் சில பக்தர்களை மட்டும் சாய்பாபா தேர்வு செய்து, ‘தியானம் செய். தியானம் செய்.’ என்று விடாப்பிடியாக வலியுறுத்தியது உண்டு. அதை ஏற்று தியானத்தில் மூழ்கியவர்கள் மிகப்பெரிய பலன்களை அறுவடை செய்தனர்.

தியானத்துக்கு ஆத்மாவை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. உங்களை சுற்றி மிகப்பெரிய கலவரமே நடந்தாலும்கூட தியானத்தால் ஆன்மா அமைதியும், தூய்மையும் அடையும். இந்த பிரபஞ்சத்தில் எங்கும் தெய்வீக சக்தி நிரம்பி இருக்கிறது. நம்மிடம் உள்ள கோபம், தாபம், காமம், ஆசை, பொறாமை காரணமாக நாம் அந்த தெய்வீக சக்தியை உணராமலேயோ அல்லது புரிந்து கொள்ளாமலேயோ இருக்கிறோம். ஆனால், யார் ஒருவர் தியானம் செய்கிறாரோ அவரிடம் ஆசை, கோபம், காமம், பொறாமை போன்றவை குறையும். இதனால் தெய்வீக சக்தியை பெறும் ஆற்றலை எட்டமுடியும். இப்படி தியானம் மூலம் நம் எண்ணங்கள் சுத்தம் அடைந்தால் தாமாகவே ஆத்மபலம் ஏற்பட்டுவிடும். எனவே ஒருவர் ஆன்மீகத்தில் மேம்படவும், ஆரோக்கியத்தில் மேம்படவும் தியானம் மிகமிக முக்கியமானதாக உள்ளது.
தியானம் சரிவர அமையப்பெற்றால் உடலில் உள்ள சக்கரங்களும், சுரப்பிகளும் சிறப்பாக செயல்படும். இது நமக்கு தெளிவான சிந்தனையைத் தரும். மனதை பக்குவப் படுத்தும். நம் மனதில் விநாடிக்கு 14 எண் ணங்கள் ஏற்படுவதாக ஆய்வுகளில் கண்டு பிடித்துள்ளனர். நாம் தியானம் செய்தால் இந்த எண்ண அலைகள் குறைந்துவிடும். இதன் காரணமாக நாளடைவில் நமது மனம் ஒருமித்த நிலைக்கு வந்துவிடும். புருவ மத்தியில் கவனம் செலுத்தி தியானத்தில் ஈடுபட்டால் அது நம்மை ஆன்மீகத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும். தியானத்தில் சுவாச தியானம், விளக்கு தியானம், ஓம்கார தியானம், குண்டலினி தியானம் என்று எத்தனையோ வகைகள் உள்ளன.

