10/11/2025
#கி_ஆ_பெ_விசுவநாதம்
1. கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை நவம்பர் 10, 1899 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார்.
2. தலைசிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக, சிந்தனையாளராக, கற்றாய்ந்த தமிழ் அறிஞராக, அரசியல்வாதியாக, பத்திரிக்கையாளராக இருந்தவர்.
3. இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008-ல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
4. 1956 ஆம் ஆண்டு "முத்தமிழ்க் காவலர்" என்னும் பட்டத்தை, அன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.எம்.நாராயணசாமியால் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
5. 1965 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் "சித்த மருத்துவ சிகாமணி" விருது வழங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் "வள்ளுவ வேல்" என்னும் விருது வழங்கியது.
#சான்றோர்தினம் #இந்துமுன்னணி