ஆனால் சீரடி சாய்பாபா இத்தகைய தியானங்களை எல்லாம் சொல்லி தனது பக்தர்களை கஷ்டப்படுத்தவில்லை. ‘என்னை (பாபா) நினைத்து தியானம் செய். அதுபோதும்’ என்று பல தடவை தனது பக்தர்களிடம் கூறியுள்ளார். அதன் சாராம்சம் வருமாறு:-
நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. என் வழி அனைத்தில் இருந்தும் விலகி நிற்கும் தனி வழி. நம் உள்ளிருக்கும் ஞானத்தை அடைய தியானம் மிகமிக முக்கியமானது-. ஒருமுனை சித்தமாக தியானம் செய்வதால் ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அதை நீ தொடர்ந்து பழகினால் அலைபாயும் எண்ணங்கள் அமைதியாகிவிடும்.
உன் மனதில் துளி அளவுகூட ஆசை இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட நிலையில் நின்றுகொண்டு எல்லாவற்றிலும் வியாபித்து இருக்கும் கடவுளை நினைத்து தியானம் செய்தால் மனம் ஒருமைப்படும். அப்போது உன் இலக்கை நீ அடைவாய். இதுதான் ஆத்ம ஞானத்தை உணர்வதற்கு உரிய வழியாகும். அவ்வாறு உனக்கு தியானம் செய்ய இயலாவிட்டால் வேறு ஒரு எளிய வழியை சொல்லித்தருகிறேன் கேள். என்னையே நினைத்து தியானம் செய். அதாவது, என் அவதார உருவத்தை நினைத்துக்கொள். கண்களை மூடி அமர்ந்து என்னையே நினைத்துப்பார். என் முழு உருவத்தையும் உன் மனதுக்குள் கொண்டுவா. கால் நகத்தில் தொடங்கி தலை முடிவரை என் ரூபத்தை நினைத்துப் பார். எப்போது தியானத்தில் உட்கார்ந்தாலும் இத்தகைய குணாதிசயங்களுடன் தியானம் செய்.
இப்படி நீ தியானம் செய்யும்போது முழுக்க முழுக்க என் உருவத்தையே நினைத்துக்கொண்டால் நிச்சயமாக ஒரு காலகட்டத்துக்கு பிறகு உன்னுடைய மனம் அமைதி அடைந்துவிடும். அதன் பிறகு என் உருவம் உனக்குள் பதிந்து படிப்படியாக ஒருமுக நிலை உருவாகிவிடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தியானம், தியானம் செய்பவர், தியானம் செய்யப்படும் பொருள் ஆகிய 3-க்கும் இடையே உள்ள வேற்றுமைகள் மறைந்துவிடும். ஒரே முகமான சிந்தனைதான் இருக்கும். அந்த சிந்தனை தூய்மையான, உன்னதமான, உயர்வான நிலை கொண்டதாக இருக்கும். எனது உருவம் எல்லையற்ற ஞானம், கருணை கொண்டது. அதை நினைத்து தியானம் செய்ய செய்ய மனம் வெறுமையாகி பிரம்மத்தோடு பிரம்மமாக இணைந்து ஒன்றாகிபோவாய். சிலருக்கு எனது உருவத்தை தியானத்தில் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படலாம். அப்படி இருப்பவர்கள் என்னை நேரில் பார்க்கும்போது எதை உணர்ந்தார்களோ அதை நினைத்து தியானம் செய்யலாம். நிச்சயமாக பலன்கிடைக்கும்.
தாய் ஆமை நதியின் ஒரு கரையில் இருக்குமாம். மறுகரையில் அதன் குஞ்சுகள் இருக்கும். தாய் ஆமை அவற்றுக்கு பால் தருவது இல்லை. அரவணைத்து பாதுகாப்பது இல்லை. அதற்கு பதில் மறுகரையில் இருந்தபடியே கனிவான பார்வை ஒன்றை பார்க்கும். அந்த ஒரு பார்வையிலேயே ஆமை குஞ்சுகள் தெம்பான நிலைக்கு வந்துவிடும். ஆமை குஞ்சுகளின் தியானம்தான் இந்த வெற்றிக்கு காரணம். இதே போன்றதுதான் எனக்கும், உனக்கும் உள்ள உறவு. நீ எங்கு இருந்தாலும் என் பார்வை உன் மீது இருந்துகொண்டே இருக்கும். என்னையே நினைத்து தியானம் செய். அதற்கான பலனை அறுவடை செய்வாய்.
அதே சமயத்தில் என் பக்தனின் பெயரை உச்சரிப்பதே எனக்கு தியானம் ஆகும். என் பக்தரோடு நடப்பதே ஆனந்தம். என் பக்தன் தவறி விழும்போது என் கைகளை நீட்டி தாங்கி பிடிப்பேன். அவனை ஒருபோதும் விழுந்துவிட அனுமதிக்க மாட்டேன். என் பக்தன் தியானம் செய்து மேம்பட்டிருந்தால் நிச்சயமாக என்னிடம் இருந்து விலகமாட்டான். தியானத்திலும் என் பெயரை உச்சரிக்கும்போதும், உங்கள் மனக் கண் முன் என்னை நிலை நிறுத்துங்கள். இவ்வாறு தொடர்ந்து தியானம் செய்யும்போது ‘சாமீப்யமுக்தி’ என்ற முக்தி நிலையை நீங்கள் அடைய முடியும். இப்படி பாபா பல தடவை தன் பக்தர்களுக்கு தியானத்தின் முக்கியத்துவத்தை சொல்லியுள்ளார். பாபா காட்டிய இந்த பாதையை எத்தனையோ பக்தர்கள் கடைபிடித்துள்ளனர்.
சீரடி சாய்பாபாவின் அற்புதங்களை இந்த உலகுக்கு காட்டியவர்களில் ஒருவரான நரசிம்ம சுவாமிஜி தியானத்தின் மூலம் பாபாவை நெருங்கினார். பாபாவையே எப்போதும் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். பாபாவை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது சீடர் ராமகிருஷ்ண சுவாமிஸ்ரீக்கு ஒரு தடவை சொல்லிக் கொடுத்தார். அதை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
முதலில் உங்கள் வீட்டின் ஒரு பகுதியில் அமைதியாக அமருங்கள். கண்களை மூடி தியானத்தில் ஈடு படுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வதை வழக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் சாய்பாபாவின் காலடிகளில் கவனத்தை செலுத்துங்கள். பிறகு அப்படியே மேல் நோக்கி உங்கள் பார்வையையும், கவனத்தையும் கொண்டு வாருங்கள்.
சாய்பாபாவின் ஜொலிக்கும் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் நினைத்துப் பாருங்கள். அவரது தலை முடி வரை உங்களது பார்வை, கவனம் செல்ல வேண்டும். இறுதியில் பாபாவின் திருஉருவம் முழுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து நினைத்துப் பாருங்கள். இப்படியே சாய்பாபா அவதார உருவத்தை கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் கொண்டுவந்து எண்ணிப் பாருங்கள். பிறகு மனம் முழுவதையும் சாய்பாபா திருஉருவத்தின் காலடியில் கொண்டுபோய் குவித்துவிடுங்கள். அப்படி செய்தால் பாபாவின் முழுமையான கருணையையும், அருளையும் நீங்கள் பெற முடியும்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்கள் எங்கும் நிறைந்தவர்கள். இதை நினைவில் கொள்ள வேண்டும். தியானத்தில் பாபாவை எந்த அளவுக்கு தேடுகிறீர்களோ அந்த அளவுக்கு ஆனந்தம் பொங்கும். சாய்பாபாவுக்கு உனக்கு என்ன தேவை என்பது தெரியும். அவரை தியானித்து வழிபட்டால் மிக உயர்ந்த ஆன்மீக பலன்களை பெற முடியும். சாய்பாபாவின் பாதங்களை விட்டுவிடாதே. கெட்டியாக பிடித்துக்கொள். நீ ஆசிர்வதிக்கப்படுவாய். இவ்வாறு நரசிம்ம சுவாமிஜி தனது சீடரிடம் தெரிவித்தார். இந்த கருத்து சாய்பாபாவின் ஒவ்வொரு பக்தனுக்கும் பொருந்தும். பாபாவை நினைத்து தியானம் செய்யுங்கள். பலன்கள் தானாக தேடி வரும்.
அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தியானம் செய்தால் நல்லது என்று சித்தர்கள் சொல்லி உள்ளனர். அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை தியானம் செய்வது உங்களை புனிதனாக்கும் என்று வள்ளலார் சொல்லி உள்ளார். குரு சக்தியுடன் இணைய வேண்டுமா? காலை 7 மணி முதல் 7.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரையும் தியானம் செய்ய வேண்டும். இதில் உங்களுக்கு உகந்த நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாபாவை நினைத்து தியானம் செய்யுங்கள். விரைவில் மாற்றத்தை பார்ப்பீர்கள். ஏனெனில் இது பாபா காட்டிய பாதை! இதுமட்டுமா? பாபாவின் உருவப் படமும் மூல மந்திரமும்கூட பாபாவை நெருங்க செய்யும். அதற்கும் பாபா வழிகாட்டி உள்ளார்.

ஶ்ரீ வெற்றி சாயிபாபாவின் சக்தி தரும் மூலமந்திரம்;  தினமும் சொன்னால் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம்! குரு...
03/06/2023

ஶ்ரீ வெற்றி சாயிபாபாவின் சக்தி தரும் மூலமந்திரம்; தினமும் சொன்னால் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம்!

குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பார்கள். குருவை எல்லாத் தருணங்களிலும் வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். நாம் குருநாதராக எவரை வரித்துக் கொண்டிருக்கிறோமோ அவரை, அனுதினமும் வழிபட்டு நம்முடைய பிரார்த்தனைகளைச் சொல்லவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தென்னாடுடைய சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சமாக இருந்து அருள்பாலிக்கிறார். கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளுகிறார் என்கிறது புராணம்.

குரு பிரகஸ்பதியை, நவக்கிரகங்களில் குருபகவானாக ஏற்று வணங்கிவருகிறோம். குருவுக்கு உண்டான ப்ரீத்தியை குறைவறைச் செய்து வருகிறோம்.
நம்மைப் படைத்த பிரம்மாவும் குரு அம்சம். ‘குரு பிரம்மா குரு விஷ்ணு’ என்று படைத்தவனையே முதல் குருவாகக் கொண்டு வணங்கச் சொல்கிறது இந்த ஸ்லோகம்.
மனித உலகில், கண்ணுக்கு முன்னே வாழ்ந்த குருமார்களை மகான்கள் என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். சதாசர்வ காலமும் அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம். அப்படி கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுகிறவர்தான் ஷீர்டி சாயிபாபா.

ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை.

குருவுக்கு உகந்த நாள் என்று வியாழக்கிழமையைச் சொல்வார்கள். ஆனாலும் தினமும் குருவை வந்தனம் செய்வது மகோன்னதமானது என்கிறார்கள் சாயி பக்தர்கள். தினமும் சாயிபாபாவை ஒரு பத்துநிமிடம் வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது ஐதீகம்.

தினமும் பாபாவின் படத்துக்கோ சிலைக்கோ பூஜை செய்யுங்கள். தீப ஆரத்தி காட்டுங்கள். முன்னதாக, அவருக்கு எதிரே ஒரு பத்துநிமிடமேனும் அமர்ந்து, பாபாவின் மூல மந்திரத்தைச் சொல்லுங்கள்.

இதோ... அந்த மூல மந்திரம்;

"ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி".

இந்த ஒற்றை வரி கொண்ட மூல மந்திரத்தை, கண்கள் மூடி ஜபியுங்கள். தினமும் 108 முறை சொல்லுங்கள். முடிந்ததும் தீபாராதனை காட்டி வழிபடுங்கள். தினமும் சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி என்று நைவேத்தியம் செய்ய வேண்டும் என்கிற அவசியமெல்லாமில்லை.

நம்மிடம் இருப்பதை பாபாவுக்குக் கொடுத்தாலே போதும்... அதை ஏற்றுக் கொள்வார். நாம் பக்தியுடன் கொடுப்பதை, அன்புடன் ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதித்து அருளுவார். நம்மையும் நம் குடும்பத்தாரையும் காத்தருள்வார்.

எனவே, இரண்டே இரண்டு பிஸ்கட் வைத்தும் வேண்டிக்கொள்ளலாம். இரண்டு சாக்லெட் வைத்தும் வழிபடலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சர்க்கரை வைத்து பூஜிக்கலாம். நாம் பாபாவுக்கு என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. நாம் எது கொடுத்தாலும் அவரின் அன்பையும் ஆசியையும் பேரருளையும் என்பதில் மாற்றமுமில்லை.

சாயிநாதனே சரணம்.... ஶ்ரீ வெற்றி சாய்பாபா சரணம்.

ஶ்ரீ வெற்றி சாய்பாபாவை மனதில் நினைத்து, தியானித்து 108 போற்றிகளை கூறுங்கள். நீங்கள் நினைத்த அனைத்து நல்ல காரியங்களும் நி...
01/06/2023

ஶ்ரீ வெற்றி சாய்பாபாவை மனதில் நினைத்து, தியானித்து 108 போற்றிகளை கூறுங்கள்.
நீங்கள் நினைத்த அனைத்து நல்ல காரியங்களும் நிச்சயம் நிறைவேறும்.

1.ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம
2.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ 3.மாருத்யாதி ரூபாய நம
4.ஓம் சேஷ சாயினே நம
5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம
6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம
7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம
8.ஓம் பூதாவாஸாய நம
9.ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம
10.ஓம் காலாதீதாய நம
11.ஓம் காலாய நம
12.ஓம் காலகாலாய நம
13.ஓம் காலதர்பதமனாய நம
14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம
15.ஓம் அமர்த்யாய நம
16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம
17.ஓம் ஜீவாதாராய நம
18.ஓம் ஸர்வாதாராய நம
19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம
20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம
21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம
22.ஓம் ஆரோக்ய-க்ஷமதாய நம
23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம
24.ஓம் ருத்திஸித்திதாய நம
25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம
26.ஓம் யோக÷க்ஷமவஹாய நம
27.ஓம் ஆபத்பாந்தவாய நம
28.ஓம் மார்க்பந்தவே நம
29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம
30.ஓம் ப்ரியாய நம
31.ஓம் ப்ரீதிவர்தனாய நம
32.ஓம் அந்தர்யாமினே நம
33.ஓம் ஸச்சிதாத்மனே நம
34.ஓம் ஆனந்தாய நம
35.ஓம் ஆனந்ததாய நம
36.ஓம் பரமேச்வராய நம
37.ஓம் பரப்ரம்ஹணே நம
38.ஓம் பரமாத்மனே நம
39.ஓம் ஞானஸ்வரூபிணே நம
40.ஓம் ஜகத பித்ரே நம
41.ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம
42.ஓம் பக்தாபயப்ரதாய நம
43.ஓம் பக்த பாராதீனாய நம
44.ஓம் பக்தானுக்ரஹ காதராய நம
45.ஓம் சரணாகதவத்ஸலாய நம
46.ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம
47.ஓம் ஞான வைராக்யதாய நம
48.ஓம் ப்ரேமப்ரதாய நம
49.ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம
50.ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம
51.ஓம் கர்மத்வம்சினே நம
52.ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம
53.ஓம் குணாதீத குணாத்மனே நம
54.ஓம் அனந்த கல்யாண குணாய நம
55.ஓம் அமித பராக்ரமாய நம
56.ஓம் ஜயினே நம
57.ஓம் துர்தர்ஷா-க்ஷõப்யாய நம
58.ஓம் அபராஜிதாய நம
59.ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம
60.ஓம் அசக்யராஹிதாய நம
61.ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம
62.ஓம் ஸுருபஸுந்தராய நம
63.ஓம் ஸுலோசனாய நம
64.ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம
65.ஓம் அரூபாவ்யக்தாய நம
66.ஓம் அசிந்த்யாய நம
67.ஓம் ஸூக்ஷ்மாய நம
68.ஓம் ஸர்வாந்தர்யாமினே நம
69.ஓம் மனோவாக தீதாய நம
70.ஓம் ப்ரேமமூர்த்தயே நம
71.ஓம் ஸுலபதுர்லபாய நம
72.ஓம் அஸஹாய ஸஹாயாய நம
73.ஓம் அநாதநாத தீனபந்தவே நம
74.ஓம் ஸர்வ பாரப்ருதே நம
75.ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம
76.ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம
77.ஓம் தீர்த்தாய நம
78.ஓம் வாஸுதேவாய நம
79.ஓம் ஸதாம் கதயே நம
80.ஓம் ஸத்பராயணாய நம
81.ஓம் லோகநாதாய நம
82.ஓம் பாவனானகாய நம
83.ஓம் அம்ருதாம்சவே நம
84.ஓம் பாஸ்கரப்ரபாய நம
85.ஓம் ப்ருஹ்மசர்யதப- சர்யாதிஸுவ்ரதாய நம
86.ஓம் சத்ய தர்ம பராயணாய நம
87.ஓம் ஸித்தேச்வராய நம
88.ஓம் ஸித்த ஸங்கல்பாய நம
89.ஓம் யோகேச்வராய நம
90.ஓம் பகவதே நம
91.ஓம் பக்தவத்ஸலாய நம
92.ஓம் ஸத்புருஷாய நம
93.ஓம் புரு÷ஷாத்தமாய நம
94.ஓம் ஸத்ய தத்வபோதகாய நம
95.ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம
96.ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம
97.ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம
98.ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம
99.ஓம் வேங்கடேசரமணாய நம
100.ஓம் அத்புதானந்தசர்யாய நம
101.ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம
102.ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம
103.ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம
104.ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம
105.ஓம் ஸர்வமங்களகராய நம
106.ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம
107.ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம
108.ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம

ஶ்ரீ வெற்றி சாய்பாபா மங்களம் மங்களம் மங்களம்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when SRI VETRI SAI BABA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SRI VETRI SAI BABA:

Share